ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

வீட்டிலேயே இருப்பது எரிச்சலை உண்டாக்குகிறதா..? ஆலியா பட் தரும் இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!

வீட்டிலேயே இருப்பது எரிச்சலை உண்டாக்குகிறதா..? ஆலியா பட் தரும் இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!

ஆலியாபட்

ஆலியாபட்

எவ்வளவு நேரம்தான் சும்மாவே இருப்பது..வெளியே போய்தான் பார்க்கலாமா என்று மனம் சொல்லும் ஆனால் கேட்காதீர்கள்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  முதல் இரண்டு அல்லது அதிகபட்சமாக ஒரு வாரம் வீட்டில் இருந்தபோது மகிழ்ச்சியை உணர்ந்திருக்கலாம். ஆனால் இப்படியே நீண்ட நாள் தொடர்வது ஒரு கட்டத்தில் எரிச்சலை உண்டாக்கலாம்.

  எவ்வளவு நேரம்தான் சும்மாவே இருப்பது.. வெளியே போய்தான் பார்க்கலாமா என்று மனம் சொல்லும் ஆனால் கேட்காதீர்கள். பாலிவுட் நடிகை ஆலியா பட் சொல்லும் இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க.. நாள் கழிவதே தெரியாது.

  புத்தகம் படிப்பது : வீட்டில் இருக்கும் நேரத்தில் எழுத்தாளர்களின் புத்தகம், கதை புத்தகம் , நாவல், வரலாற்று புத்தகங்கள் இப்படி எந்தவகை புத்தகங்கள் பிடிக்கிறதோ அதை படிக்கலாம். ஆன்லைனிலும் படிக்கலாம். இதைத்தான் ஆலியாவும் செய்கிறார்.
   
  View this post on Instagram
   

  stay home & .... finish a book 📖😇


  A post shared by Alia Bhatt ☀️ (@aliaabhatt) on  சமையல் : சமையல் செய்வது சிறந்த கலை. அது பலருக்கும் வந்துவிடாது. இதுவரை அந்த அனுபவம் இல்லை என்றால் இந்த தருணத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஆலியா பட்டும் வீட்டில் தற்போது சமையல் கற்றுக்கொண்டு வருகிறாராம்.


  கற்றல் : தற்போது ஆன்லைனிலேயே கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் வந்துவிட்டன. அதேபோல் இந்த நேரத்தில் ஆன்லைனில் படிக்க பல பல்கலைக்கழகங்களும் இலவசக் கல்வியை அறிவித்துள்ளன. அப்படி இலவசமாக ஆன்லைனில் படிக்க இதுவே நல்ல வாய்ப்பு.
   
  View this post on Instagram
   

  Stay home & .. learn something new 📚


  A post shared by Alia Bhatt ☀️ (@aliaabhatt) on  இயற்கையை ரசிக்கலாம் : மாலை நேரத்தில் காற்றோட்டமாக ஜன்னல் அல்லது பால்கனியில் நின்று இயற்கையை ரசிக்கலாம். ஆலியாவும் சூரிய மறைவை ரசிக்கும் காட்சிகளை பகிர்ந்துள்ளார்.
   
  View this post on Instagram
   

  stay home &... watch the sunset 🌄 #stayhomestaysafe P.S - 📸 credit to my all time fav photographer RK 💗


  A post shared by Alia Bhatt ☀️ (@aliaabhatt) on  குடும்பத்துடன் அல்லது செல்லப்பிராணிகளுடன் செலவழித்தல் : வீட்டில் செல்லப் பிராணிகள் இருந்தால் அவற்றுடன் செலவழியுங்கள் அல்லது குடும்பத்தினருடன் பேச கூட நேரமில்லை என புலம்பியோருக்கு இதுவே நல்ல வாய்ப்பு.
   
  View this post on Instagram
   

  Time to show off some photography.. Ufff!💗 #lovethypet


  A post shared by Alia Bhatt ☀️ (@aliaabhatt) on  பார்க்க : 

  Published by:Sivaranjani E
  First published: