• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • உங்கள் மூக்கை சுற்றி இருக்கும் கருமையை நீக்க உதவும் எளிய வழிகள்!

உங்கள் மூக்கை சுற்றி இருக்கும் கருமையை நீக்க உதவும் எளிய வழிகள்!

மூக்கை சுற்றி இருக்கும் கருமை

மூக்கை சுற்றி இருக்கும் கருமை

நமது சமையலறையில் இருக்கும் பொருட்களை கொண்டே மூக்கை சுற்றிய பகுதிகளில் இருக்கும் கருமையான புள்ளிகளை சரிசெய்ய முடியும்.

  • Share this:
மூக்கை சுற்றிய பகுதிகளில் சிலருக்கு கருமை படர்ந்திருக்கும். சிலருக்கு சொரசொரப்பாகவும், கருமையான புள்ளிகளாகவும் இருக்கும். இதனால் முகத்தில் அப்பகுதி மட்டும் அசிங்கமாகவும் காணப்படும். இவற்றை இயற்கையாகவே நமது சமையலறையில் இருக்கும் பொருட்களை கொண்டே சரி செய்வது எப்படி என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

எலுமிச்சை



எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. ஒரு பழத்தை எடுத்து அதனை இரண்டாக வெட்டி உங்கள் மூக்கின் வெளிப்பகுதியில் இருக்கும் கருமையை ஸ்கரப் செய்யுங்கள். இதனை வாரம் மூன்று முறை செய்து வந்தால் விரைவில் கருமை மறைந்துவிடும்.

கற்றாழை

கற்றாழை , alovera

கற்றாழை ஜெல்லை எடுத்து கருமை இருக்கும் பகுதியில் அப்ளை செய்யுங்கள். அதனை அப்படியே சிறிது நேரம் உலரவிட்டு பின்னர் நீரில் கழுவுங்கள். இயற்கையாக கிடைக்கும் கற்றாழையை எடுத்தும் அதில் உள்ள சதை பகுதியை நேரடியாக கருமை இருக்கும் பகுதியில் தடவியும் கழுவலாம்.

முட்டை



முட்டையின் வெள்ளைக் கருவை தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து, பின் மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கருமை மறையும்.

தக்காளி



தக்காளியில் உள்ள ஆன்டி-செப்டிக் தன்மை, கருமையை எளிதில் வெளியேற்ற உதவும். அதற்கு தக்காளியை இரண்டாக வெட்டி, அதனைக் கொண்டு சருமத்தை 15 நிமிடங்கள் மசாஜ் செய்து வந்தால் போதுமானது. உடனடி பலன் கிடைக்க தக்காளி சாறுடன் மஞ்சள் தூள் கலந்தும் பயன்படுத்தலாம்.

வினிகர்



வினிகரை எப்போதும் நேரடியாக பயன்படுத்தக்கூடாது. வினிகருடன் தண்ணீர் அல்லது தயிர் சேர்த்து உங்கள் மூக்கை சுற்றிய பகுதிகளில் அப்ளை செய்து கழுவி வாருங்கள், கருமை மறைந்து சருமம் அழகாகும்.

யோகர்ட்

யோகர்டில் லாக்டிக் அமிலம் மற்றும் ப்ளீச்சிங் தன்மை நிறைந்துள்ளது. எனவே யோகர்டை உங்கள் மூக்கை சுற்றிய கருமை நிற பகுதியில் தடவி உலரவிட்டு கழுவி வாருங்கள். வாரம் இரண்டு நாட்கள் செய்து வந்தால் போதுமானது..

ஆரஞ்சு பழம்



ஆரஞ்சு பழம் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சரும அழகிற்கும் உதவுகிறது. இதற்கு ஆரஞ்சு ஜூஸ் உடன் மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் செய்யவும். இந்த பேஸ்டை கருமை நிற பகுதியில் தடவி இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடுங்கள். மறுநாள் காலையில் குளிர்ந்த தண்ணீரில் கழுவி வாருங்கள், நல்ல பலன் தெரியும்.

தேன்



தேனை சாதாரணமாக முகத்தில் தடவி உலர வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் நீங்குவதோடு, கருமையும் நீங்கும். தேன் உங்கள் சருமத்தில் மாய்சரைசராகவும் செயல்படுகிறது.

தேங்காய் எண்ணெய்



எலுமிச்சை சாறு, தேங்காய் எண்ணய்யை ஒன்றாக கலந்து கருமை நிற பகுதியில் தடவுங்கள். இதனை ஒரு நாள் விட்டு ஒருநாள் செய்து வந்தால் விரைவில் கருமை நீங்கி பொலிவாகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: