ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ஆரோக்கியமாக இருக்க அசைவ உணவு அல்லது சைவ உணவு இரண்டில் எது பெஸ்ட்..?

ஆரோக்கியமாக இருக்க அசைவ உணவு அல்லது சைவ உணவு இரண்டில் எது பெஸ்ட்..?

டயட்

டயட்

இரண்டு வகை டயட்டை பின்பற்றுவதால் எந்தவித பெரிய மாற்றங்களும் இவர்களின் உடலில் உண்டாகவில்லை என்று ஆய்வு செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பல்வேறு உணவு வகைகளை நாம் சாப்பிட்டு வருகிறோம். இவற்றில் சில ஆரோக்கியமானவையாக இருக்கும். சில ஆரோக்கியமற்றவையாக இருக்கும். அதிலும் சில நம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்து நீண்ட ஆயுள் தரக்கூடியதாகவும் இருக்கும். அந்த வகையில் சமீப காலமாக பலர் வீகன் டயட் முறையை பற்றி அதிகம் பேசி வருகின்றனர். இப்படி இருக்க மறுமுனையில் இன்னும் பலர் இறைச்சி வகை உணவுகள் தான் உடலை ஆரோக்கியமாக வைக்கும் என்று கூறி வருகின்றனர்.

இதை படிக்கும் பலருக்கும் எந்த உணவு வகை உண்மையிலேயே ஆரோக்கியமானது என்பது தெரியாது. ஆனால் உணவு வகைகளை பற்றிய பல்வேறு ஆய்வுகள் இன்று வரை நடத்தப்பட்டு வருகிறது. சில வகை உணவுகள் மட்டுமே நமது உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் நல்லது. அந்த வகையில் வீகன் உணவு வகை நல்லதா அல்லது இறைச்சி சேர்த்த உணவு வகை நல்லதா என்பதை இரட்டை சகோதரர்களை கொண்டு ஆய்வு நடத்தி கண்டுபிடித்துள்ளனர்.

ஹுகோ மற்றும் ரோஸ் டர்னர் ஆகிய இருவரும் இரட்டை சகோதரர்கள். இவர்களை வைத்து தான் இந்த புதுவித ஆய்வை ஊட்டச்சத்து நிபுணர்கள் செய்துள்ளனர். இவர்களில் ஹீகோவிற்கு வெறும் வீகன் வகை உணவுகளான காய்கறிகள், பழங்கள் போன்ற உணவுகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளனர். அதே போன்று ரோஸிற்கு இறைச்சி, மீன் மற்றும் பால் சேர்த்த உணவுகளை மட்டுமே தினமும் எடுத்துக் கொள்ளும்படி கூறியுள்ளனர்.

இந்த ஆய்வு காலத்தில் எக்காரணம் கொண்டும் இறைச்சி மற்றும் பால் சார்ந்த பொருட்களை ஹுகோ எடுத்துக்கொள்ள கூடாது என்றும் தெரிவித்துள்ளனர். அதே போன்று ரோஸிற்கும் அதிக அளவிலான காய்கறிகளை தவிர்த்து இறைச்சிகளை அதிகம் எடுத்துக்கொள்ள பரிந்துரைத்துள்ளனர். இந்த டயட்டை இருவரும் 12 வாரங்கள் தவறாது கடைபிடித்து வந்துள்ளனர்.

குளிர்காலத்தில் மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?

இந்த ஆய்வை லண்டன் கிங்ஸ் கல்லூரியை சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்தினர். இந்த டயட்டை மேற்கொள்ளும்போது இரட்டை சகோதரர்களிடம் எப்படி உணர்கிறீர்கள் என்று ஆய்வாளர்கள் கேட்டுள்ளனர். அதன்படி, "தாவரங்கள் சார்ந்த உணவு வகைகளை சாப்பிடுவதற்கு பிடிக்கவில்லை, இருப்பினும் இதை சாப்பிடுவதால் எப்போதும் உற்சாகமாக உள்ளது. ஆரம்பத்தில் சில வாரங்களுக்கு இறைச்சி சாப்பிட வேண்டும் போன்று இருந்தது. அதே போன்று எனக்கு மிகவும் பிடிக்கும். அதை சாப்பிட வேண்டுமென்று தோன்றியது" என்று ஹுகோ தெரிவித்துள்ளார்.

தனது இறைச்சி வகை டயட் பற்றி ரோஸிடம் கேட்டபோது, "இந்த வகை உணவுகளால் ஜிம்மில் சிறப்பாக செயல்பட முடிந்தது. சில நாட்களில் மிக உற்சாகமாக இருந்தேன். சில நாட்கள் அந்த அளவிற்கு உற்சாகமாக ஜிம்மில் செயல்பட முடியவில்லை" என்று தெரிவித்திருந்தார். 12 வாரகாலம் இவர்கள் மேற்கொண்ட டயட்டின் முடிவில், இரு வகையான டயட்டில் சில குறைபாடுகள் உள்ளதை ஆய்வாளர்கள் அறிந்து கொண்டனர்.

அதே போன்று இரண்டு வகை டயட்டை பின்பற்றுவதால் எந்தவித பெரிய மாற்றங்களும் இவர்களின் உடலில் உண்டாகவில்லை என்று ஆய்வு செய்துள்ளனர்.

First published:

Tags: Diet, Non Vegetarian, Vegetarian