கெமிக்கல்களே இல்லாமல் இயற்கை வழியில் கொசுவை ஒழிக்க இதோ இருக்கு தீர்வு..!

பாலிவுட் நடிகர் அக்‌ஷை குமார் கூட இதை முயற்சியை செய்து பகிர்ந்துள்ளார்.

கெமிக்கல்களே இல்லாமல் இயற்கை வழியில் கொசுவை ஒழிக்க இதோ இருக்கு தீர்வு..!
கொசு
  • News18
  • Last Updated: August 20, 2019, 8:04 PM IST
  • Share this:
மழைக்காலம் வந்தாலே கொசுவும் கூடவே வந்துவிடும். எதை வேண்டுமானாலும் சமாளித்துவிடலாம். கொசுத்தொல்லையை சமாளிக்கவே முடியாது. விளம்பரங்களில் கூட அந்த மூலையை சுத்தம் செய்ய 2 லட்சம் இந்த மூலையை சுத்தம் செய்ய ஐந்து லட்சம் என வீட்டு உரிமையாளரிடம் பேரம் பேசுவார். காரணம் கேட்டால் அந்த மூலைகளில் கொசுக்கள் இருக்கும் என்பார். ஆக இந்தக் கொசுக் கடி தொல்லை அவ்வளவு இம்சையை அளிக்கவல்லது. நீங்களும் அப்படி அனுபவிக்கிறீர்கள் எனில் இந்த குறிப்புகளை செய்து பாருங்கள்.

வேப்பிலை மற்றும் லாவண்டர் எண்ணெய் : பல ஆய்வுகளில் வேப்பிலை கொசுக்களை ஒழிக்க சிறந்தது என நிரூபித்துள்ளனர். கொசுவத்திகள், லோஷன் போன்ற பொருட்களிலும் வேப்பிலை ஃப்ளேவர்கள் உண்டு. எனவே வேப்ப எண்ணெயுடன் சம அளவு லாவண்டர் எண்ணெயும் கலந்து கை , கால் போன்ற இடங்களில் தடவிக் கொண்டால் கொசு உங்களை நெருங்கவே நெருங்காது.

எலுமிச்சை மற்றும் கிராம்பு : எலுமிச்சையை இரு துண்டுகளாக நறுக்கி அதில் கிராம்பு முனைகளை செருகுங்கள். இதனால் கொசுக்கள் அகலும். பாலிவுட் நடிகர் அக்‌ஷை குமார் இதை முயற்சி செய்து பார்த்து வெற்றி அடைந்ததால் இன்ஸ்டாவில் ரசிகர்களுக்கும் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
துளசி : துளசி வாசனை கொசுக்களுக்கு பிடிக்காது என்பதால் உங்கள் படுக்கைக்கு அருகில் துளசி இலை, கிளைகளை பிடிங்கி வைத்துக்கொள்ளுங்கள். இதனால் கொசுத்தொல்லையை தவிர்க்கலாம்.

பூண்டு : பூண்டின் நெடி வாசனை கொசுக்களுக்கு அரவே பிடிக்காது. எனவே இதைத் தவிர்க்க பூண்டை நசுக்கி தண்ணீரில் கொதிக்க வைத்து அதை ஸ்பிரே பாட்டிலில் நிரப்புங்கள். பின் அதை அறை முழுவதும் ஸ்பிரே செய்துவிட்டால் கொசுக்கள் பறந்து ஓடிவிடும்.

Loading...

கற்பூரம் : கற்பூரத்தை வீட்டின் மூலைகளில் தூளாகி தூவினால் கொசுக்கள் மொய்க்காது. கற்பூரத்தை தேங்காய் எண்ணெயில் கரைத்து கை கால்களில் தடவினாலும் கொசு உங்களை நெருங்காது.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...