• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • வெயில் காலத்தில் செல்லப்பிராணிகளைப் பராமரிப்பது எப்படி ?

வெயில் காலத்தில் செல்லப்பிராணிகளைப் பராமரிப்பது எப்படி ?

செல்லப்பிராணிகள்

செல்லப்பிராணிகள்

செல்லப் பிராணிகள் மட்டுமல்லாமல் தெரு நாய்களுக்கும் முடிந்தால் நீர் அருந்த வையுங்கள்.

  • News18
  • Last Updated :
  • Share this:
மனிதர்களைக் காட்டிலும் வெயில் காலத்தில் அதிகமாகக் கஷ்டப்படுவது கால்நடை விலங்குகள்தான். அதுவும் வாய் திறந்து சொல்ல முடியாத அவைகளுக்குப் பாதுகாப்பு மனிதர்கள்தான். செல்லப்பிராணிகளை எப்படி பராமரிப்பது என்பதைக் காணலாம்.

வெப்பத்திலிருந்து பாதுகாப்பு : வெயிலின் தாக்கத்தைக் கால்நடைகள் நாக்கு வழியாகவும், கால் விரல்களின் வழியாக வடியும் நீர் மூலமாக வெளிப்படுத்தும். அதுவும் மனிதர்களைக் காட்டிலும் கால்நடைகளுக்கு எளிதில் நீர் வற்றிவிடும். ஆய்வுப் படி பக் போன்ற தரை தள நாய் மற்றும் பூனைகளுக்கு நாக்கு வழியாக வெப்பம் வெளியேறாது. அவை வெயிலால் ஏற்படும் நோயினாலும் அதிக பாதிப்படையும் வாய்ப்புகள் உண்டு. அதேபோல் அதிக வயதான மற்றும் எடை நிறைந்த பிராணிகளைச் சற்றுக் கூடுதலாகவே கவனிக்க வேண்டும். Fido and Fluffy போன்ற நாய்களுக்கு நீர் விரைவில் வற்றிவிடும். அவை அதிகம் வெயிலில் சுற்றவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

நோய்த் தொற்று இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் : வெயில் நாட்களில் கால்நடைகளுக்கு இருக்கும் பிரச்னை நோய்த் தொற்று. முடி கொட்டுவதும் அதிகமாக இருக்கும். இதற்கு நீங்கள் செல்லப்பிராணிகளுக்கும் சம்மர் ஹேர் கட் போன்று அதன் முடிகளை வெட்டிவிடுங்கள். இதனால் அவை வெயில் தாக்கத்திலிருந்து சற்று நிம்மதியாக இருக்கும். காற்றோட்டம் கிடைக்கும். நோய்த் தொற்றுகளும் ஏற்படாது. புல்வெளி, மண் போன்ற வெளியிடங்களில் விளையாடும்போது பாதுகாப்பாகக் கவனியுங்கள். கால்நடை மருத்துவரை அணுகி நோய்த் தொற்றுக்கான பாதுகாப்பு ஆலோசனை பெறுங்கள்.



வெளியே கூட்டிச் செல்வதைத் தவிருங்கள் : வெயில் நாட்களில் செல்லப்பிராணிகளை அதிகமாக வெளியே கொண்டு செல்வதைத் தவிருங்கள். அப்படிக் கூட்டிச் சென்றாலும் காருக்குளேயே நாயை விட்டுச் செல்வதைத் தவிருங்கள்.கார் பார்க்கிங்கில் இருக்கும்போது வெப்பம் உள்ளே அதிகமாகும். இது செல்லப்பிராணிகளால் தாங்கிக் கொள்ள முடியாது. பல இடங்களில் செல்லபிராணிகளுக்கு அனுமதி இருக்காது. இந்த சிக்கல்களைத் தவிர்க்க வெயில் நாட்களில் மட்டும் செல்லபிராணிகளை வெளியே கூட்டி செல்வதைத் தவிர்க்கவும்.

செல்லப்பிராணிகளுக்கான சன் ஸ்கிரீன் பயன்படுத்துங்கள்: மனிதர்களைப் போல் செல்லப்பிராணிகளுக்கும் சன் ஸ்கிரீன் அவசியம். அது வெயில் தாக்கத்தைக் குறைக்கக் கூடும். ஈரப்பதத்தைத் தக்க வைக்கும். கால்நடை மருத்துவரிடம் உங்கள் செல்லப் பிராணிகளுக்குப் பொருத்தமான சன் ஸ்கிரீரைக் கேட்டு வாங்கிப் பயன்படுத்துங்கள்.



அதிகமாக நீர் கொடுங்கள் : கால்நடைகளுக்கு உடல் நீர் எளிதில் வற்றிவிடும். அதன் நீரேற்றத்தைத் தக்க வைக்க நாம்தான் அதைக் கண்காணிக்க வேண்டும். இல்லையெனில் மூச்சு வாங்க ஆரம்பிக்கும். ஆற்றல் குறைந்து சோர்வாகிவிடும். எப்போதும் அதன் அருகில் நீர் வைத்துக் கொண்டே இருங்கள். உங்கள் செல்லப் பிராணிகள் மட்டுமல்லாமல் தெரு நாய்களுக்கும் முடிந்தால் அருந்த நீர் வையுங்கள்.வெயில் காலத்தில் இதைவிட அவைகளுக்கு வேறெதுவும் வேண்டாம்.

இதையும் படிக்க : 

கோவிலில் கீர்த்தனை பாடும் நாய்... வைரலாகும் வீடியோ

நாய்களைக் காட்டிலும் ஆண்களின் தாடியில் அதிக கிருமி: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

 




லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: