• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • பெண்களின் குடும்ப வாழ்க்கை மற்றும் அலுவலக வாழ்க்கையை ஒர்க் ஃபிரம் ஹோம் எவ்வாறு பாதித்துள்ளது..?

பெண்களின் குடும்ப வாழ்க்கை மற்றும் அலுவலக வாழ்க்கையை ஒர்க் ஃபிரம் ஹோம் எவ்வாறு பாதித்துள்ளது..?

ஒர்க் ஃபிரம் ஹோம்

ஒர்க் ஃபிரம் ஹோம்

கோவிட் தொற்றின் துவக்கத்தில் வேறு வழியின்றி கொடுக்கப்பட்ட ஒர்க் ஃப்ரம் ஹோம்

  • Share this:
இன்றைய காலகட்டத்தில் வீட்டில் கணவன் மனைவி என இருவரும் வேலைக்கு சென்றால் மட்டுமே, குடும்பத்தின் பொருளாதார நிலையை சமாளிக்க முடிகிறது. நிலைமை இப்படி இருக்கும் போது குழந்தைகளையும் வைத்து கொண்டு, ஒரு பெண் வேலை செய்வது என்பது எளிதான விஷயம் இல்லை. குடும்ப பொறுப்புகளையும் சுமந்து கொண்டு, அலுவலக வேலைகளையும் திறம்பட நிர்வகிக்கும் ஒரு தாயின் வாழ்க்கை மிகவும் கடினமான ஒன்று.

கோவிட் தொற்றின் துவக்கத்தில் வேறு வழியின்றி கொடுக்கப்பட்ட ஒர்க் ஃப்ரம் ஹோம் வேலை முறை பாலின் பேதமின்றி வேலை - வாழ்க்கை இரண்டையும் பேலன்ஸ் செய்ய விரும்பியவர்களுக்கு வரப்பிரசாதமாக கருதப்பட்டது. குறிப்பாக பெண்களுக்கு குழந்தைகளை கவனித்து கொள்ள அவர்களுடன் நேரம் செலவழிக்க WFH முறை சிறந்த தீர்வாக சொல்லப்பட்டது.

எல்லாம் சில மாதங்கள் தான். ஏனெனில் வீட்டிலேயே இருப்பதால் 24 மணி நேரமும் குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை கவனிப்பது போன்ற தினசரி வேலைகளுக்கு மத்தியில், அலுவலக வேலைகளை சரிவர செய்வது மற்றும் வேலை - தனிப்பட்ட வாழ்க்கையை பேலன்ஸ் செய்வது கடினமான பணியாக மாறிவிட்டது. வேலை செய்யும் பெண்களின் வாழ்க்கையில் WFH எவ்வாறு பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

அதிக பொறுப்புகள் & சவால்கள்:

தொற்று காரணமாக ஊழியர்கள் மட்டுமல்ல குழந்தைகளும் ஆன்லைனே கதி என்று கிடக்கிறார்கள். ஆன்லைனில் பள்ளி வகுப்புகள் நடைபெறுவது குழந்தைகளுக்கு மிகவும் வித்தியாசமான ஒன்று. எனவே அவர்கள் பாடத்தை சரியாக கவனிக்கிறார்களா என்பதை கூடவே இருந்து ஒருவர் பார்க்க வேண்டி இருக்கிறது. பெரும்பாலான வீடுகளில் இந்த பொறுப்பு ஒர்க் ஃப்ரம் ஹோமில் இருக்கும் தாயின் மீது தான் விழுகிறது. ஆன்லைன் கிளாஸை குழந்தைகள் சரியாக அட்டென்ட் செய்கிறார்களா, அவர்களுக்கு பாடம் புரிகிறதா என பார்த்து அவர்களுக்கு உதவி கொண்டே, தாங்களும் அலுவலக வேலைகளை கவனிப்பது பெண் ஊழியர்களுக்கு பெரும் சவாலாக மாறி இருக்கிறது.



ஆரோக்கிய பாதிப்பு:

WFH முறையில் வேலைபார்க்கும் பெண்கள் நீண்ட நேரம் வீட்டு வேலைகளையும் பார்த்து கொண்டு அலுவலக வேலைகளையும் கவனித்து கொள்வது அவர்களது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.சமயத்தில் போதுமான ஓய்வு கிடைக்காத சூழலில் பெண்களின் உடல் ஆற்றல் அதிவிரைவாக வெளியேறி மிகவும் சோர்வுக்கு உள்ளாகின்றனர். இதே நிலை பல நாட்கள் தொடரும் போது அது அவர்களது மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது.

கை , கால் மூட்டு வலிகளுக்கு காரணமாக இருக்கும் 5 பிரச்னைகள் : உடனே மருத்துவரை அணுகுங்கள்...

தொழில் வாழ்க்கை பாதகங்கள்:

வீட்டிலிருந்தே அலுவலக வேலைகளை செய்யும் போது கூடவே வீட்டு பொறுப்புகளையும் சேர்த்தே செய்ய நேரிடுவதால், தொழில் வாழ்க்கையில் அவர்கள் முன்னே இருக்கும் பல சாத்தியமான வாய்ப்புகளை அவர்களால் வெற்றிகளாக மாற்ற முடிவதில்லை.



ஓய்வுக்கு நேரமில்லை:

அலுவலகம் சென்றால் கூட 8 மணி நேரம் தான் வேலை, ஆனால் WFH-ல் பெரும்பாலானோர் 10 மணி நேரத்திற்கு அதிகமாக வேலை செய்ய வேண்டிய நிலை காணப்படுகிறது. வழக்கத்தை விட கூடுதலாக வேலை செய்து விட்டு ஓய்வெடுக்கலாம் என்றால், குடும்ப பொறுப்புகள் பெண்களுக்கு ஓய்வளிப்பதில்லை. இதனால் அதிக சோர்வு, மன அழுத்தம் மற்றும் எரிச்சல் உள்ளிட்டவை பெண்களிடையே அதிகரித்திருப்பதை பார்க்க முடிகிறது.

மாதவிடாய் வலியை குறைக்கும் யோகாசனங்கள்… உங்களுக்கும் உதவலாம்..!

குறைவான தொடர்பு :

அலுவலகம் செல்லும் போது அங்கிருக்கும் சக ஊழியர்களுடன் சிரித்து, பேசி அரட்டை அடித்து கொண்டே வேலை பார்க்கும் சுவாரசியங்கள், சமூககூட்டங்கள், பல மீட்டிங்குகள் உள்ளிட்ட பலவற்றை வீட்டிலேருந்தே வேலை பார்க்கும் பெண்கள் இழப்பதால் சக ஊழியர்களுடனான தொடர்பு மிகவும் குறைந்து போகிறது. இது அவர்களின் செயல்திறனை சில நேரங்களில் பாதிக்கிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: