மொபைல் உற்பத்தியில் 2-வது இடத்தை பிடித்தது இந்தியா

news18
Updated: April 2, 2018, 9:05 AM IST
மொபைல் உற்பத்தியில் 2-வது இடத்தை பிடித்தது இந்தியா
மொபைல் போன் உற்பத்தியில் இந்தியா 2-வது இடத்தை பிடித்துள்ளது.
news18
Updated: April 2, 2018, 9:05 AM IST
சர்வதேச அளவில்  மொபைல் போன்கள் உற்பத்தில் இந்தியா 2-வது இடத்தை பிடித்துள்ளது.  வியட்நாம் நாட்டை பின்னுக்குத் தள்ளி இந்தியா மொபைல் போன் உற்பத்தியில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

இந்தியா செல்லுலார் கூட்டமைப்பு (ஐசிஏ) மொபைல் போன்கள் உற்பத்தி குறித்து ஆய்வை நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி கடந்த 2017-ம் ஆண்டில் அதிக மொபைல் போன்கள் உற்பத்தி செய்யும் நாடுகள் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது.  இரண்டாவது இடத்தில் இந்தியாவும் மூன்றாவது இடத்தில் வியட்நாம் நாடும் உள்ளன. கடந்த 2014-ம் ஆண்டில் இந்தியாவின் மொபைல் போன் உற்பத்தி  30 லட்சமாக இருந்தது. 2017-ம் ஆண்டில் இந்த் உற்பத்தி 1.1 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டில் இறக்குமதியும் குறைந்துள்ளதாக ஐசிஏ வெளியிட்டுள்ள தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஐசிஏ தலைவர் பங்கஜ் மொஹிந்திரோ கூறுகையில், “ மத்திய அரசு, ஐசிஏ மற்றும் எப்டிடிஎப் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் இந்தியா மொபைல் போன் உற்பத்தியில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. சர்வதேச மொபைல் போன் உற்பத்தியில் 11 சதவீத மொபைல் போன்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன” என்று கூறினார்.

2019-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொபைல் போன்கள் உற்பத்தியை 50 கோடியாக உயர்த்த மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக ‘பாஸ்ட் ட்ராக் டாஸ்க் போர்ஷ்’ என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளது.
First published: April 2, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்