சிலர் பற்களை தேய்க்கும்போது பின்புறமும் தேய்க்க மறந்துவிடுவார்கள். சிலர் தேய்த்தாலும் நன்கு தேய்க்காமல் விட்டுவிடுவார்கள். அந்த விடுபட்ட அழுக்குகள் சேர்ந்து ஒருநாள் மஞ்சள் அடுக்காக பற்களில் உருவாகியிருக்கும். இந்த அனுபவத்தை நீங்களும் உணர்கிறீர்கள் எனில் இந்த விஷயங்களை ஃபாலோ பன்னுங்க.
தேவையான பொருட்கள் :
பேக்கிங் சோடா - 2 Tsp
தேங்காய் எண்ணெய் - 1 Tsp
ஆப்பிள் சீடர் வினிகர் - 1 Tsp
எலுமிச்சை சாறு - 1 Tsp
டூத் பேஸ்ட் - 1 Tsp
அலுமினியத்தாள்
செய்முறை :
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு பவுலில் போட்டு பேஸ்ட் போல் கலந்துகொள்ளவும்.
அந்தக் கலவையை அலுமினியத் தாளை விரித்து அதில் பரப்பியவாறு வைக்கவும். பின் அதை அப்படியே எடுத்து பற்களை சுற்றிலும் ஒட்டிவிட வேண்டும். 2 நிமிடங்கள் கழித்து நீக்கிவிட்டு பிரெஷ் கொண்டு தேய்த்துவிட்டு வாயை வெந்நீரால் கொப்பளித்தால் பற்களில் உள்ள கறை குறைந்திருக்கும்.