செலவே இல்லாமல் பிளாக் ஹெட்ஸ நீக்குவதற்கு சில டிப்ஸ்...

news18
Updated: August 9, 2018, 7:14 PM IST
செலவே இல்லாமல் பிளாக் ஹெட்ஸ நீக்குவதற்கு சில டிப்ஸ்...
news18
Updated: August 9, 2018, 7:14 PM IST
முகத்தில் கரும்புள்ளிகள் வந்தாலே பெரும்பாடுதான். முகத்தின் பொலிவு போய்விடும். கரும்புள்ளிகளை நீக்கவே பார்லருக்கு தனி செலவு செய்பவர்கள் அதிகம். செலவு ஒருபுறம் என்றால் கரும்புள்ளிகளை நீக்கும் போது உண்டாகும் வலி ஒருபுறம். காசும் கொடுத்தும் வலியோடுதான் கரும்புள்ளிகளை நீக்க வேண்டும். ஆனால் தினமும் இயற்கை முறையில் கரும்புள்ளிகளை நீக்குவதில் கவனம் செலுத்தினால் போதும், பணமும் மிச்சமாகும் அதனுடன் வலியும் இருக்காது. வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே கரும்புள்ளிகளை நீக்கலாம்

நீராவி


கரும்புள்ளிகளை இயற்கை மற்றும் எளிமையான முறையில் அகற்ற நீராவியே சிறந்தது. நீங்கள் செய்ய வேண்டியது, ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் உங்கள் முகத்தை நீராவி பிடிக்க வேண்டும். பிறகு நீங்கள் வைத்திருக்கும் மாஸ்க் கிரீம் அல்லது ஸ்கெரப்பர்களை பயன்படுத்தி அழுக்குகளை நீக்கலாம்.

ஓட்ஸ்மூன்று தேக்கரண்டி தயிர், சிறிதளவு பிரெஷ் எலுமிச்சை சாறு மற்றும் ஆலிவ் எண்ணெய், மற்றும் இரண்டு டீஸ்பூன் ஓட்மீல் ஆகியவற்றை கலந்து அந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் போட்டு சுமார் பத்து நிமிடம் கழித்து கழுவவும். மேலும், நீங்கள் ஓட்ஸ் மற்றும் ரோஸ் வாட்டர் கொண்டு பேஸ்ட் தயாரித்து அதையும் பயன்படுத்தலாம்.
Loading...
கடலை மாவு


கடலை மாவு, மஞ்சள் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் தயாரித்து அதை பயன்படுத்தலாம். வறண்ட சருமம் உள்ளவர்கள் இதை பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் கடலைமாவு சருமத்தில் இருக்கும் எண்ணெய் பசையை வெளியேற்றும். அதனால் சருமம் மேலும் வறட்சியடையும்.

ஆரஞ்சு தோல்


கரும்புள்ளியை அகற்ற மற்றொரு பயனுள்ள வழி ஆரஞ்சு தோல். காய்ந்த ஆரஞ்சு தோலை பவுடர் செய்து அதில் சிறிதளவு தண்ணீர் அல்லது பால் ஊற்றி பேஸ்ட் போல் ஒரு மாஸ்க் தயாரித்து அதை முகத்தில் பூசி வர விரைவில் கரும்புள்ளி போய்விடும்.

அரிசி


பாலில் கொஞ்சம் அரிசி சேர்த்து அதை நான்கு அல்லது ஐந்து மணிநேரம் ஊற வைக்கவும். கலவையை நன்றாக அரைத்து அதன் பேஸ்ட்டை முகத்தில் பயன்படுத்தலாம். அரிசி மாவு மிகச்சிறந்த கிளன்சராகவும் ஸ்கிரப்பாகவும் பயன்படும். சருமத் துளைகளுக்குள் இருக்கிற அழுக்குகளை வெளியேற்றும்.

தேன்


சிறிதளவு தேனை கரும்புள்ளி இருக்கும் இடத்தில் தடவி 10 நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவவும். இவ்வாறு செய்து வந்தால் அது ஸ்கின் போர்ஸை இறுக்கமாக்கி கரும்புள்ளியை அகற்றும். தேன் சருமத்தை மிருதுவாகவும் மென்மையாகவும் வைத்திருக்க உதவும்.

செய்யக்கூடாதவை

எத்தனை விதமான முறையிலும் ஸ்கரப் செய்து முகத்தில் போட்டாலும் உணவு முறையில் மாற்றம் இல்லாமல் கரும்புள்ளிகளை நீக்க முடியாது. அதனால் அதிகப்படியான எண்ணெய் மற்றும் ஜங்க் உணவை எடுக்காதீர்கள். மதுபானங்கள் மற்றும் புகைபிடிப்பதை தவிர்த்து விடுங்கள். முகத்தில் மேக்கப்புடன் உறங்கச் செல்லாதீர்கள். எக்காரணத்தை கொண்டும் கரும்புள்ளியை கையால் அழுத்த வேண்டாம். அவ்வாறு செய்வது கரும்புள்ளிகளை அதிகப்படுத்தும்.
First published: August 9, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...