Happy Holi 2021 : காண்டாக்ட் லென்ஸ்கள் அணிந்தவர்கள் ஹோலியின் போது பாதுகாப்பாக இருக்க டிப்ஸ்!

கோப்புப் படம்

உற்சாகம் காரணமாக, காண்டாக்ட் லென்ஸ்கள் அணிந்தவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
வண்ணங்களின் திருவிழா ஹோலி இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மார்ச் 28, 29ம் தேதிகளில் கொண்டாடப்பட்டு உள்ளது. ஹோலி திருவிழா என்பது வண்ணப்பொடிகள், நீர் பலூன்கள் கொண்டு ஒருவர் மீது ஒருவர் வண்ணங்களை தெளித்து விளையாடும் திருவிழாவாகும்.

கொண்டாட்டங்களை பாதுகாப்பானதாக வைத்திருக்க, ஒருவர் கண்களையும், தோலையும் ரசாயன வண்ணங்களில் இருந்து பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். பொதுவாக, நம் வாய், மூக்குகள் குறித்து மிகவும் கவனமாக இருக்கிறோம், ஆனால் உற்சாகம் காரணமாக, காண்டாக்ட் லென்ஸ்கள் அணிந்தவர்கள் கவனமாக இருக்க வேண்டும். சமீபத்திய ஆண்டுகளில் இயற்கையான வண்ணங்களுக்கு பதிலாக ரசாயனங்கள் கலந்த வண்ண பொடிகள் பயன்படுத்துவதால் பொதுவாக அனைவரும் பாதுகாப்பாக இருப்பது அவசியம்.

ஹோலி உங்கள் கண்களின் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது?

ஹோலி கொண்டாட்டங்களின் உற்சாகம் நம் கண்களின் ஆரோக்கியத்திற்கு லேசான பாதிப்புகளை கொடுத்தாலும் ஓரளவு சேதம் ஏற்படுவது கிட்டத்தட்ட தவிர்க்க முடியாதது. எரிச்சல்கள், சிவத்தல், அரிப்பு, ஒவ்வாமை, வீக்கம் என பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இதனால் காண்டாக்ட் லென்ஸ்கள் அணிந்தவர்கள் தங்கல் கண்கள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

ஹோலி நிறங்கள் எவ்வாறு காண்டாக்ட் லென்ஸ்களை பாதிக்கின்றன?

தற்போது தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் போன்ற நச்சுப் பொருள்களை கொண்டு செயற்கையான முறையில் வண்ணங்கள் தயாரிக்கப்படுகிது. அவற்றில் ஈய ஆக்சைடு, செப்பு சல்பேட், அலுமினிய புரோமைடு, பிரஷ்யன் நீலம் மற்றும் மெர்குரி சல்பைட் போன்ற ரசாயனங்கள் உள்ளன. இதேபோல், சிலிக்கா, குரோமியம், காட்மியம்என ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் ராசயங்கள் கலக்கப்படுவதால் உங்கள் சரும மற்றும் கண் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

காண்டாக்ட் லென்ஸ்கள் அணிந்தவர்கள் லென்ஸ்கள் வண்ணங்களை உறிஞ்சுவதை அறிந்து கொள்ள வேண்டும். எனவே ஹோலியன்று நீங்கள் தூவும் வண்ணங்கள் லென்ஸின் மேற்பரப்பில் ஒட்டிக்கொள்கின்றன, இதனால் கண்களுக்குள் அவை செல்கிறது. இந்த வண்ணங்களில் பெரும்பாலானவை மேற்கண்ட நச்சு இரசாயனங்களை கொண்டிருப்பதால், கண்களில் ஏற்படும் தாக்கம் கடுமையாக இருக்கும். இது கார்னியாவை பாதித்து, கண்ணின் கருவிழிகளில் கடுமையான வீக்கத்தை ஏற்படுத்தும்.

ஹோலி பண்டிகையில் நீங்கள் காண்டாக்ட் லென்ஸ்கள் அணிந்தால் என்ன செய்ய வேண்டும்?

* முதலில் ஹோலி கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்கு முன்னர் உங்கள் காண்டாக்ட் லென்ஸ்கள் கழற்றவும்.

* நீங்கள் காண்டாக்ட் லென்ஸ்கள் பயன்படுத்த வேண்டும் மற்றும் லென்ஸ் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதது எனில், நீங்கள் தினசரி பயன்பாட்டிற்காக வைத்திருக்கும் லென்ஸ்களை பயன்படுத்தலாம். இருப்பினும், கொண்டாட்டங்கள் முடிந்ததும் புதிய லென்ஸ்கள் அணிய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

* நீங்கள் தினசரி லென்ஸ்கள் அணிந்திருந்தாலும், எந்த வண்ண பொடிகள் அல்லது தண்ணீர் உங்கள் கண்கள் பரப்பில் படாமல் பார்த்து கொள்ளுங்கள்.

* உங்கள் கண்களில் சிறிதளவு வண்ண பொடிகள் பட்டிருக்கும் உணர்வு இருந்தால், நீங்கள் உடனடியாக லென்ஸ்களை எடுத்து விடுங்கள். ஒரே லென்ஸை சுத்தம் செய்ய முயற்சிக்க வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Also read... Happy Holi 2021 : ஹோலி கொண்டாட்டத்தில் வாட்டர் கலர்களை ஏன் பயன்படுத்த கூடாது.? பாதுகாப்பாக கொண்டாட்ட வழிகள்

* முடிந்தால் காண்டாக்ட் லென்ஸ்களுக்கு மாற்றாக கண்ணாடிகளை பயன்படுத்துங்கள். ஏனென்றால், லென்ஸ்கள் போலல்லாமல் கண்ணாடிகள் பாதுகாப்பை உறுதி செய்கின்றன.

* ஏதேனும் வண்ணம் உங்கள் கண்களுக்குள் நுழைந்திருந்தால், உடனடியாக கண்களைத் தேய்க்காமல் சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும்.

* ஹோலி பண்டிகை கொண்டாட வெளியே செல்வதற்கு முன், உங்கள் கண்களை சுற்றி குளிர்ந்த கிரீம் பயன்படுத்துவதை கருத்தில் கொள்ள வேண்டும். இது கண்களின் வெளிப்புற மேற்பரப்பில் இருந்து வண்ணங்களை எளிதில் அகற்ற உதவும்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: