• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • உலக ரேபிஸ் தினம் 2021: இந்நாளின் வரலாறு மற்றும் முக்கியத்துவத்தை தெரிந்துக்கொள்ளுங்கள்..

உலக ரேபிஸ் தினம் 2021: இந்நாளின் வரலாறு மற்றும் முக்கியத்துவத்தை தெரிந்துக்கொள்ளுங்கள்..

காட்சி படம்

காட்சி படம்

விலங்குகள், மனிதர்களை கடிப்பதன் மூலமோ அல்லது அந்த விலங்குகளால் கடிக்கப்பட்ட பிற விலங்குகள் மூலமாகவோ ரேபிஸ் பரவுகிறது.

  • Share this:
நாம் இன்னும் கோவிட் -19 தொற்றுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் உலகில் பல வைரஸ் நோய்கள் உள்ளன. இதில் ரேப்டோ என்னும் வைரஸ் குடும்பத்தை ஒன்று தான் ரேபிஸ் வைரஸ். இது நாய், பூனை, குதிரை, மற்றும் காடுகளில் வாழும் வவ்வால், நரி, ஓநாய் போன்ற விலங்குகளை முக்கியமாக தாக்கும். இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட விலங்குகள், மனிதர்களை கடிப்பதன் மூலமோ அல்லது அந்த விலங்குகளால் கடிக்கப்பட்ட பிற விலங்குகள் மூலமாகவோ ரேபிஸ் பரவுகிறது.

அவற்றின் மூலம் மனிதர்களுக்கு பரவி உயிர் அபாயத்தை ஏற்படுத்துகிறது. இந்த ரேபிஸ் வைரஸ் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 28-ம் தேதி "உலக ரேபிஸ் தினம்"அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நாளை அனுசரிப்பதற்கான முக்கிய நோக்கம் கொடூர ரேபிஸ் வைரஸை தடுப்பது மற்றும் மிகவும் பயனுள்ள வழிகளில் கவனம் செலுத்தி கட்டுப்படுத்துவது.

வரலாறு:

ரேபிஸ் வைரஸிற்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடித்த தனது குழுவினருடன் இணைந்து கண்டறிந்த புகழ்பெற்ற பிரெஞ்சு விஞ்ஞானியான லூயிஸ் பாஸ்டர் 1895-ஆம் ஆண்டில்,செப்டம்பர் 28-ம் தேதி மறைந்தார். எனவே அவரது நினைவு நாள் அன்று, உலக ரேபிஸ் தினமாக கடந்த 2007 முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

2007-ம் ஆண்டு ரேபிஸ் கட்டுப்பாடு மற்றும் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் ஆகியவை இணைந்து நடத்திய நிகழ்வில் முதன்முறையாக உலக ரேபிஸ் தினம் கொண்டாடப்பட்டது. ரேபிஸ் நோயின் பின்விளைவுகள் பற்றி மக்களிடம் அதிக விழிப்புணர்வு ஏற்பட்டதால், இந்த நாளின் முக்கியத்துவமும் அதிகரித்தது. இந்தியாவில் ஆண்டு தோறும் ரேபிஸ் நோயால் சுமார் 20,000-க்கும் மேற்பட்ட மக்கள் இறக்க நேரிடுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கருப்பொருள்:

இதனிடையே உலகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் 15-வது உலக ரேபிஸ் தினத்தின் தீம் அதாவது கருப்பொருள் "'ரேபிஸ்: உண்மைகள், பயம் அல்ல' (Rabies: Facts, not Fear) என்பதாகும். நடப்பாண்டு உலக ரேபிஸ் தினத்தின் இந்த தீம், மக்களிடமிருந்து ரேபிஸ் தொடர்பான பயத்தை முடிவுக்குக் கொண்டு வந்து இவ்வைரஸ் தொடர்பான உண்மைகளை அவர்களுக்கு முழுமையாக தெரியப்படுத்துவது என்பதையும் அடிப்படையாக கொண்டது.

மேலும் பயத்தை ஏற்படுத்தும் ரேபிஸ் பற்றிய தவறான தகவல் மற்றும் கட்டுக்கதைகளை உடைத்து உண்மைகளைப் பகிர்வதை நோக்கமாக கொண்டுள்ளது. வழக்கமாக உலக ரேபிஸ் தினத்தின் ஒரு பகுதியாக தடுப்பூசி இயக்கங்கள் நடத்தப்படும். ஆனால் கொரோனா நீடிப்பதால் தடுப்பூசி முகாம்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. எனினும் பல நாடுகளில் ரேபிஸ் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

தவிர கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ரேபிஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மற்றும் உண்மைகளை பகிர பல நிகழ்ச்சிகள் ஆன்லைன் மூலமும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
சந்தேகம் மற்றும் தவறான கருத்துக்களை பரப்பாமல், ரேபிஸ் பற்றிய துல்லிய உண்மைகளை சோஷியல் மீடியாக்கள் மற்றும் நண்பர்களுக்கு பகிர்வதன் மூலம் அனைவரும் இந்த நாளை கொண்டாடுவதில் இணைந்து கொள்ளுங்கள் என்று உலக சுகாதார நிறுவனம் கேட்டு கொண்டுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: