Home /News /lifestyle /

ஒமைக்ரான் வேரியண்ட்.. மருந்துகளும் சிகிச்சைகளும் பயன் தருமா?

ஒமைக்ரான் வேரியண்ட்.. மருந்துகளும் சிகிச்சைகளும் பயன் தருமா?

காட்சி படம்

காட்சி படம்

Omicron Variant Treatment : கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமைக்ரான் வேரியண்ட் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது.

கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக மக்களை அச்சுறுத்தி வந்த கொரானா வைரஸ் தாக்கம் ஓரளவு குறைந்துள்ள நிலையில், மீண்டும் ஒரு புதிய வேரியன்ட் மக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனா மூன்றாவது அலை ஏற்படாது என்ற நம்பிக்கை இப்போது கிட்டத்தட்ட இல்லை என்றே கூறலாம். ஒமைக்ரான் வேரியன்ட் கிட்டத்தட்ட 57 நாடுகளில் பரவியுள்ளது.

அது மட்டுமின்றி, மற்ற கொரோனா வைரஸ் வேரியன்ட்களை விட, இது அதிகமாக பரவக்கூடியது மற்றும் தீவிரமான அறிகுறிகளை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது என்றும் மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களுக்கும், கோவிட் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று மீண்டு வந்தவர்களுக்கும் கூட பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

கோவிட் வைரஸ் தொற்று பாதித்தவர்களுக்கு அளிக்கப்பட்ட எல்லா சிகிச்சைகள் முறைகளும், ஒமைக்ரான் பாதிப்பு அடைந்தவர்களுக்கு தீர்வாக அமையாது. ஒமைக்ரான் வைரஸுக்கு எவ்வகையான சிகிச்சைகளை மேற்கொண்டால் பலன் அளிக்கும் என்பதை பற்றிய மருந்து உற்பத்தியாளர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒமைக்ரான் வைரஸ் தொற்று ஏற்பட்டால் எந்த மருந்து வேலை செய்யும் என்பது பற்றிய பட்டியல் இங்கே.,

கிளாக்சோ ஸ்மித்க்ளைன் பிஎல்சி நிறுவனத்தின் ஆன்டி-பாடி சிகிச்சை :

பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க எம்என்சியான கிளாக்சோ ஸ்மித்கிளைன் நிறுவனத்தின் சோட்ரோவிமாப், 37 வகை ஒமைக்ரான் வேரியன்ட்டை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது என்று ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது. இது நரம்பில் ஒரு முறை செலுத்தக்கூடிய ஊசியின் வடிவில் வருகிறது. FDA வால் அங்கீகரிக்கப்பட்ட இந்த சிகிச்சையை கோவிட் பாதிப்பு ஏற்பட்ட 10 நாட்களுக்குள் வழங்க வேண்டும். மேலும், இது 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே.

Pfizer பூஸ்டர் ஷாட் :

சமீபத்திய ஆய்வக சோதனையின் அடிப்படையில், மறுத்து உற்பத்தியாளரான BioNTech மற்றும் Pfizer நிறுவனம், தங்களின் மூன்று டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொள்வது, ஒமைக்ரான் வேரியண்ட்டை நியூட்ரலைஸ் செய்யும் என்று தெரிவித்துள்ளது.

இரண்டு டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வது கொரோனா தாக்குதலின் வீரியத்தைக் கட்டுப்படுத்தும் என்றும், மூன்றாவது டோஸ் செலுத்திக் கொண்டால் பாதிப்பு ஏற்படுத்தாதவாறு நியூட்ரலைஸ் ஆகும் என்றும் நிறுவன அதிகாரி தெரிவித்தார். ஒமைக்ரான் பாதிப்பைக் குறைக்கும் பூஸ்டர் ஷாட் வரும் மார்ச் மாதம் நிறுவனத்தால் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

also read : தொப்பை கொழுப்பை குறைக்க இந்த 5 விஷயங்களை செய்தாலே போதும்..!

இந்தியாவின் கோவிட் தடுப்பூசிகள் ஒமைக்ரான் வேரியண்ட்டை எதிர்த்து போராடுமா?

கோவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளை முதல் முதல் கண்டறிந்தது இந்தியா தான். கோவிட்ஷீல்டு, கோவேக்சின் மற்றும் சைகோவ்-டி என்ற மூன்று இந்திய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. ஆனால், இவை ஒமைக்ரான் பாதிப்பை எதிர்த்து போராடும் அளவுக்கு சக்தி வாய்ந்த தடுப்பூசியாக செயல்படுமா என்பது உறுதியாக கூறப்படவில்லை. இந்த புதிய வேரியண்ட் உடலில் எவ்வகையான தாக்குதலை ஏற்படுத்தக்கூடும் என்ற முழுமையான தகவல் கிடைத்தால் தான், மருந்துகள் எவ்வளவு பயனளிக்கும் என்பதைக் கண்டறிய முடியும்.

பாரத் பயோடெக் நிறுவன மூத்த அதிகாரி ஒருவர் கோவேக்சின் ஒமைக்ரானுக்கு எதிராக செயல்படும் சாத்தியமுள்ளது என்று தெரிவித்தார்.

ஒமைக்ரான் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பது எப்படி?

கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பு முறையை மேற்கொண்டது போலவே, இப்போதும் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்வது உங்களை மட்டுமல்ல, உங்கள் குடும்பம் மற்றும் உங்கள் சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்களையும் பாதுகாக்கும். சுகாதார நடைமுறைகள், சமூக விலகல் மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது ஆகிய வழிமுறைகளை பின்பற்றலாம்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Corona, Omicron

அடுத்த செய்தி