Home /News /lifestyle /

முதுமை காலத்துக்கான திட்டம்: இந்தியாவில் முதுமையில் சுதந்திரமாக செயல்படுவது சாத்தியமா!

முதுமை காலத்துக்கான திட்டம்: இந்தியாவில் முதுமையில் சுதந்திரமாக செயல்படுவது சாத்தியமா!

காட்சி படம்

காட்சி படம்

சுதந்திரமாக இருப்பதற்கு, முதுமை காலத்தை அழகாக வாழ்வதற்கு இரண்டு விஷயங்கள் தேவை.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, வயதான பின்பு தங்களின் எதிர்காலத்துக்கான சேமிப்பு, முதலீடு என்பது பற்றியெல்லாம் பெரிதாகக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால், பெரும்பாலான குடும்பங்களில் ஒரே குழந்தை, நியூக்ளியர் குடும்பம், வேறு மாநிலம், வெளிநாடு வேலை என்று மாறி வரும் சூழலில் முதியவர்கள் தங்களைத் தாங்களே பார்த்துக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

மேற்கத்திய நாடுகளில் இருப்பது போல, ஓய்வு பெற்ற பின்பு, சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற சூழல் இந்தியாவில் வருமா என்பது கேள்விக்குறியாக இருக்கறது.

ரிட்டையர்மென்ட் திட்டம் என்றாலே சொந்த வீடு தான் :

இந்தியாவைப் பொருத்தவரை, முதுமை என்பது வித்தியாசமாக இருக்கிறது. முதுமையில் சுதந்திரம் என்பது இன்னும் புதிது தான். வெளிநாடுகளில், வழிகாட்டியாக, செஃப்பாக, ஆர்டிஸ்ட்டாக, இசை கலைஞராக என்று முதியவர்கள் விருப்பம் போல வாழ்கின்றனர். நம் நாட்டில், எவ்வளவு வருமானம் ஈட்டினாலும், போதவில்லை என்பதால், வயதான பின்பு இந்த ரிஸ்க் எடுக்க வேண்டுமா என்று எதிர்காலத்துக்கான முதலீடு அல்லது சேமிப்பில் ஈடுபட பலருக்கும் விருப்பம் உள்ளது. பெரும்பாலும், சொந்தமாக கடன் இல்லாத ஒரு வீடு இருந்தால் போதும் என்ற நினைப்பில் உள்ளனர். அதுவே ரிட்டையர்மென்ட்டுக்கு போதுமானது என்று நினைக்கின்றனர்.

பிள்ளைகளே நேரடியாக கவனிக்க வேண்டும் :

மேலும், ரிட்டையர்மென்ட் திட்டம் என்றாலே, இங்கு நாற்பதுகளில், ஐம்பதுகளில் இருப்பவர்கள் பயப்படத் தொடங்கி விடுகிறார்கள். அது மட்டுமின்றி, முதுமைக்காலம் என்றாலே, முதியோர் இல்லங்கள் தான் பலருக்கும் நினைவில் வருகிறது. பெரியவர்களை பிள்ளைகள் தனியே விட்டு விடுகிறார்கள் என்று குற்றச்சாட்டு இந்தியாவில் நிலவுகிறது.சூழ்நிலைக் காரணமாக, எல்லா வசதிகளும் இருக்கும் முதியோர் காப்பகங்களில் பணம் கட்டி பெற்றோரை பார்த்துக் கொள்ளச் செய்தாலும். குற்றஉணர்வு ஏற்படாமல் இருப்பதில்லை. பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், தங்கள் வேலை, வணிகம் மற்றும் தொழிலை மாற்றியமைக்க வேண்டும் என்று சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள்.

also read : இந்த தினசரி பழக்கங்கள் வயதான காலத்தில் டிமென்ஷியாவுக்கு வழிவகுக்கும்!

இதனால் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். மாறி வரும் உலகுக்கு ஏற்ப நாமும் மாற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கூட்டு குடும்ப அமைப்பு உடைந்து அதில் மிகப்பெரிய மாற்றம். முதுமை அடைந்த பிறகு நியூக்ளியர் குடும்பமாக இணைந்து வாழும் நிலையை வரவேற்க வேண்டும். ஆனால், அந்த இடத்தில், முதியவர்கள், தங்களின் பிள்ளைகள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.விதிவிலக்காக சில முதியவர்கள் :

மேற்கத்திய நாடுகளைப் போலவே, சுதந்திரமாக வாழும் சில பெற்றோர்கள் உள்ளனர். ஆனால், அவர்களும், வேறு உறவினர்களால் அல்லது ஊதியம் பெறும் பணியாளர்களின் உதவியுடன் தான் செயல்படுகிறார்கள். அன்றாட வேலைகள் முதலே, எல்லாவற்றுக்கும் மற்றவர்களைச் சார்ந்து இருக்கிறார்கள்.

also read : பெரும்பாலான மனிதர்கள் ஏன் 80 வயதிற்குள் இறக்கிறார்கள் - ரகசியத்தை கண்டறிந்த நிபுணர்கள்!
ஆனால், தங்கள் பிள்ளைகளை சார்ந்து இல்லை என்று கூறுவார்கள். இவர்களும் தன்னிச்சையாக இயங்க முடியாது.
முதுமையை அழகாக திட்டமிடுவது எப்படி?

சுதந்திரமாக இருப்பதற்கு, முதுமை காலத்தை அழகாக வாழ்வதற்கு இரண்டு விஷயங்கள் தேவை: பணம் மற்றும் ஆரோக்கியம். இந்த இரண்டிற்கும் நீங்கள் நன்றாகத் திட்டமிட வேண்டும். ஏற்கனவே கூறியது போல, பணி ஓய்வு பெற்றதும் சொந்த வீடு இருந்தால் போதும் என்பது தவறான முடிவு. வீடு என்பதை கடந்து, உங்கள் முதுமை காலத்தை எப்படி செலவழிக்க போகிறீர்கள், என்ன எதிர்பார்க்கிறீர்கள், குறிக்கோள், எவ்வளவு சேமிக்க முடியும் என்பதன் அடிப்படையில் திட்டமிடலாம்.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Parents

அடுத்த செய்தி