International Women’s Day 2021: சர்வதேச மகளிர் தினம் ஏன் மார்ச் 8-இல் கொண்டாடப்படுகிறது? இதற்கு யார் காரணம் தெரியுமா.?

International Women’s Day 2021: சர்வதேச மகளிர் தினம் ஏன் மார்ச் 8-இல் கொண்டாடப்படுகிறது? இதற்கு யார் காரணம் தெரியுமா.?

மகளிர் தினம் சுமார் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பல நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் பலர் இதை ஒரு பெண்ணிய காரணம் என்று நினைக்கும் அதே வேளையில், அதன் வேர்கள் தொழிலாளர் இயக்கத்தில் உள்ளன.

மகளிர் தினம் சுமார் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பல நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் பலர் இதை ஒரு பெண்ணிய காரணம் என்று நினைக்கும் அதே வேளையில், அதன் வேர்கள் தொழிலாளர் இயக்கத்தில் உள்ளன.

  • Share this:
மார்ச் 8-ஆம் தேதியான இன்று உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நள்ளிரவிவு முதலே சமூக வலைதளங்களில் மகளிர் தினம் தொடர்பான பதிவுகளும், வீடியோக்களும் நிரம்பி வழிகின்றன.

உலகில் இணையம் பயன்படுத்தும் பெரும்பாலானவர்களின் வாட்ஸஅப் மற்றும் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்களை மகளிர் தினம் தொடர்பான வாழ்த்து செய்திகள், கருத்துக்கள், வீடியோக்கள் அலங்கரிக்கின்றன. இப்படி நாம் மகளிரை போற்றி வரும் இந்த நேரத்தில், அவர்களுக்கென்றே பிரத்யேகமாக கொண்டாடப்படும் நாளான இந்த மகளிர் தினம் ஒரு போராட்டத்தில் துவங்கி இன்று கொண்டாட்டமாக உருமாறி இருப்பதை பற்றிய வரலாற்று செய்திகளை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

சவாலை தேர்வு செய்யுங்கள் என்ற கருப்பொருளை கொண்டு இந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆம் என்றுமே பெண்களின் உலகம் மிகுந்த சவாலானதாகவே இருந்து வருகிறது. என்ன தான் ஆண்களுக்கு நிகராக பெண்கள் பல துறைகளில் வானுயர சாதித்தாலும், இந்த 21-ம் நூற்றாண்டிலும் கூட பெண்ணடிமைத்தனம் என்பது வீடு, அலுவலகம் என பல இடங்களில் தொடர்ந்து வருவது வருத்தத்திற்குரியதே.வரலாறு மற்றும் முக்கியத்துவம்:

நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று பல துறைகளில் பெண்கள் சாதித்து காட்டியுள்ள இந்த நூற்றாண்டிலேயே இப்படி என்றால், 17-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பெண்களின் நிலை உலகம் முழுவதும் எப்படி இருந்திருக்கும் என்று எண்ணி பாருங்கள். 1789-ல் நடைபெற்ற பிரெஞ்சுப் புரட்சியின் போது சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதிநித்துவம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பெண்களும் போர்க்கொடி தூக்கினர். கலவரங்களுக்கு மத்தியில் பெண்ணுரிமை போராட்டம் ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியது.

இறுதியில் பிரான்சில் 1848 ஆம் ஆண்டு மார்ச் 8 அன்று பெண்கள் அரசவை ஆலோசனை குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தரப்பட்டது. இந்த நாளையே பின்னாளில் மகளிர் தினமாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுவதுண்டு.மகளிர் தினம் சுமார் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பல நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் பலர் இதை ஒரு பெண்ணிய காரணம் என்று நினைக்கும் அதே வேளையில், அதன் வேர்கள் தொழிலாளர் இயக்கத்தில் உள்ளன. இது முதன்முதலில் 1911 ஆம் ஆண்டில் ஜெர்மனியைச் சேர்ந்த கிளாரா ஜெட்கின் மார்க்சிஸ்டால் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் பலர் இந்த நாளை கொண்டாட ஒரு பெண்ணிய காரணம் உள்ளதாக நினைக்கும் அதே வேளையில், இதற்கான வேர்கள் தொழிலாளர் இயக்கத்திலிருந்து வந்தது என்பதே வரலாறு.

காரணம் யார்.?

1975-ம் ஆண்டுதான் சர்வதேசப் பெண்கள் தினத்தை ஐ.நா அங்கீகரித்தது என்றாலும் சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்தே இந்த நாள் பெண்களுக்கு முக்கிய நாளாக உலகின் பல பகுதிகளில் இருந்து வருகிறது. மகளிர் தினம் முதன்முதலில் 1911-ல் ஜெர்மனியைச் சேர்ந்த கிளாரா ஜெட்கின் என்பவரால் மகளிர் தினம் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஜெர்மனியில் 1857-ல் பிறந் இவர் ஒரு ஆசிரியராகப் பயிற்சி பெற்றார். மேலும் இன்று ஜெர்மனின் 2 முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான சமூக ஜனநாயகக் கட்சியுடன் தொடர்புடையவர். தொழிலாளர் இயக்கம் மற்றும் பெண்கள் இயக்கம் இரண்டிலுமே பங்கு வகித்தார். ஜெர்மன் தலைவர் ஓட்டோ வான் பிஸ்மார்க் சோசலிச எதிர்ப்பு சட்டங்களை அமல்படுத்திய போது கடும்எதிர்ப்பு தெரிவித்த ஜெட்கின் சுயமாக நாடுகடத்தப்பட்டார்.பின்னர் பெண்ணியம் தொடர்பான இலக்கியங்களை எழுதி வெளியிட்டார். முன்னணி சோசலிஸ்டுகளுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார். சோசலிஸ்ட் இன்டர்நேஷனல் உருவாவதிலும் ஜெட்கின் பங்கு வகித்தார். ஜெர்மனிக்குத் திரும்பிய அவர் பெண்களுக்கான SPD-ன் செய்தித்தாளுக்கு ஆசிரியராக 15 வருடங்கள் இருந்தார். இதனிடையே 1910-ல் சர்வதேச சோசலிச மகளிர் காங்கிரஸின் இணை நிறுவனரான பின் நடந்த மாநாட்டில் உலகளவில் மகளிர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இந்த மாநாட்டில் பங்கேற்ற 17 நாடுகளைச் சேர்ந்த பெண்கள், தொழிற்சங்கங்கள், சோசலிச கட்சிகள், உழைக்கும் பெண்கள் கிளப் மற்றும் பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக அவரது இந்த ஆலோசனையை ஏற்றனர். இதனை தொடர்ந்து மகளிர் தினம் முதன்முறையாக 1911-ல் மார்ச் இறுதியில் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதை அடிப்டையாக வைத்தே கடந்த 2011-ம் ஆண்டு 100-வது சர்வதேசப் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது.சர்வதேச மகளிர் தின கோரிக்கைக்கு பின்னணியாக அமெரிக்காவின் நியூயார்க்கில் 1908-ம் ஆண்டு மார்ச் 8 அன்று வேலை நேர குறைப்பு, நியாயமான கூலி, வாக்குரிமை உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக நடைபெற்ற பேரணியும் காரணம். ஏனெனில் மார்ச் 8-ம் தேதியை அடுத்த ஆண்டே தேசிய பெண்கள் தினமாக அறிவித்தது அமெரிக்க சோஷியலிஸ்ட் கட்சி. இதனை அடுத்து ஜெட்கினின் யோசனையை அடுத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1913 ஆம் ஆண்டில், சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8-ம் தேதியக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 
Published by:Sivaranjani E
First published: