காதலையும், காதலர் தினத்தையும் உலகம் எப்படி வரவேற்கிறது?

news18
Updated: February 13, 2018, 6:29 PM IST
காதலையும், காதலர் தினத்தையும் உலகம் எப்படி வரவேற்கிறது?
காதலர் தினத்தை உலகம் எப்படி வரவேற்கிறது?
news18
Updated: February 13, 2018, 6:29 PM IST
காதல்… எல்லா உயிர்களிலும் பேதமற இரண்டறக் கலந்திருக்கும் உன்னத உணர்வு. உலக நாடுகள் காதலர் தினத்தை எப்படி கொண்டாடுகின்றன என்று தெரியுமா?

சொர்க்கத்தில் சீனா…

சீனர்களின் காதலர் தின கதை சுவாரஸ்யமானது. சொர்க்கத்தின் சக்கரவர்த்திக்கு ஏழு மகள்கள். அவர்கள் குளித்துக் கொண்டிருக்கும்போது, அவ்வழியே வந்த நுவூ என்ற இளைஞன், அவர்களின் ஆடைகளை திருடிச் செல்கிறான். ஏழு பேரும் வெளியில் வர முடியாமல் தவிக்கின்றனர். கடைசி சகோதரி ஸி நூ, அந்த இளைஞனிடம் மன்றாடி, உடைகளை வாங்கிச் செல்கிறாள். அவளின் அழகில் மயங்கிய நுவூ, அவளைக் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறான். அவர்களை பிரித்து வைத்த சொர்க்கலோக சக்கரவர்த்தி, ஏழாம் சந்திர மாதத்தின், ஏழாம் நாளில் மட்டுமே சந்திக்க வாய்ப்பு அளிக்கிறார். அந்த நாளே சீனாவில் காதலர் தினம்.


ரோஸ் இல்லாத ஜாக்…

கிழக்கு இங்கிலாந்தின் நார்போக் பகுதியில் வேலண்டைன்ஸ் தினத்தை சிறப்பாக கொண்டாடுகின்றனர். கிருஸ்துமஸ் காலத்தில் கிருஸ்துமஸ் தாத்தா வீடுகளில் பரிசு வழங்குவதைப் போல பிரியத்திற்குரியவர்களின் பின்வாசல் கதவைத் தட்டி இனிப்புகளை வைத்துச் செல்லும் வழக்கம் இருந்துள்ளது. இவ்வாறு இனிப்புகளை வைப்பவர்கள் ஜாக் என்று அழைக்கப்பட்டனர்.

நட்புக்கு மரியாதை...

Loading...

பின்லாந்து நாட்டில் வேலண்டைன்ஸ் டே சற்று வித்தியாசமானது. இது காதலர்களுக்கான தினம் அல்ல. இந்த நாளை அவர்கள் ‘ஸ்டேவான்பாபியா’ என்று அழைக்கின்றனர். அதாவது இதற்கு நண்பர்கள் தினம் என்று பொருள். நண்பர்களாய் இருப்பவர்கள் இந்த நாளை விமரிசையாக கொண்டாடுகின்றனர். நண்பர்களுக்கு வாழ்த்து அட்டைகள் அனுப்புவதும், பரிசுகள் கொடுப்பதும் என இந்த நாளை சிறப்பாக கொண்டாடுகின்றனர். எங்கெங்கோ இருக்கும் நண்பர்கள் எல்லாம் ஒன்றாக கூடி இந்த நாளை உற்சாகத்துடன் கொண்டாடுவது சிறப்பம்சம்.

வித்தியாசமான கொரியா...

கொரியாவில் பிப்ரவரி 14 தான் காதலர் தினம். காதலியர் தங்கள் காதலர்களுக்குச் சாக்லேட் பரிசளிப்பதுதான் இந்த நாளின் விசேஷம். ஆனால் காதலர்கள் அந்த நாளில் காதலியருக்கு சாக்லேட் கொடுக்க மாட்டார்கள். என்ன கொடுமை இது என புலம்பிய கொரியா மார்ச் 14-ம் தேதியை வொயிட் டே, வெள்ளை தினம், என கொண்டாடுகிறது. இந்த நாளில் காதலர்கள் காதலியருக்கு சாக்லேட்களை வட்டியும் முதலுமாக வாங்கிக் கொடுக்க வேண்டும்.

காதலை புனிதமாக்கிய பிரான்ஸ்...

பிரான்ஸ் நாட்டில் வேலண்டைன்ஸ் தினத்தை சிம்பிளாக ‘புனித வேலண்டைன்’ என்று அழைக்கிறார்கள். ஆனால் கொண்டாடுவதென்னவோ மற்ற நாடுகளைப் போல்தான்.

ஹாலிடே ஆஃப் செக்ஸ்...

பிரேசில் நாட்டில் பிப்ரவரி 14-ம் தேதியை ஹாலிடே ஆஃப் செக்ஸ் என்று அழைக்கின்றனர். அந்த நாளை பிரேசில் நாட்டினர் அமர்க்களப்படுத்துவார்கள். அதேபோல் அவர்களுக்கு காதலர் தினம் வேறு தனியாக ஒருநாள் உண்டு. அது ஜூன் 2-ம் தேதியன்று காதலர்கள் மற்றும் தம்பதியர் வாழ்த்து அட்டை, சாக்லேட், பரிசு, முத்தம் என சகலத்தையும் பரிமாறிக்கொள்வது வாடிக்கை.

ஈடு செய்ய முடியாத இந்தியா...

இந்தியாவில் காதலர் தின ஆதரவு, எதிர்ப்பு போராட்டங்கள் நடந்தபடி இருந்தாலும் காதலர்கள் ஒரு புரட்சியின் வெற்றியாகவே காதலர் தினத்தை கொண்டாடித் திளைக்கின்றனர்.

- ஜெனிஃபர் டேனியல், செய்தியாளர், நியூஸ்18 தமிழ்நாடு
First published: February 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...