• HOME
 • »
 • NEWS
 • »
 • lifestyle
 • »
 • சர்வதேச ஓசோன் பாதுகாப்பு தினம்: ஓசோன் படலத்தை பாதுகாக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

சர்வதேச ஓசோன் பாதுகாப்பு தினம்: ஓசோன் படலத்தை பாதுகாக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

காட்சி படம்

காட்சி படம்

சர்வதேச ஓசோன் பாதுகாப்பு தினமானது ஓசோன் படலத்தை பாதுகாக்கும் நோக்கத்தில் கொண்டாடப்படுகிறது.

 • Share this:
  பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் ஒரு படலம் ஓசோன். ஆனால் தற்போது இதன் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பது கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. ஆக்ஸிஜனின் மூன்று அணுக்கள் ஒன்று சேர்ந்தது தான் ஓசோன் அடுக்கு அல்லது படலம் என்பர். ஓசோன் அடுக்கு என்பது ஒரு வாயு கவசமாகும். இது பூமியின் அடுக்கு மண்டலத்தில் மிக முக்கியமான அங்கமாக இருக்கிறது. ஏனெனில் சூரியனில் இருந்து வெளிப்படும் சில புற ஊதா கதிர்கள் நம்மில் தோல் புற்றுநோய்கள், கண் பாதிப்புகள், கண்புரை, நோயெதிர்ப்பு ஒடுக்கத்தை ஏற்படுத்தும்.

  மேலும் இவை தாவரங்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களையும் சேதப்படுத்தும். ஆனால் பூமிக்கு கவசமாக இருக்கும் இந்த ஓசோன் படலம் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்வீச்சை உறிஞ்சிக்கொள்கிறது. இத்தகைய படலத்தை அழிவில் இருந்து பாதுகாப்பதற்கும், ஓசோன் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16ம் தேதி ‘சர்வதேச ஓசோன் பாதுகாப்பு தினம்’ அனுசரிக்கப்பட்டது வருகிறது. இந்த தினம் ஐ.நாவினால் உருவாக்கப்பட்டது.

  ஓசோன் படலத்தை பாதுகாப்பதற்காகவும், ஓசோன் துளையை சரிசெய்வதற்காகவும், ஐ.நா 1987ம் ஆண்டு செப்.16ம் தேதி ஓசோன் அடுக்கைக் பாதிக்கும் பொருட்களின் மான்ட்ரியல் நெறிமுறை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. மேலும் உலக ஓசோன் பாதுகாப்பு தினத்தின் நினைவாக, ஓசோன் அடுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய பொறுப்புள்ள நபர்களாக நாம் இருக்க வேண்டும் என்பதை ஐ.நா வலியுறுத்தி வருகிறது. குளோரோ புளூரோ கார்பனின் பயன்பாட்டை குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறிக்கோளாக இருந்தது.

  இந்த சர்வதேச தினத்தில், ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்கான சிறந்த 5 வழிகளை நாம் அறிந்து கொள்வோம்:

  1. மாண்ட்ரீயல் நெறிமுறையின் கீழ் நுகர்வுக்கு தகுதியற்றதாகக் கருதப்படும் ஓசோன் அடுக்கை சேதப்படுத்தும் பொருட்களின் (ODS) பயன்பாட்டை நாம் குறைத்துக்கொள்ள வேண்டும். அதாவது, CFC - குளோரோஃப்ளூரோகார்பன்கள், ஹைட்ரோகுளோஃப்ளூரோகார்பன்கள் (HCFC கள்), ஹலோஜனேட்டட் ஹைட்ரோகார்பன்கள், மீதில் புரோமைடு மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு போன்ற வாயுக்கள் ஓசோன் படலத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளன. எனவே இந்த வாயுக்கள் அடங்கிய பொருட்களைத் தேர்ந்தெடுப்பதைத் நாம் தவிர்க்க வேண்டும். சில அழகுசாதனப் பொருட்கள், ஹேர் ஸ்ப்ரேக்கள், ரூம் ஃப்ரெஷ்னர்கள், ரசாயன உரங்கள், ரசாயனம் கலந்த துப்புரவு பொருட்கள் ஆகியவை தீங்கு விளைவிக்கும் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் மற்றும் சிஎஃப்சிகளைக் கொண்டிருக்கலாம். அவற்றை அதிகம் பயன்படுத்துவதை நாம் குறைந்துக் கொள்வது நல்லது.

  2. மின் சாதனங்களின் ஆய்வு மற்றும் பராமரிப்பு போன்றவை மிக அவசியம். மேலும் அவை ஓசோன் படத்தை பாதிக்கும் ODS வாயுக்களை வெளியிடும் என்பதால் அவற்றை அடிக்கடி பழுது பார்க்க வேண்டியது அவசியம். மின்சாதனகளை வீங்கி 10 - 15 வருடங்கள் முடிந்திருந்தால் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். அவை உண்மையில் தீங்கு விளைவிக்கும் வாயுக்களை வெளியிடுகின்றன.

  3. உங்கள் மின் சாதனங்களை அப்புறப்படுத்தும் போது மிகவும் கவனமாக இருங்கள். மேலும் ODS வாயுக்களை கொண்டிருக்கும் என்பதால் சாதனத்தின் குளிரூட்டும் சுற்றுக்கு சேதம் விளைவிக்காதீர்கள். குளிர்சாதனப்பெட்டிகள் மற்றும் குளிரூட்டிகளிலிருந்து ODS சரியாக மீட்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்பட வேண்டும். அது வளிமண்டலத்தில் வெளியிடப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே, ஒரு தொழில்நுட்ப வல்லுநரால் அவை அகற்றப்படுவதை உறுதி செய்யவும்.

  Also Read : ‘லாங் கோவிட்’ என்றால் என்ன? தீவிர கொரோனாவிற்குப் பிறகு கடும் உடற்பயிற்சி செய்யலாமா?- மருத்துவ நிபுணரின் பயனுள்ள விளக்கம்

  4. ​'எனர்ஜி ஸ்டார்' லேபிள்களுடன் கூடிய சாதனங்களை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். மேலும், HCFC-களை குளிர்சாதனப் பொருட்களாகப் பயன்படுத்தாத ஏரோசல் பொருட்கள், ஏர் கண்டிஷனிங் மற்றும் குளிர்பதன உபகரணங்களை வாங்கவும். சுற்றுச்சூழல் நட்பு தயாரிப்புகளை வாங்க அனைவரையும் ஊக்குவிக்கவும்.

  5. முடிந்தவரை பொதுப் போக்குவரத்து, சைக்கிள் ஓட்டுதல், நடைபயிற்சி, கார்களில் பயணம் செய்வதற்குப் பதிலாக கார் பூலிங் ஆகியவற்றைத் தேர்வு செய்து கொள்ளலாம். ஏனெனில் வாகனங்கள் வெளியிடும் வாயுக்கள் ஓசோன் படலத்தை பாதிப்பது மட்டுமல்லாமல், காலநிலை மாற்றத்திற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.

  இதுதவிர, ஓசோன் பாதிப்பை சரி செய்வதற்காக நாம் மரங்களை அதிக அளவு வளர்க்க வேண்டும். அதேபோல் வாகனங்களில் ஏற்படும் புகையை தவிர்க்க வேண்டும். குளோரோ புளூரோ கார்பனுக்கு பதிலாக ஹைட்ரோ புளூரோ கார்பன் அல்லது அமோனியா நீர் போன்றவற்றை பயன்படுத்தலாம். இன்றைய தினத்தில் நம் எதிர்கால சந்ததிகளை பாதுகாக்க ஓசோன் படலத்தை பாதிக்காத விஷயங்களில் ஈடுபடுவோம்.

   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Tamilmalar Natarajan
  First published: