எதிர்காலத்தில் அதிகரிக்கும் கொசுத் தொல்லை - நோய்களின் வகைகளும் அதிகரிக்கும் என ஆய்வு தகவல்..!

இன்னும் 50 ஆண்டுகளில் ஏறத்தாழ அனைவரும் நோயால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.

எதிர்காலத்தில் அதிகரிக்கும் கொசுத் தொல்லை - நோய்களின் வகைகளும் அதிகரிக்கும் என ஆய்வு தகவல்..!
கொசு
  • News18
  • Last Updated: August 20, 2019, 8:08 PM IST
  • Share this:
கொசுக்களை ஒழிக்க அரசாங்கமும் மக்களும் பல வழிகளை மேற்கொண்டு வரும் நிலையில் ஆராய்ச்சியாளர்களின் இந்த செய்தி சற்று கலக்கத்தை ஏற்படுத்துகிறது.

டெங்கு, மலேரியா, சிக்கன்குனியா என கடுமையான ஆரோக்கிய பாதிப்புகளைப் பரப்பும் இந்த கொசுக்கள் இனி எதிர்காலத்தில் அதிகரிக்குமே தவிற குறையாது என்று ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது பனிக்காலம் குறையக் குறைய கொசுக்களின் உற்பத்தி அதிகரிக்குமாம். அப்படி சமீபகாலமாக குறையும் பனிக்காலம் அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலால் கொசுக்களின் உற்பத்தி இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் பல மடங்காக அதிகரிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி கொசுக்கள் பரப்பும் நோய்க் கிருமிகளின் வகைகள் அதிகரிக்கும் அதன் வீரியமும் அதிகமாக இருக்கும் எனக் கூறியுள்ளது. இதனால் மக்களுக்கும் நோய்களின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எச்சரித்துள்ளது.


அதுமட்டுமன்றி இந்த வெப்பநிலை உருவாகும் கிருமிகளுக்கு ஏதுவானது என்பதால் அவை ஏற்படுத்தக்கூடிய நோயின் தாக்கம் யோசித்துப்பார்க்க முடியாதது என்று கூறியுள்ளனர். இதேபோல் 1947 ஆம் ஆண்டே ஆய்வாளர்கள் ஜிகா வைரஸைக் கண்டறிந்து மெல்ல மெல்ல பரவி 2015 ஆம் ஆண்டு ஜிகா வைரஸ் பிரேஸிலில் பரவி பல உயிர்களை விழுங்கியது குறிப்பிடத்தக்கது.பி.எல்.ஓ.எஸ் என்னும் இதழில் புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் என்ற தலைப்பில் வெளியான இந்த ஆய்வை ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகம் நடத்தியுள்ளது. கொலின் ஜே.கார்ல்சன் என்பவரின் தலைமையில் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.

Loading...

இதில் இன்னும் 50 ஆண்டுகளில் ஏறத்தாழ அனைவரும் நோயால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்கிறார் தொற்று நோய்களின் நிபுணரான ராபர்ட் டி.ஸ்கூலே. இந்த நோய் பாதிப்புகள் அதிகம் வெப்ப நிலை மாற்றத்தை உணர்ந்த நாடுகளையே முதலில் தாக்கும். அங்கிருந்துதான் மற்ற நாடுகளுக்குப் பரவும் என்றும் கூறியுள்ளது.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...