• HOME
 • »
 • NEWS
 • »
 • lifestyle
 • »
 • வேற்றுமையிலும், மனிதாபிமானத்தால் ஒன்றிணைந்த 100 கோடி மக்கள் - வாழ்நாள் முழுவதும் நமக்கு ஊக்கமளிக்கக்கூடிய அவர்களின் கதைகள்!

வேற்றுமையிலும், மனிதாபிமானத்தால் ஒன்றிணைந்த 100 கோடி மக்கள் - வாழ்நாள் முழுவதும் நமக்கு ஊக்கமளிக்கக்கூடிய அவர்களின் கதைகள்!

Lifelong

Lifelong

இத்தகைய கதைகளை பகிர்வதனால் நாம் இந்நாட்டிற்கு மிகவும் தேவைப்படும்போது முன்வந்து உதவிய, எண்ணற்ற முகமறியாத பெயரறியாத மக்களுக்கு பொதுவெளியில் பெரும் நன்றியினை மனதார செலுத்துகின்றோம்.

 • Share this:
  கோவிட்19 இந்தியாவை பெரிதும் பாதித்தது. மக்கள் அனைவரையும், எந்த சூழ்நிலையிலும் எளிதில் மீண்டு வரக்கூடிய நம்மை போன்ற சிலரும் உட்பட, இந்நோயானது நலிவுற செய்தது. நம்முடைய நெருங்கிய வட்டத்திலிருந்து வெகு தூரம் விலகியிருக்கும் அந்நியர்களிடமிருந்தும் அவர்தம் இணைப்புகளிடமிருந்தும் நமக்கு உதவிகள் கிடைத்தன. ஆனால், இதுவே தமது அன்பிற்குரியவர்களை வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே காப்பாற்ற போராடும் குடும்பத்தினருக்கும் அந்நியர்களுக்கும் உள்ள வேறுபாட்டை நமக்கு உணர்த்தியது.

  நாடு முழுவதும், எண்ணற்ற அந்நியர்கள் தமக்கு யாரென்றே தெரியாதவர்களுக்காக மருந்துகள், ஆக்ஸிஜன் மற்றும் மருத்துவமனை படுக்கைகள் ஏற்பாடு செய்யவும், மேலும் தமது அன்பிற்குரியவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்களுக்காகவும், தாமாக முன்வந்து உதவி செய்தனர். சாதி, மத, சமூக நிலைப்பாடு போன்ற பேதங்களை தாண்டி, பிறருக்காக முன்னின்ற இந்த வீரமான ஆன்மாக்களுக்கு மிகப்பெரிய நன்றிகளை கூறி, மனித வாழ்வின் உண்மை பொருளை நாம் உணர்கிறோம்.

  வளங்களை ஒன்று திரட்டி, இணைந்து, முதியோருக்கான பராமரிப்பு அமைப்புகள் அமைத்து, அதை சார்ந்த பொருளாதாரத்தையும் செயலிகளையும் உருவாக்கி தனது அன்றாட வாழ்வாதாரத்திற்காக வீட்டு வேலை செய்பவர்களுக்கும், வாகன ஓட்டுநர்களுக்கும் பேருதவி செய்த சாதாரண இந்தியர்களின் கதைகள் தான் இவை.
  ஊடகங்கள் பெரிய கதைகளின் மீது கவனம் செலுத்திய போது, தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள், பெரிதும் உதவி தேவைப்படுபவர்களுக்கு தாமாக முன்வந்து உதவி செய்துகொண்டிருந்தனர்.  ஹைதராபாத்தில் உள்ள ஓய்வு பெற்ற ஏர் இந்தியா அதிகாரியான கே.ஆர். ஸ்ரீநிவாச ராவ் (வயது 70) என்பவர் கோவிட்-பாசிடிவ் நோயாளிகளுக்கும், உதவி தேவைப்படும் பிறருக்கும் தேவையான மளிகைப் பொருட்கள், மருந்துகள் இன்னும் பிற அத்தியாவசிய பொருட்கள் ஆகியவற்றை அவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக, தனது வீட்டிலிருந்து பல மைல் தூரம் மிதிவண்டியில் பயணித்தார் என்பது போன்ற சில உண்மைக் கதைகளை நாம் கேட்டறிந்தோம்.
  மற்றொரு நிகழ்வில், தனது சமூகத்திற்கு உதவி செய்து வந்த இளைஞர்களின் குழு ஒன்று, தம்மிடம் உதவி கேட்டு வருவோருக்கு தக்க சமயத்தில் உதவி செய்திட வேண்டுமெனில் தமது முயற்சிகளை மேம்படுத்த வேண்டும் என்று உணர்ந்தனர்.

  அர்நவ் ப்ரனீத் என்ற மாணவருடன் சில ஆரம்பநிலை பொறுப்பாளர்களும் இணைந்து, வளங்களின் தரவுத்தளம் ஒன்றை உருவாக்கி, கண்காணித்து, தேவைகளை அறிந்து உதவி செய்தனர். அவரோடு அயான் கான், ஆதித்யா அகர்வால், சுதிப்தோ கோஷ், முதித் அகர்வால், ஹர்பஜன்சிங் புஜாரி, திபோத்வானி மிஷ்ரா, திபாதியா ஹல்தர், விஷ்வம் ஸ்ரீவஸ்தவா, ஜெய்தித்யா ஜா, ஆதித்யா காந்தி, ஷிவம் சோலான்கி, ப்ரகார் பார்கவா, அவி சேகல் மற்றும் இப்ஸிதா சௌத்ரி ஆகியோர் வேலை செய்தனர்.

  இவர்கள், சமூக ஊடகங்களின் எல்லை வரை சென்று, மக்கள் எங்கு சென்று உதவி கேட்பது, ஆக்ஸிஜன் பெறுவது, ஆபத்தான நிலையில் உள்ளவர்களை எங்கு கொண்டு செல்வது மற்றும் மேலும் பல தகவல்களையும் அதை சார்ந்த விழிப்புணர்வையும் மக்களிடம் கொண்டு சேர்த்தனர். சில நல்ல உள்ளங்களை கொண்ட இச்சிறிய குழுவானது, விரைவில் பல நூறு தன்னார்வலர்களை கொண்ட பலம் பொருந்திய பெரும் குழுவாகி, அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 20க்கும் மேற்பட்ட சவாலான நிலைகளை கையாண்டனர். நாளடைவில், சமூக வலைதளங்களை பயன்படுத்தாத, உதவி தேவைப்படும் மக்களுக்காக வலைதளம் ஒன்றை உருவாக்கி, அதற்கான உதவி எண் ஒன்றையும் அளித்தனர்.  இதை எல்லாம் தாண்டியும் சிலர் ஒரு படி மேலே சென்றனர். புனெகர் அக்ஷய் கோத்வாலே என்ற ஆட்டோ ஓட்டுநர், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து, தனது திருமணத்திற்காக சேமித்து வைத்திருந்த ரூ.2 லட்சத்தையும் 1,550 குடும்பங்களுக்கு உணவு மற்றும் மளிகை பொருட்கள் வழங்குவதற்காக செலவழித்தார். இன்றளவும் அவர், நகரம் முழுவதும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கி கொண்டுள்ளார்.

  இந்த வைரஸோடு பல கோடி மக்கள் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், மிகவும் எதிர்பாராத இடங்களிலிருந்து எல்லாம் உதவிகள் வந்து சேர்ந்தன. குஜராத்திலில் உள்ள மட்ரான் ஜெமினிபென் ஜோஷி என்ற 71 வயதான ஓய்வு பெற்ற செவிலியர், முன் களப் பணியாளர்கள் அனைவரும் மிகவும் களைப்புடன் நீண்ட நேரம் வேலை செய்வதைக் கண்டார்.   

  தன்னை சிக்கலில் ஆட்படுத்திக் கொள்வதையும் பொருட்படுத்தாமல், தனது மருத்துவமனைப் பணியை மீண்டும் தொடர்ந்து செய்து, நாளொன்றுக்கு 12 மணிநேரம் மருத்துவமனையில், நோயாளிகளுக்கு தேவைப்படும் மருந்துகள், ஆக்ஸிஜன் வழங்குதல் மற்றும் பரிசோதனை மாதிரிகளை சேகரித்தல் போன்ற பணிகளை மேற்கொண்டார்.

  மிகவும் மோசமான நிலையில், இறப்பு விகிதம் திடமாக ஆயிரத்தை தொட்டது. மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு, படுக்கை தேவைப்படுவோர் தமக்கு வேண்டிய ஆக்ஸிஜனை தாமே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவமனைகள் மக்களை வேண்டிக் கேட்டுக் கொண்டது. பீகாரின் ஆக்ஸிஜன் மேன் என்று அழைக்கப்படும் கௌரவ் ராய் போன்றவர்கள் எல்லாம் கடவுளால் அனுப்பப்பட்ட தேவதூதர்களே. தனது சேமிப்பு பணத்திலிருந்து ரூ.1.25 லட்சத்தை கொண்டு, தனது மாநிலம் முழுவதும் தீவிர சிகிச்சையில் உள்ளவர்களுக்கு ஆக்ஸிஜன் உருளைகளை வாங்கி வழங்கினார்.

  அவரது அலைபேசியானது இடைவிடாது ஒலித்துக் கொண்டு இருந்ததாலும், தேவைப்படுவோருக்கு உதவ வேண்டும் என்ற அவரது மனஉறுதியானது, தீவிர சிகிச்சையில் பெற்று வந்த, எங்கு செல்வது என்று அறியாமல் இருந்த குறைந்தபட்சம் 1,500 உயிர்களையாவது காப்பாற்றியது.

  நாமும் இது போன்ற பற்பல பயனுள்ள கதைகளை அறிந்திருப்போம்.   Lifelong Online  என்ற வலைதளம் இது போன்ற குறிப்பிடத்தக்க தன்னலமற்ற கதைகளை எல்லாம் பதிவு செய்து, அதை அனைவரும் பார்த்து கொண்டாட வேண்டும் என்று நம்புகிறது. இது போன்ற உண்மைக் கதைகளை சேகரித்தது பகிர்தலே, அவர்களின் சேவையையும் தைரியத்தையும் பாராட்டி நன்றி கூறும் சிறந்த வழிகளில் ஒன்று என நம்புகிறது.

  மனிதாபிமானம் என்ற அகராதியில் இத்தகைய சேகரிக்கப்பட்ட கதை தொகுப்பானது, மக்கள் சிறந்த பக்கங்களை திறந்து, படித்து, உத்வேகம் கொள்ள ஒரு புத்தகக்குறியீடாக பயன்படுமென நம்பப்படுகிறது
  உங்களுடைய கஷ்ட காலங்களில் நீங்கள் மீண்டு வர உதவியவர்கள் பற்றிய விவரங்களை நீங்கள் அறிந்திருந்தால், எந்த ஒரு சமூக ஊடகத்திலும் #NeverForgetLifelong என்ற ஹேஷ்டேகில் பகிரவும் அல்லது myhero@lifelongindia.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

  இத்தகைய கதைகளை பகிர்வதனால் நாம் இந்நாட்டிற்கு மிகவும் தேவைப்படும்போது முன்வந்து உதவிய, எண்ணற்ற முகமறியாத பெயரறியாத மக்களுக்கு பொதுவெளியில் பெரும் நன்றியினை மனதார செலுத்துகின்றோம்.

  This article has been created by Studio18 on behalf of Lifelong Online

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Yuvaraj V
  First published: