Home /News /lifestyle /

பயங்கரமா குழந்தைகள் சேட்டை பண்றாங்களா? பெற்றோருக்கு நிபுணர்கள் கொடுக்கும் அட்வைஸ்...

பயங்கரமா குழந்தைகள் சேட்டை பண்றாங்களா? பெற்றோருக்கு நிபுணர்கள் கொடுக்கும் அட்வைஸ்...

 வாலு குழந்தைகள் குறித்து பெற்றோர் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்.

வாலு குழந்தைகள் குறித்து பெற்றோர் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்.

குழந்தைகள் அதிகம் ஆக்டிவாக இருப்பதும், கவனக்குறைவு ஹைபராக்டிவிட்டி கோளாறுடன் (ADHD) தொடர்புடையது என்பதால் பெற்றோர்கள் கவனத்துடன் இருக்க வேண்டியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India
  குழந்தைகள் என்றாலே சுறுசுறுப்பு தான். சிறகு முளைத்த பட்டாம் பூச்சியைப் போல ஓடி ஆடி விளையாடுவார்கள், வண்ணம் தீட்டுவது, சுவரில் ஓவியம் வரைவது, டான்ஸ் ஆடுவது, வீடு முழுவதும் பொம்மைகளைக் கொட்டி விளையாடுவது என ஓரிடத்தில் உட்காராமல் துறுதுறுவென ஓடிக்கொண்டிருப்பார்கள். குழந்தைகள் அதிகம் ஆக்டிவாக இருப்பதும், கவனக்குறைவு ஹைபராக்டிவிட்டி கோளாறுடன் (ADHD) தொடர்புடையது என்பதால் பெற்றோர்கள் கவனத்துடன் இருக்க வேண்டியுள்ளது.

  ADHD என்பது மூளை வளர்ச்சி மற்றும் மூளையின் செயல்பாட்டைத் தடுத்து கவனத்தையும், அமைதியாக உட்காருவது, சுயக்கட்டுப்பாடு போன்றவற்றைப் பாதிக்கின்றன.

  இருப்பினும், அனைத்து ஹைப்பர் ஆக்டிவ் குழந்தைகளுக்கும் ADHD இருப்பதில்லை. கூடுதல் சுறுசுறுப்பாகவும் அமைதியற்றதாகவும் இருப்பது மற்ற காரணிகளையும் சுட்டிக்கட்டலாம் என எடுத்துரைத்துள்ள குழந்தை வளர்ப்பு நிபுணரான ரிரி திரிவேதி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முக்கியமான 5 காரணங்களைப் பட்டியலிட்டுள்ளார்.

  1. சர்க்கரை அளவு அதிகரிப்பது:

  ஹைப்பர் ஆக்டிவாக குழந்தைகள் செயல்படக் காரணம் அதிகமாகச் சர்க்கரையை உட்கொள்வது தான் என்பதை உறுதிப்படுத்தக்கூடிய அறிவியல் பூர்வமான முடிவுகள் எதுவும் இல்லை என்றாலும், குழந்தையை அதிவேகமாகச் செயல்பட வைக்கச் சர்க்கரை ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

  குழந்தைக்கு அதிகப்படியான சர்க்கரை கலந்த உணவைக் கொடுப்பது, இரத்தத்தில் குளுக்கோஸை அதிகரிக்கிறது, அப்போது போதுமான உடல் சார்ந்த ஆக்டிவிட்டிகள் குழந்தையிடம் அதிகரிக்கிறது எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

  சர்க்கரை குழந்தைகளின் நடத்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற இந்த யோசனை முதன்முதலில் 1973 இல் ஒவ்வாமை நிபுணர் பெஞ்சமின் ஃபீன்கோல்ட் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 'ஃபீன்கோல்ட் கோட்பாடு' என்றும் அழைக்கப்படுகிறது. இது பெற்றோரின் கதைகளை அடிப்படையாகக் கொண்டது, அங்கு அவர்கள் சர்க்கரை உள்ளிட்ட உணவு சேர்க்கைகள் தங்கள் குழந்தைகளை அதிவேகமானவர்களாக மாற்றுகிறது எனக் கூறினார்.

  Also Read : கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க.. ஹார்ட் அட்டாக் மற்றும் ஸ்டிரோக் போன்ற அபாயங்கள் அதிகரிக்க காரணம் இதுதான்

  2. திரையில் பார்க்கக் கூடிய விஷயங்கள்:

  நிபுணர்களின் கருத்துப் படி, குழந்தைகள் ஹைப்பர் ஆக்டிவாக செயல்பட இரண்டாவது மிக முக்கிய காரணமாக டி.வி. ஸ்கிரீனில் ஒளிபரப்பாகும் துள்ளலான பாடல்கள், நிகழ்ச்சிகள், கார்ட்டூன் கதாபாத்திரங்கள் மற்றும் தூக்குவதற்கு முன்பு விளையாடும் வீடியோ கேம்கள் ஆகியவற்றைப் பட்டியலிட்டுள்ளனர்.

  3. குழந்தை புறக்கணிக்கப்பட்டதாக உணருதல்:

  ஒரு குழந்தை வீட்டில் உள்ள யாருமே தன்னை கண்டுகொள்ளவில்லை என்பது போல் உணரும் போது, அவர்களது கவனத்தை ஈர்ப்பதற்காக ஹைப்பர் ஆக்டிவ் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பெற்றோருக்குப் புதிதாக மற்றொரு குழந்தை பிறந்தாலோ அல்லது தனது உடன்பிறந்தவர்கள் பெற்றோருக்கு மிகவும் பிடித்தவர்களாக மாறினாலோ குழந்தைகள் கவனத்தை ஈர்ப்பதற்காக ஹைப்பர் ஆக்டிவாக செயல்படக்கூடும்.

  4. பெற்றோரிடம் இருந்து பிள்ளைகளுக்குப் பரவுதல்:

  குழந்தைகள் அனைத்து விஷயங்களையும் முதலில் பெற்றோரிடம் இருந்து தான் கற்றுக்கொள்கின்றனர். அப்படி பெற்றோர்களைத் தொடர்ந்து கண்காணிக்கும் பிள்ளைகள் அவர் ஓவர் சுறுசுறுப்பாகச் செயல்படுவதைப் பார்த்து தானும் வேகமாகச் செயல்படக் கற்றுக்கொள்வதாக நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக அம்மா மிகவும் சுறுசுறுப்பானவராகவும், வேகமானவராகவும் இருந்தால் அதே பழக்க வழக்கத்தையும் குழந்தையும் காபி அடிக்கும் வாய்ப்புக்கள் அதிகமுள்ளது.

  Also Read : பீனட் பட்டர் உடல் எடையைக் குறைக்க உதவுமா? சாப்பிடும் போது தவிர்க்க வேண்டிய விஷயங்கள்!

  5. அதிக நேரம் விளையாடுவது:

  பள்ளியில் குழந்தைகளுக்குப் படிக்கவும், விளையாடவும் தனித்தனியாக நேரம் ஒதுக்கப்படுகிறது. ஆனால் வீட்டில் விளையாடுவதற்கும், படிப்பதற்கும் நேரம் ஒதுக்காமல், கட்டுப்பாடில்லாமல் விளையாட்டில் கவனம் செலுத்தும் குழந்தைகளில் ஹைப்பர் ஆக்டிவ் செயல்பாடுகள் அதிகரித்துக் காணப்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நாளடைவில் குழந்தைகளின் இந்த ஹைப்பர் ஆக்டிவ் செயல்முறை அவர்களைக் கவனக்குறைவு, சுயக்கட்டுப்பாடு இன்மை போன்றவற்றிற்கு ஆளாக்கக்கூடும் என்றும் எச்சரிக்கின்றனர்.
  Published by:Janvi
  First published:

  Tags: Children, Hyperactive child, Kids Health

  அடுத்த செய்தி