International Widows Day : சர்வதேச கைம்பெண்கள் தினம் - கருப்பு வெள்ளை உடைபடுவது எப்போது?

உலக கைம்பெண்கள் நாள்

சடங்கு, சம்பரதாயங்கள் என மற்றப் பெண்களைப் போல் நல்ல உடைகூட உடுத்துவதற்கு அனுமதிக்கப்படாமல் கட்டுப்படுத்தப்படுகிறாள்

  • Share this:
உலக கைம்பெண்கள் நாள் ஆண்டுதோறும் ஜூலை 23ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. பாலின சமத்துவம் மற்றும் விழிப்புணர்வு குறித்து உரக்கப் பேசும் இந்த சமூகத்தில் இருக்கும் கைம்பெண்களின் நிலை இன்னும் இருள் சூழ்ந்ததாகவே இருக்கிறது. கணவனை இழந்தவுடன் உட்சபட்ச ஒடுக்கு முறைகளுக்கு உள்ளாகின்றனர்.

பொதுவெளியில் சுதந்திரமாக நடமாட முடியாது. சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாது. நிதி சார்ந்த அனைத்து தேவைகளையும் கணவன் மட்டுமே எதிர்பார்த்து வந்த அந்தப் பெண், அவர் இறந்த அடுத்தநொடியில் தனித்து விடப்படுகிறாள்.

சடங்கு, சம்பரதாயங்கள் என மற்றப் பெண்களைப் போல் நல்ல உடைகூட உடுத்துவதற்கு அனுமதிக்கப்படாமல் கட்டுப்படுத்தப்படுகிறாள். சில இடங்களில் இன்னும் கொடுமையின் உட்சபட்சமாக கணவன் இறந்ததற்கு அந்த பெண்ணையே குற்றம்சாட்டி வார்த்தைகளால் தீயைவிட அதிகமாக சுடுகின்றனர். கணவருக்கான சொத்துகளை அனுபவிக்கவிடாமல் துரத்தியடிக்கப்படுகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சி கற்பனைக்கு எட்டாத வகையில் வளர்திருக்கும் இந்த காலத்திலும், கைம் பெண்களின் நிலை பெரிய அளவிலான மாற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை.

ALSO READ | பெண்களை எளிதாக தாக்கும் இதய நோய்! ஆய்வு சொல்வது; செய்ய வேண்டியதும்!

அவர்கள் விரும்பிய வாழ்க்கையை தேர்தெடுக்கவிடாத சமூகம், இப்படி தான் இருக்க வேண்டும் என்று நிர்பந்தித்துக் கொண்டே இருக்கிறது. இதுபோன்ற பழமைவாத எண்ணங்கள் சாதிபேதமின்றி அனைத்து சமூகங்களிலும் இருக்கிறது. ஐ.நாவின் அறிக்கைப்படி, இன்றைய சூழலில் 258 மில்லியன் கைம்பெண்கள் உலகம் முழுவதும் வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவர்களுக்கான உரிமைகள், சமூக முக்கியத்துவத்தை பெற்றுத் தரும் நோக்கில் ஆண்டுதோறும் கைம்பெண்கள் நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு Invisible women &Invisble problems என்ற கருப்பொருளில் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.

கணவனை இழந்த அவர்கள் சமூகத்தில் முக்கியத்துவத்தை இழந்து மறைக்கப்பட்டவர்களாக மாறிவிடுவதாகவும், அவர்களுக்ககான உதவியை செய்ய யாரும் முன்வருவதில்லை எனவும் தெரிவிக்கின்றனர். அதுவும் குழந்தைகளுடன் இருக்கும் பெண்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாக மாறிவிடுகிறது. இந்தியா போன்ற நாடுகளில் கைம்பெண்களாக இருப்பவர்களில் சிலர் மறுமணம் செய்து கொண்டாலும், பெரும்பான்மையான பெண்கள் மறுமணம் குறித்து சிந்தப்பதுகூட இல்லை என ஆய்வுகள் கூறுகின்றன.

ALSO READ | மனச்சோர்வு எதனால் ஏற்படுகிறது? அறிகுறிகள் மற்றும் காரணங்கள் என்ன..?

பல்வேறு நாடுகளில் பழமைவாத எண்ணங்கள் புரையோடி இருக்கும் சமூகத்தில் கணவனை இழந்த பெண்கள், சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது என்ற கட்டளை 21ம் நூற்றாண்டிலும் நடைமுறையில் இருக்கிறது. இத்தகைய கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் அவர்களின் வாழ்க்கையை பிரகாசமாக்கும் முயற்சியாக கைம்பெண்கள் நாளில் அவர்களுக்கு தேவையான வேலை வாய்ப்பு, உதவி, சமூக முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது. கணவனை இழந்து விட்ட பெண்கள், தீண்டத்தகாதவர்கள் அல்ல, அவர்களுக்கும் மனமும், மனிதமும் இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். அவர்களின் உரிமைகளுக்கு சமூகத்தில் இருப்பவர்கள் அனைவரும் உரத்து குரல் கொடுக்க வேண்டும் என இந்நாள் வலியுறுத்துகிறது. கைம்பெண்களுக்கு கல்வி, உதவித்தொகை கிடைக்க வலி செய்வதுடன், கணவரின் சொத்தில் கைம்பெண்ணுக்கும், குழந்தைக்கும் முழு உரிமை கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

ALSO READ | இரவில் நிம்மதியான தூக்கமில்லாமல் அவதிப்படுகிறீர்களா..?

ஏற்கனவே இருக்கும் கைம்பெண்களுக்கான பழமை எண்ணங்களை உடைத்தெறியப்பட வேண்டும். உடையில் அவர்களுக்கு முழு சுதந்திரம் வேண்டும். அவரவர் எண்ணங்களில் மாற்றம் ஏற்பட்டாலே கைம் பெண்களுள் மீது திணிக்கப்பட்டிருக்கும் கருப்பு, வெள்ளை கட்டுபாடுகளை உடைந்து முழு சுதந்திரம் கிடைத்துவிடும்.
Published by:Sankaravadivoo G
First published: