Home /News /lifestyle /

மன அழுத்தம் குறைக்கும் பெண்கள் நட்பு: புதிய ஆய்வின் அதிகாரப்பூர்வமான தகவல்!

மன அழுத்தம் குறைக்கும் பெண்கள் நட்பு: புதிய ஆய்வின் அதிகாரப்பூர்வமான தகவல்!

மாதிரி படம்

மாதிரி படம்

ஒருவரோடு ஒருவர் தொடர்பில் இருப்பது, நண்பர்களுடனான தெளிவான உரையாடல், போன்றவை பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண பெரிதும் உதவி செய்து வந்துள்ளது.

“நண்பர்கள் எதற்காக?” என்ற தலைப்பில் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒருங்கிணைந்து ஒரு பிரச்னைக்கு தேர்வு காணும் போது, இளம் மற்றும் வயதான பெண்களிடையே இருக்கும் நட்பு, எப்படி ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்வதை மேம்படுத்துகிறது என்பது பற்றியும், எவ்வாறு கார்டிசால் விளைவைக் குறைக்கிறது என்பதைப் பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஒருவரோடு ஒருவர் தொடர்பில் இருப்பது, நண்பர்களுடனான தெளிவான உரையாடல், போன்றவை பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண பெரிதும் உதவி செய்து வந்துள்ளது. இது தவறான புரிதலை சரி செய்வதோடு மட்டுமில்லாமல், உங்கள் நிலைப்பாட்டை விளக்கவும் அனுமதிக்கிறது. நட்பைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம். பெரும்பாலான நேரத்தில், வருத்தமாக அல்லது வெறுமையாக உணரும் தருணங்களில் கைகொடுப்பது நண்பர்களோடு உரையாடுவது மட்டும் தான். சில நேரங்களில், உங்கள் நண்பர்களோடு சாட் செய்வது, நீங்களே எதிர்பார்க்காதபடி, உங்களுக்கு புத்துணர்ச்சியூட்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெண்கள் தங்கள் தோழிகளோடு கொண்டுள்ள நட்பு அவர்களுக்கு பல வகையில் உதவி செய்கின்றது. தங்கள் தோழிகளோடு உரையாடும், பிரச்சனைகளைப் பகிர்ந்து கொள்ளும், தொடர்பில் இருக்கும் பெண்களுக்கு வாழ்நாள் முழுவதும் மன அழுத்தம் உண்டாக்கும் ஹார்மோன்கள் குறைந்த அளவிலேயே காணப்படுகின்றன என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

சமீபத்தில், இல்லினாயிஸ் அர்பானா-சாம்பெய்ன் பல்கலைக்கழகத்தில் உள்ள பெக்மான் இன்ஸ்டிடியூட்டின் மேம்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வில் மேல்கூறியவற்றை கண்டறிந்துள்ளனர்.

இந்த ஆய்வு, ‘நண்பர்கள் எதற்காக’ என்ற தலைப்பில் ஜர்னல் ஆஃப் விமன் அண்ட் ஏஜிங் என்ற பத்திரிக்கையில் சமீபத்தில் வெளியானது. பெண்கள், தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு, தங்கள் நண்பர்களோடு ஒருங்கிணைந்து தீர்வு காணும் போது அல்லது பகிர்ந்து கொல்லும் போது, இளம் மற்றும் வயதான பெண்களிடையே இருக்கும் நட்பு, எப்படி ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்வதை மேம்படுத்துகிறது என்பது பற்றியும், எவ்வாறு (மன அழுத்தம் உண்டாக்கும் ஹார்மோன்) கார்டிசால் விளைவைக் குறைக்கிறது என்பதைப் பற்றியும் விவரித்துள்ளது.

பல்வேறு வயது குழுக்களைச் சேர்ந்த நண்பர்கள் எப்படி தொடர்பு கொள்கிறார்கள், என்ன முறையில் உரையாடுகிறார்கள் போன்றவற்றில் உள்ள முக்கிய வேறுபாடுகளை இந்த ஆய்வு முன்னிலைப்படுத்துகிறது. இதனுடன், காலம் கடந்து நிற்கும் முக்கியமான உரையாடல் ரீதியான கூறு ஒன்றும் வெளிப்பட்டது – நட்பு. குறிப்பாக, இரண்டு பெண்களுக்கிடையே இருக்கும் அழகான நட்பின் பிணைப்பும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.இந்த ஆய்வின் தலைவர்களாக, முன்னாள் பெக்மான் இன்ஸ்டிடியூட் போஸ்ட் டாக்டோரல் ஆராய்ச்சியாளர்களான மிட்செல் ரெட்ரிகஸ் மற்றும் சை ஆன் யூன் ஆகியோர் வழிநடத்தினர். அவர்கள் இருவரின் வழிகாட்டுதல் படி, ஒரு பல்துறை ஒருங்கிணைவுக் குழு உருவாக்கப்பட்டு, உரையாடலில் ஈடுபடுவோரின் வயதும், ஒருவருக்கு ஒருவர் எந்த அளவுக்கு பரிச்சயம் உள்ளது என்பதும், உரையாடலை எப்படி பாதிக்கிறது என்று ஆய்வு செய்யப்பட்டது.

உரையாடல்களின் ஒட்டுமொத்த தாக்கமும், மன அழுத்த விளைவும் மதிப்பாய்வு செய்யப்பட்டு, முடிவுகள் உருவாக்கப்பட்டன. பெண்களை முன்னிலைப்படுத்தி நடத்தப்பட்ட இந்த ஆய்வு இரண்டு கருதுகோள்களின் அடிப்படையில் உள்ளது. முதலாவது, tend-and-befriend எனப்படும், ஒருவரை கவனித்து, நட்பாக ஏற்பது என்ற கருதுகோள் அடிப்படையிலானது. இரண்டாவது, சமூக உணர்வு ரீதியாக தேர்ந்தெடுக்கும் அடிப்படையிலானது.முதலில் குறிப்பிட்டுள்ள கருதுகோள், பாரம்பரியமாக ஆணுக்குரிய, “சண்டையிடு அல்லது சமாதானமாகிவிடு” என்ற இருவகை பகுத்தலுக்கு சவால் விடுக்கும் வகையில் இருக்கிறது. அதே நேரத்தில், இரண்டாவது கருதுகோள், மனிதர்களாக, தங்கள் வயது அதிகரிக்கும் போது, சமூக ‘சீரமைப்பு’ என்ற தேர்வை முன்வைத்து, உயர்-தர நட்பு வட்டத்தை நாடுகிறார்கள் என்ற வகையில் உள்ளது.

பெண்கள் மன அழுத்தத்தை எதிர்கொள்வதற்கு, ஒரு ‘மாற்று வழிமுறையை’ உருவாக்கியுள்ளனர் என்று ரிட்ரிக்ஸ் விளக்கினார். அவரைப் பொறுத்தவரை, மன அழுத்தத்தை சமாளிக்க, பெண்கள் தங்கள் தோழிகளுடன் நட்பு கொள்ளலாம். மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு கோட்பாடுகளும் பல்துறைக் குழுவால் ஒன்றிணைக்கப்பட்டன. அச்சமயத்தில், பெண்களின் ஆயுட்காலம் முழுவதும் தோன்றக்கூடிய மேலும் ஒரு கேள்வி எழுந்தது.

நட்பு கொள்வது மற்றும் சமூக ரீதியாக பொருத்தமாக இருப்பவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட நட்பு எவ்வாறு அவர்களின் தகவல்தொடர்புகளில் பிரதிபலிக்கின்றன?

இந்த ஆய்வில், 16 வயது முதிர்ந்த பெண்கள் (62 வயது முதல் 79 வயது வரை) மற்றும் 16 இளம் பெண்கள் (18 வயது முதல் – 25 வயது வரை) பங்கேற்றார்கள். ஒவ்வொரு பங்கேற்பாளரும், ஒரு தோழி அல்லது ஒரு அந்நியருடன் ஜோடியாக இணைக்கப்பட்டார். ஜோடிகளாக கட்டமைக்கப்பட்ட இந்த அமைப்பில் பங்கேற்ற பெண்கள், இரண்டு தனி நபர்களாக, பல்வேறு விதமான உரையாடல் ரீதியான சவால்களை எதிர்கொண்டார்கள்.வயதான பெண்கள் ஜோடிகளுடன் ஒப்பிட்ட போது, இளம் பெண்களின் ஜோடி, தங்களுக்கு ஏற்கனவே பரிச்சயமான இணையுடன் சிறந்த முறையில் உரையாடி உள்ளனர் என்பது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பரிச்சயமானவர்கள் என்றால், இளம் பெண்கள் ஜோடிகளுக்கிடையே சிறப்பான தகவல் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Also read... உங்கள் நண்பர்கள் போலியாக பழகுகிறார்களா..? கண்டறிய இந்த நடவடிக்கைகளை கவனியுங்கள்..!

லேசான அதிர்ச்சியூட்டும் முடிவாக, பரிச்சயம் இல்லாதவர்களிடம், இளம் பெண்கள் ஜோடி அத்தனை சிறப்பாக உரையாட முடியவில்லை என்று இந்த ஆய்வு தெரிவிக்கின்றது. ஆனால், பரிச்சயம் இல்லாத நிலையில், வயதான பெண்கள் ஜோடி லாவகமாக தங்கள் அனுபவம் மற்றும் திறமையின் மூலம் சிறப்பான உரையாடல்களை வெளிப்படுத்தியுள்ளனர் என்பதையும் ஆய்வு பதிவு செய்துள்ளது.

இளம் பெண்கள் பரிச்சயம் இல்லாதவர்களோடு உரையாடுவதில் தயக்கம் காட்டுகிறார்கள் என்பதையும், வயது முதிர்ந்த பெண்களுக்கு, பரிச்சயம் இல்லாதவர்களோடும் உரையாடல் மேற்கொள்வது மிகவும் சுபலமாக இருந்ததையும் இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது. இந்த ஆய்வு பல்வேறு கோணத்தில் நடத்தப்பட்டு, பல்வேறு தாக்கங்கள் கண்டறியப்பட்டன. அவற்றில் முக்கியமானது, நட்பு! வாழ்நாள் முழுவதும், நட்பு ஒரே மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பரிச்சயமான, நன்கு பழக்கமான நண்பர்களும், அவர்களின் நட்பும் மன அழுத்தத்தை வெகுவாகக் குறைக்கிறது என்றும், காலம் கடந்தும் நட்பு நீடிக்கிறது என்பதையும் ரிட்ரிகஸ் தெரிவித்தார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Friends, Girl Friend

அடுத்த செய்தி