• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • பொருளாதார மந்தநிலையால் உலகளாவிய குழந்தை இறப்புகளில் 3-ல் ஒரு பங்கை பதிவு செய்த இந்தியா..

பொருளாதார மந்தநிலையால் உலகளாவிய குழந்தை இறப்புகளில் 3-ல் ஒரு பங்கை பதிவு செய்த இந்தியா..

காட்சி படம்

காட்சி படம்

தொற்று பேரிடரால் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக சுமார் 267,000 குழந்தைகள் இறப்பு சம்பவங்கள் பதிவாகி உள்ளது.

  • Share this:
கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக நீடிக்கும் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை மற்றும் வீழ்ச்சி காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் வழக்கத்திற்கு மாறாக அதிகப்படியான குழந்தைகள் இறப்பு சம்பவம் நிகழ்த்திருப்பது தெரிய வந்துள்ளது. தொற்று பேரிடரால் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக சுமார் 267,000 குழந்தைகள் இறப்பு சம்பவங்கள் பதிவாகி இருப்பதும். இதில் இந்தியா மட்டுமே 99,642 இறப்புகளைப் பதிவு செய்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎம்ஜே ஓபன் (BMJ Open) என்ற ஆன்லைன் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், கோவிட் -19 காரணமாக ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் 2020-ஆம் ஆண்டில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் கூடுதலாக 2,67,208 குழந்தை இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உலக வங்கி ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் நடத்தப்பட்ட இது தொடர்பான ஆய்வில், அதிகரித்த எண்ணிக்கையிலான குழந்தை இறப்புகள் தெற்காசியாவில் (8 நாடுகளில்) அதிகமாக காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தெற்காசிய நாடுகளில் மட்டுமே சுமார் 1,13,141 அதிகரித்த குழந்தை இறப்புகள் நிகழ்ந்துள்ளதாகவும், இதில் மூன்றில் ஒரு பங்கு இறப்பு சம்பவங்கள் அதாவது சுமார் 99,642 அதிகரித்த குழந்தை இறப்புகள் இந்தியாவில் நிகழ்ந்திருக்கலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

Also Read : கர்ப்பிணிகள் இஞ்சி சாப்பிடலாமா ? எப்போது..எப்படி..எந்த அளவில் சாப்பிட வேண்டும் ?

பிஎம்ஜே ஓபன் ஆன்லைன் இதழில் வெளியிடப்பட்ட இந்த மாடலிங் ஆய்வு, மேற்காணும் எண்ணிக்கை ஆண்டிற்கு எதிர்பார்த்ததை விட 7% அதிகம் என்று கூறியுள்ளது. இந்த ஆய்வு தொற்றுநோயால் மோசமடைந்த பொருளாதார வீழ்ச்சியின் போது பிறப்பு மற்றும் இறப்பு புள்ளிவிவரங்களையும் ஒப்பிடுகிறது. இந்தியாவில் 24,238,000-க்கும் அதிகமான வருடாந்திர பிறப்புக்கள் காணப்படும் அதே நேரத்தில் இது 2020-ஆம் ஆண்டிற்கான மைனஸ் 17.3% என்ற கணிசமான பெரிய பொருளாதார பற்றாக்குறையையும் கொண்டுள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.



உலக வங்கி ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, கொரோனா தொற்று நோய் பரவ துவங்கிய முதல் ஆண்டான 2020-ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரம் கிட்டத்தட்ட 5% சுருங்கி இருக்கலாம். இதன் விளைவாக பல்வேறு பொருளாதார அடுக்குகளில் வாழ்ந்து வரும் மில்லியன் கணக்கான மக்கள் வேலையிழப்பு மற்றும் ஊதிய குறைப்பு உள்ளிட்டவை காரணமாக வறுமை நிலைக்கு தள்ளப்பட்டிருக்கலாம். இத்தகைய பொருளாதார அதிர்ச்சிகள், குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் இளம் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் போன்ற எளிதாக பாதிக்கப்படக்கூடிய குழுக்களிடையே இறப்பு விகிதத்தை அதிகரிக்க வழிவகுக்கிறது.

1985 மற்றும் 2018 ஆண்டுகளுக்கு இடையில் பதிவான 5.2 மில்லியன் பிறப்புகளுடன் ஜிடிபி எவ்வாறு இணைக்கப்பட்டது என்பதை ஆராய்ச்சியாளர்கள் மதிப்பீடு செய்ய முயன்றனர். இந்த பிறப்புகளில் 82% குறைந்த மற்றும் குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் இருப்பதாக ஆய்வு கண்டறிந்துள்ளது. 0-1 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு அதிகரிப்புக்கு பல வழிமுறைகள் காரணமாக இருக்கலாம்.

வீட்டு மட்டத்தில் நிலவும் ஏழ்மை காரணமாக, குழந்தைகளுக்கு மோசமான ஊட்டச்சத்து மற்றும் பராமரிப்பு நடைமுறைகள் மற்றும் சுகாதார சேவைகளை அணுகும் திறன் குறைவது, பொருளாதார நெருக்கடி காரணமாக சுகாதார அமைப்புகள் வழங்கும் சேவைகளின் வழங்கல் மற்றும் தரம் பாதிக்கப்படுவது என பல காரணிகள் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இந்த ஆய்வில் ஈடுபட்டவர்கள் குழந்தை இறப்பு விகிதத்தில் ஜிடிபி ஏற்ற இறக்கங்களின் குறுகிய கால தாக்கத்தை மட்டுமே கருத்தில் கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: