Home /News /lifestyle /

சோஷியல் மீடியாக்களை அதிகம் பயன்படுத்துவதால் மன ஆரோக்கியத்தில் ஏற்படும் தாக்கங்கள் என்ன..? விடுபடுவது எப்படி?

சோஷியல் மீடியாக்களை அதிகம் பயன்படுத்துவதால் மன ஆரோக்கியத்தில் ஏற்படும் தாக்கங்கள் என்ன..? விடுபடுவது எப்படி?

மாதிரி படம்

மாதிரி படம்

சோஷியல் மீடியாக்களில் அதிக நேரம் அளவிடுவது ஒருவரின் மன ஆரோக்கியத்தை ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் பாதிக்கலாம்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
இன்று பலர் உணவில்லாமல் கூட வாழ்ந்து விடுவார்கள் போல, ஆனால் சோஷியல் மீடியா மற்றும் ஸ்மார்ட் ஃபோன் இன்றி வாழ்வது கடினம் என்கிற ஸ்டேஜில் இருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக விலை மலிவாக கிடைக்கும் இன்டர்நெட் பேக்ஸ்கள் சோஷியல் மீடியா பயன்பாட்டை மிகவும் அதிகமாக்கி, உலகை நமக்கு இன்னும் நெருக்கமாக கொண்டு வந்து இருக்கிறது.

உலகின் எந்த மூலையில் இருக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் எளிதில் முகம் பார்த்து பேச உதவும் ஆப்ஸ்கள், தெரியாதவர்களாக இருந்தாலும் கூட பல்வேறு பின்னணி உள்ளவர்களுடன் தொடர்பு கொள்வது என பல விஷயங்களை ஈஸியாக மாற்றி இருக்கின்றன சோஷியல் மீடியாக்கள். ஆனால் அதே சமயம் இவற்றின் அதிகப்படியான பயன்பாடு பல மனநல சிக்கல்கள் மற்றும் கவலைகள் ஏற்பட காரணமாக இருக்கிறது.

சிந்திக்காமல்..

வேறு எதை பற்றியும் யோசிக்காமல் தூங்கி எழுந்த பின், படுக்கைக்கு செல்லும் முன், படுக்கையில், சாப்பிடும் போது, பயணத்தின் போது, பிறர் உங்களிடம் பேசி கொண்டிருக்கும் போது என நாளொன்றுக்கு எவ்வளவு நேரம் நீங்கள் உங்களை போனில் சோஷியல் மீடியாவை பயன்படுத்துகிறீர்கள் என்று கவனித்தது உண்டா.? இந்த பழக்கம் மனம் மற்றும் உடல் நலத்திற்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பதை உணராமலே பலர் இருக்கிறார்கள்.

சோஷியல் மீடியா போதை என்று இப்பழக்கத்தை குறிப்பிடும் நிபுணர்கள், இப்பழக்கத்தால் உடலில் மகிழ்ச்சியான ஹார்மோன்களான டோபமைன் வெளியாகிறது. எனவே இதை செய்வதால் நமக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது என்று எண்ணி பலர் சோஷியல் மீடியாக்களுக்கு அடிமையாகி கிடக்கின்றனர் என்கிறார்கள். சோஷியல் மீடியாக்களில் அதிக நேரம் செலவிடுவது நம் சுயதன்மை, வாழ்க்கை மற்றும் யதார்த்தங்கள் என அனைத்தும் பாதிக்கப்படுவதாகவும் கூறுகின்றனர்.அதிகமாவதால் ஏற்படும் தாக்கம் :

சோஷியல் மீடியாக்களில் அதிக நேரம் அளவிடுவது ஒருவரின் மன ஆரோக்கியத்தை ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் பாதிக்கலாம் என்று கூறுகிறார்கள் நிபுணர்கள். துவக்கத்தில் இப்பழக்கம் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை உணரமுடியாமல் போனாலும், போகப்போக எதிர்மறை சிந்தனை, தங்களை தாங்களே தவறாக எடை போடுவது, கவலைகள், மன அழுத்தம் மற்றும் கட்டுப்பாடற்ற உணர்ச்சி நடத்தை உள்ளிட்ட தீவிர பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

கட்டாயப்படுத்துவது :

சோஷியல் மீடியாக்களுக்கு அடிமையாக உள்ளவர்கள் பெரும்பாலும் தங்களது இந்த பழக்கம் மனதையும் தங்கள் நேரத்தையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதை உணராமலே இருக்கிறார்கள். சோஷியல் மீடியாவிற்கு அடிமையாவதை தவிர்க்க இரு சூழல்களை நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். முதலாவது பிறர் செய்வதன் நீங்களும் அதை செய்தக்க வேண்டும் என்று உங்களை நீங்களே கட்டாயப்படுத்தி செய்வது.

வீட்டில் சின்ன நூலகம் வைக்க வேண்டும் என ஆசையா..? அப்போ இதை முதலில் கற்றுக்கொள்ளுங்கள்...

உங்களுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் கூட உங்களையே நீங்கள் கட்டாயப்படுத்தி சோஷியல் மீடியாவுக்கு அதிக நேரம் செலவழிப்பது அதற்கு அடிமையாகி வருகிறீர்கள் என்று பொருள். உடனடியாக இப்பழக்கத்தை கைவிட வேண்டும். இரண்டாவதாக சோஷியல் மீடியா பயன்பாடு உங்களது தூங்கும் வழக்கத்தில் ஏற்படுத்தும் மாற்றம், பசியின்மை, படபடப்பு, இதய துடிப்பு அதிகரிப்பு மற்றும் கவனம் செலுத்த இயலாமை போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். இவற்றை உணர்ந்தாலும் நீங்கள் அதற்கு அடிமையாகி உள்ளீர்கள் என்பதை குறிக்கும்.மன ஆரோக்கியம் :

சோஷியல் மீடியா பயன்படுத்துவதால் ஏற்படும் மனநல பாதிப்புகளை தவிர்க்க நீங்கள் தினமும் எவ்வளவு நேரம் அவற்றை பயன்படுத்துகிறீர்கள் என்பதை நீங்களே கண்காணித்து, அதற்கேற்ப நேரத்தை குறைத்து பிற நடவடிக்கைகளில் ஈடுபடலாம். அதே போல சோஷியல் மீடியாக்களில் நீங்கள் பார்க்கும் அனைத்தும் உண்மையானவை அல்ல என்பதை புரிந்து கொள்ள முயற்சித்து உங்களுக்கான சுயமதிப்பீட்டை அதிகரிக்கும் யதார்த்தமான நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள். இவை தவிர மனதை ஆரோக்கியமாக வைக்க உதவும் புதிய பொழுதுபோக்குகள், தியானம், யோகா உள்ளிட்டவற்றில் ஈடுபடலாம். நிலைமை கட்டுக்குள் வரவில்லை என்றால் சரியான நேரத்தில் நிபுணர்களின் உதவி பெறுவது அவசியம்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Mental Health, Social media

அடுத்த செய்தி