சர்வதேச அருங்காட்சியக தினத்தின் முக்கியத்துவம் மற்றும் வரலாறு!

சர்வதேச அருங்காட்சியக தினம்

அருங்காட்சியகங்களின் பங்கு மற்றும் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டே சர்வதேச அருங்காட்சியக தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஒவ்வொரு ஆண்டும் மே 18 அன்று சர்வதேச அருங்காட்சியக தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நடப்பாண்டிற்கான சர்வதேச அருங்காட்சியக தினம் 2021 இன்று கொண்டாடபடுகிறது. உலகளாவிய அளவில் சமூக வளர்ச்சியில் அருங்காட்சியகங்களின் பங்கு மற்றும் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டே சர்வதேச அருங்காட்சியக தினம் 1977ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

முக்கியத்துவம்:

பொதுவாக அருங்காட்சியகங்கள் மனிதகுலத்தின் பாரம்பரியமாக கருதப்படுகின்றன. ஒரு நாடு மற்றும் சமூகத்தின் மரபுரிமைகளை பேணி பாதுகாத்து இளைய சமுதாயத்தினர் மற்றும் அடுத்தடுத்து வரும் சந்ததியினருக்கு அவர்கள் வாழும் சொந்த மண்ணின் சொந்த வரலாறு பற்றிய விழ்ப்புணர்வை தரும் அருங்காட்சியகங்கள் ஒரு தேசத்தின் விலை மதிக்க முடியாத சொத்துக்களாக கருதப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள தனி நபர்களிடையே "கலாச்சார பரிமாற்றம், கலாச்சாரங்களை வளப்படுத்துதல் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வு, ஒத்துழைப்பு மற்றும் அமைதி" ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கான முக்கியமான வழிமுறைகள் அருங்காட்சியகங்கள் தான் என்ற கருத்தை சர்வதேச அருங்காட்சியக தினம் எப்போதும் வலியுறுத்துகிறது.

சமூக வளர்ச்சியில் அருங்காட்சியகங்களின் பங்கு பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவததை நோக்கமாக கொண்டு நடத்தப்பட்டு வரும் சர்வதேச அருங்காட்சியக தினம் பல்வேறு நிகழ்வுகள், குறிக்கோளை எளிதாக்கும் வேடிக்கையான நடவடிக்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கி கொண்டாடப்பட்டு வருகிறது.

படிப்படியாக தொடர்ந்து பிரபலமடைந்த இந்த தின கொண்டாட்டத்தில், கடந்த 2009-ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் உள்ள சுமார் 20,000 அருங்காட்சியகங்கள் பங்கேற்றன. அந்த ஆண்டு 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. 2010ம் ஆண்டு சர்வதேச அருங்காட்சியக தின கொண்டாட்டத்தில் சுமார் 98 நாடுகள் பங்கேற்றன. தொடர்ந்து 2011ல் 100 நாடுகள் பங்கேற்றன. சர்வதேச அருங்காட்சியக தினம் 2011 போஸ்ர் 37 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது. 2012-ம் ஆண்டு சர்வதேச அருங்காட்சியக தின கொண்டாட்டத்தில் 129 நாடுகள் மற்றும் சுமார் 30,000 அருங்காட்சியகங்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Also read... Bynge App: எழுத்தாளர்களின் விறுவிறுப்பான தொடர்களை வாசிப்பதோடு, அவர்களுடன் விவாதிக்கலாம்!

சர்வதேச அருங்காட்சியக தினம் 2021 கருப்பொருள்:

ஆண்டு தோறும் கொண்டாடப்படும் சர்வதேச அருங்காட்சியக தினத்திதற்கான கருப்பொருள் ஒவ்வொரு ஆண்டும் இதன் ஆலோசனை குழுவால் தீர்மானிக்கப்படும். அதன்படி இந்த ஆண்டு சர்வதேச அருங்காட்சியக தினத்தின் கருப்பொருள் "அருங்காட்சியகங்களின் எதிர்காலம்: மீட்டெடுத்தல் மற்றும் மறுவடிவமைத்தல்" என்பதாகும். ஓராண்டுகளை கடந்தும் கொரோனா பேரிடர் ஓயாத தற்போதைய சூழ்நிலையில் சவால்களை தணிக்கும் நோக்கத்துடன், சர்வதேச அருங்காட்சியக தினம் 2021-ன் கருப்பொருள், எதிர்கால அருங்காட்சியகத்தை மறுபரிசீலனை செய்வதை (“The Future of Museums: Recover and Reimagine”) வலியுறுத்துகிறது.

இந்த கருப்பொருளை அடிப்படையாக வைத்து அருங்காட்சியக சமூகங்களைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள் மற்றும் அதே துறையில் பங்கு வகிக்கும் பிற தொடர்பு நபர்கள் எதிர்கால அருங்காட்சியகங்கள் குறித்து தங்களது கருத்துக்களையும், கலாச்சார நிறுவனங்களுக்கான புதிய வணிக மாதிரிகளையும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்கப்படுவார்கள். மேலும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக-பொருளாதார அபாயங்களை தீர்ப்பதற்கான தீர்வுகளைப் பற்றி விவாதிக்கப்பட உள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: