• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • விரலின் நீளத்தை வைத்து ஒருவரை பற்றி தெரிந்துக்கொள்ள முடியுமா ?

விரலின் நீளத்தை வைத்து ஒருவரை பற்றி தெரிந்துக்கொள்ள முடியுமா ?

காட்சி படம்

காட்சி படம்

ஒருவரின் கை விரலின் நீளத்தை வைத்து அவர்களின் ஆளுமைகளை அறிந்துக்கொள்ளமுடியும் என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

  • Share this:
    உங்களிடம் உள்ள ஆளுமையை பல விஷயங்கள் மூலம் கணிக்க முடியும்.ஜோதிடம், ரேகை பார்த்தல் மற்றும் உங்கள் உடல் அம்சங்களை வைத்து உங்கள் ஆளுமை மற்றும் சில சூழ்நிலைகளில் எப்படி நடந்துகொள்வீர்கள் என்பதையும் அறியலாம்.மேலும் அதிக அளவு ஆண் ஹார்மோன் அதாவது டெஸ்டோஸ்டிரோன் என்ற ஹார்மோன் ஆள்காட்டி விரலின் மெதுவான வளர்ச்சியுடன் தொடர்புடையது என்று ஆய்வுகள் கூறுகின்றன.உங்களை பற்றி உங்களின் விரல் நீளம் என்ன சொல்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.

    மோதிர விரலுடன் ஒப்பிடும்போது சிறிய ஆள்காட்டி விரல் கொண்டவர்கள் :

    மோதிர விரலுடன் ஒப்பிடும் போது சிறிய ஆள்காட்டி விரல் கொண்டவர்கள் மிகவும் கவர்ச்சிகரமானவர்கள். அவர்கள் வாழ்க்கையில் எதையும் துணிந்து செய்ய கூடியவர். பெரும்பாலும் அவர்களின் முடிவுகள் தன்னிச்சையானவையாக இருக்கும்.ஏதாவது சரியாக நடக்கவில்லை என்றால் அதைப்பற்றி  புலம்பாமல் அதற்கான தீர்வை தேடுபவர்கள்.

    பெரும்பாலும் மற்றவர்கள் அவர்களை மிகை சாதனையாளர்களாக பார்க்கிறார்கள்.ஆனால் உண்மையில் அர்ப்பணிப்பு மற்றும் லட்சியம் கொண்டவர்கள்.

     



    ஆள்காட்டி விரலும், மோதிர விரலும் ஒரே நீளம் கொண்டவர்கள்:

    ஆள்காட்டி விரலும், மோதிர விரலும் ஒரே நீளத்தில் கொண்டவர்கள் மிகவும் பொறுமையான, நிலையான மற்றும் நன்கு சீரான வாழ்க்கையை நோக்கியவர்களாக இருப்பார்கள்.அதிர்ஷ்டத்தை நம்பாமல் கடினமாக உழைப்பதன் மூலம் நன்மை கிடைக்கும் என்று நம்புபவர்கள்.

    Also Read : இந்த 5 பழக்கங்களை நீங்கள் பின்பற்றி வந்தால் உடனடியாக மாற்றுங்கள்..

    உங்களை மென்மையான ஆளுமை கொண்டவராக கருதினால், அவர்கள் தவறு செய்தாலும் கூட நீங்கள் அவர்களை எதிர்கொள்வது குறைவு.உங்களின் கம்ஃபோர்ட் சோனில் இருப்பீர்கள். மற்றவர்கள் தங்கள் பிரச்சனைகளை நம்பி சொல்லக்கூடிய ஒருவராக இருப்பீர்கள்.உங்களின் நேர்மறைத்தன்மையே மற்றவர்கள் உங்களிடம் பழகுவதற்கு காரணமாக இருக்கும்.

    மோதிர விரலுடன் ஒப்பிடும்போது பெரிய ஆள்காட்டி விரல் கொண்டவர்கள் :

    மோதிர விரலுடன் ஒப்பிடும்போது பெரிய ஆள்காட்டி விரல் கொண்டவர்கள் மிகவும் தன்னம்பிக்கையானவர்கள் மற்றும் சிறந்த வழிகாட்டியாக திகழ்பவர்கள். அவர்கள் ஒவ்வொரு முடிவையும் நன்கு யோசித்து எடுப்பார்கள்.

    எதையும் துணிந்து செய்ய மாட்டார்கள்.மற்றவர்கள் ஒரு விஷயத்தை தொடங்கும் வரை காத்திருப்பார்கள்.ஒரு உறவு அல்லது தொழில் சம்பந்தமான விஷயங்களில் பெரும்பாலும் பகுப்பாய்வு செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள்.மிகவும் நிலையானவர் மற்றும் திடீரென்று எந்த ஒரு முடிவையும் எடுப்பவர்கள் அல்ல.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: