HOME»NEWS»LIFESTYLE»human rights day 2020 history significance theme of the day esr ghta

மனித உரிமைகள் தினம் 2020 : அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் பற்றி தெரியுமா..?

இனம், நிறம், நிறம், மொழி, பாலினம், அரசியல், ஜாதி, மதம், பிறப்பு, சொத்து, பிற அந்தஸ்து, தேசிய அல்லது சமூக தோற்றம் என பாகுபாடு பார்க்கக்கூடாது என்பதை உணர்த்துவதே இந்த தினம்.

மனித உரிமைகள் தினம் 2020 : அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் பற்றி தெரியுமா..?
மாதிரி படம்
  • Share this:

ஆண்டுதோறும் டிசம்பர் 10 அன்று உலகம் முழுவதும் மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுகிறது. கலாச்சாரம், சமூகம் மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சாத்தியமான அனைத்து சூழல்களிலும் சமூகத்தின் நலனை உறுதிப்படுத்தவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. 1948ல் மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை (யு.டி.எச்.ஆர்) ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஏற்றுக்கொண்டது. இந்த நாளை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் மனித உரிமைகள் தினம் அனுசரிக்கப்படடுகிறது.

கருத்துச் சுதந்திரம், எழுத்துரிமை, கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர் போன்ற அடிப்படை தேவைகளைப் பெற்று சுதந்திரமாக உயிர் வாழ்வதற்கான உரிமை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. இனம், நிறம், நிறம், மொழி, பாலினம், அரசியல், ஜாதி, மதம், பிறப்பு, சொத்து, பிற அந்தஸ்து, தேசிய அல்லது சமூக தோற்றம் என எதிலும் பாகுபாடு பார்க்கக்கூடாது என்பதை உணர்த்துவதே இந்த தினத்தை கொண்டாடுவதற்கான முக்கிய நோக்கமாகும்.

மனித உரிமைகள் தினத்தின் வரலாறு (Human Rights Day: History)



ஐநா சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு ஏற்படுத்தப்பட்ட பின்னர் மனித உரிமை பிரகடனத்தை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்தக் குழு 30 பிரிவுகளின் கீழ் மனித உரிமைகளை அடையாளம் கண்டு சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தை ஐநா சபையில் சமர்ப்பித்தது. இந்தப் பிரகடனத்துக்கு 1948ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி ஐநா சபையில் 58 நாடுகள் அங்கீகாரம் வழங்கின. இந்த நாள்தான் 1950ம் ஆண்டு முதல் சர்வதேச மனித உரிமைகள் தினமாக அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. யு.டி.எச்.ஆர் (UDHR) என்பது 500க்கும் மேற்பட்ட மொழிகளில் கிடைக்கும் ஒரு சாசனம் மற்றும் இது உலகில் மிக அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட ஆவணமாகும்.



மனித உரிமைகள் தினம் கொண்டாடுவதன் முக்கியத்துவம் (Human Rights Day: Significance)

ஒவ்வொரு தனி மனிதனும் தான் வாழ்வதற்கான உரிமையை பெறுவதும், மற்ற மனிதரையும் வாழ விடும் நெறிமுறையை உணர்த்துவதே இப்பிரகடனத்தின் முக்கியக் கருத்தாகும். எல்லா மனிதர்களும் சுதந்திரமானவர்களாகவும், உரிமையிலும், கண்ணியத்திலும் ஒருவருக்கொருவர் சமமானவர்கள் என்பதை இப்பிரகடனம் வலியுறுத்துகிறது. உலகளவில் பாதுகாக்கப்பட வேண்டிய அனைவரின் அடிப்படை உரிமைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

 

ஐக்கிய நாடுகள் அவையின் நிகழ்வுகளில் முதன்மையான இந்நாளில், நியூயார்கில் அமைந்துள்ள அதன் தலைமைப்பீடத்தில் முக்கிய நிகழ்வுகள் இடம்பெறுவது வழக்கமாகும். இந்நாளில் ஐந்தாண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் பரிசு வழங்கப்படும். மேலும் பல அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்நாளில் பல முக்கிய நிகழ்வுகளை நடத்துவது வழக்கமாகும்.

மனித உரிமை மீறல் குறித்த புகார்களை அளிப்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 3 லட்சம் பொதுச்சேவை மையங்களுடன் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் இணைய வழி புகார் தெரிவிக்கும் முறை இணைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆணையத்தின் உடனடி சேவையைப் பெறுவதற்கு 14433 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உரிமை மீறல்கள் நடைபெறாமல் தடுக்க ஒவ்வொருவரும் இந்நாளில் உறுதிமொழி எடுத்து கொள்வோம்.



மனித உரிமைகள் தினம் 2020ன் கருப்பொருள் (Human Rights Day 2020: Theme) :

மனித உரிமைகள் தினத்தை கொண்டாடுவதற்கும், பொதுமக்களுக்கு அடிப்படை உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும்
ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய தீம் அமைக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் தினம் 2020-ன் கருப்பொருள் COVID-19 தொற்றுநோயுடன் தொடர்புடையதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான தீம் “சிறந்ததை மீட்டெடுங்கள் - மனித உரிமைகளுக்காக நிற்கவும்” (Recover Better - Stand Up for Human Rights) என்பதாகும்.

சிந்து சமவெளி நாகரிக மக்கள் பன்றி, மாட்டு இறைச்சிகளை அதிக அளவில் உணவாக உட்கொண்டுள்ளனர் - தொல்லியல் ஆய்வில் தகவல்!

அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் உலகளாவிய இலக்குகளை அனைவரும் அடைய முடியும். ஏற்றத்தாழ்வுகள், பாகுபாடு மற்றும் மனித உரிமை தரங்களை இந்த தீம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
தொற்றுநோயால் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் தோல்விகளை சரி செய்யும் நோக்கத்துடன் இந்த ஆண்டு மனித உரிமைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் ஏரளமான தலைவர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் மனித உரிமைகள் தினம் 2020 வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். ஆளுநர் பன்வரிலால் புரோஹித்(Banwarilal purohit) சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு தமிழக மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, மனித உரிமைகளை நிலைநிறுத்துவதற்கும், மனித விழுமியங்களை மதிப்பதற்கும், வளமான எதிர்காலத்தை தொடங்க அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கும் தீர்மானிப்போம் என்று அவர் கூறியுள்ளார்.

 

 

 

 

 

 

 
Published by:Sivaranjani E
First published: