உங்க ஆஃபீஸை ரொம்ப மிஸ் பன்றீங்களா..? இத கிளிக் பண்ணுங்க உங்க கவலையெல்லாம் போய்விடும்..!

ஜெர்மனியைச் சேர்ந்த இந்த நிறுவனம் வீட்டில் அலுவலகப் பணி செய்வோருக்காக i miss the office என்ற வெப்சைட்டை உருவாக்கியுள்ளது.

உங்க ஆஃபீஸை ரொம்ப மிஸ் பன்றீங்களா..? இத கிளிக் பண்ணுங்க உங்க கவலையெல்லாம் போய்விடும்..!
வீட்டிலிருந்து அலுவலகப் பணி
  • Share this:
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடே பீதியில் உறைந்துள்ளது. அரசின் ஊரடங்கு உத்தரவு காரணமாக தனியார் நிறுவனங்கள் பல ஊழியர்கள் பலரையும் வீட்டிலிருந்தே பணியாற்ற வைத்துள்ளது.

வீட்டிலிருந்து அலுவலகப் பணிகளை செய்வது பலருக்கும் புது அனுபவமாகவும் அதேசமயம் எப்படி எதிர்கொள்வது என்ற குழப்பமும் இருக்கலாம். அதேபோல் ஊரடங்கு மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பலருக்கும் அலுவல ஞாபகங்கள் மலர ஆரம்பிக்கும். இன்னும் சிலருக்கு வீட்டில் பணியாற்றுவது அலுவலக ஃபீலை தராததால் வேலைத் திறனும் குறையலாம். நடக்கும் சத்தம் , டைப்பிங் ஒலி என காதுகள் அவற்றைக் கேட்டே வேலை செய்ததால் வீட்டில் வேலை செய்ய முடியாமல் இருக்கலாம்.
இதுபோன்ற கவலைகளைப் போக்கவே கிட்ஸ் கிரியேடிவ் ஏஜென்சி ஒரு வெப்சைட்டை உருவாக்கியுள்ளது, ஜெர்மனியைச் சேர்ந்த இந்த நிறுவனம் வீட்டில் அலுவலகப் பணி செய்வோருக்காக i miss the office என்ற வெப்சைட்டை உருவாக்கியுள்ளது.

இந்த வெப்சைட்டை ஓப்பன் செய்துவிட்டு ஹெட் செட் போட்டுக்கொண்டு கண்களை மூடுங்கள், உங்கள் மனம் தானாக அலுவலக ஃபீலுக்குச் சென்று விடும். ஆம்.. அலுவலகத்தில் நடப்பது, டைப் செய்வது, பேசிக்கொள்ளும் சத்தம், ஃபேன் சத்தம், பிரிண்டிங் மிஷின் சத்தம் என அப்படியே அலுவலகத்தில் இருப்பது போலவே ஒலிகளை உருவாக்கி பதிவு செய்துள்ளது.

பின் கண்களைத் திறந்து அந்த மனநிலையோடு அப்படியே வேலை செய்யுங்கள். இனி உங்களுக்கு அலுவலகம் இல்லையே என்ற கவலையே இருக்காது.முயற்சி செய்து பாருங்கள்... i miss the office

பார்க்க : 

 

 
First published: April 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading