உங்கள் திருமணத்திற்கான விருந்தினர் பட்டியலை தயார்செய்வது எப்படி? பிளானிங் டிப்ஸ் இதோ..

உங்கள் திருமணத்திற்கான விருந்தினர் பட்டியலை தயார்செய்வது எப்படி? பிளானிங் டிப்ஸ் இதோ..

மாதிரி படம்

திருமணத்துக்கு வரும் விருந்தினர்கள் திருப்தியடையும் வகையில் இருக்க வேண்டும் என்றால், முன்கூட்டியே திட்டமிடுதல் வேண்டும்.

  • Share this:
இருமனங்கள் இணைந்து புதுவாழ்வில் அடியெடுத்து வைக்க, சொந்த பந்தங்கள், உற்றார் உறவினர், நண்பர்கள் மற்றும் ஊர்மக்கள் ஒன்றுகூடி அவர்களை வாழ்த்தும் ஒரு சுப நிகழ்ச்சியாகும். திருவிழாபோல் இருக்கும் திருமணத்தை சிறப்பாக நடத்துவதற்கு அனைத்து அம்சங்களையும் மிகுந்த அக்கறையுடன் இரு வீட்டாரும் செய்வார்கள். அதில் மிகவும் முக்கியமானது விருந்தினர்களை அழைப்பது. அந்த வகையில் திருமணத்துக்கு வரும் விருந்தினர்கள் திருப்தியடையும் வகையில் இருக்க வேண்டும் என்றால், முன்கூட்டியே திட்டமிடுதல் வேண்டும்.

விருந்தினர்கள் பட்டியல்

முதலில் விருந்தினர் பட்டியல் ஒன்றை தயார் செய்யுங்கள். சொந்தங்கள், நண்பர்கள், விருந்தினர்கள் என மூன்று வகைகளாக பட்டியலிட்டு அதன் கீழ் நீங்கள் அழைக்க விரும்பும் நபர்களின் பெயர்களை பட்டியலிடுங்கள். பின்னர், அந்த பட்டியலை குடும்பத்தினரிடம் காண்பித்து பெயர் சேர்த்தல் அல்லது நீக்கல் குறித்து முடிவெடுங்கள். அப்போது, நீங்கள் யாரை அழைக்க வேண்டும், எங்கெல்லாம் செல்ல வேண்டும் என்ற தெளிவான ஐடியா கிடைத்துவிடும். ஏனென்றால், யாரை அழைக்க வேண்டும் என்ற திட்டமிடல் இல்லாதபோது, நெருங்கிய நண்பர்கள் அல்லது விருந்தினர்களை அழைக்க முடியாமல் போகவும் வாய்ப்புகள் உண்டு. மேலும், அனைவரது வீட்டுக்கும் குறிப்பிட்ட நேரத்துக்கு சென்று அழைப்பதற்கு தேதியை தீர்மானிக்கவும் இந்தப் பட்டியல் உங்களுக்கு உதவும்.திருமண பட்ஜெட்

ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பின், உங்களின் திருமண பட்ஜெட்டை முடிவு செய்துவிடுங்கள். அதற்கேற்ப, அனைத்து நிகழ்வுகளையும் வரிசையாக திட்டமிட்டு, அதற்கு செலவாகும் தொகையை ஏறத்தாழ தீர்மானித்துக்கொள்ளுங்கள். குற்ற உணர்ச்சியில் அல்லது அவர் உங்களை அழைத்தனர் என்பதற்காக வேண்டா வெறுப்பாக யாரையும் அழைக்காதீர்கள். திருமண பட்ஜெட்டுக்கு மீறி உங்களது அழைப்புகளை மேற்கொள்ள வேண்டாம். மேலும், அடம்பர செலவுகளாக கருதுவதை, இருவீட்டார் சம்மதத்துடன் தவிர்த்துவிடுங்கள்.

பிரீ வெட்டிங் ஃபோட்டோ ஷூட் எடுக்கப் போறீங்களா? இந்த இடங்களில் டிரை பண்ணி பாருங்க

விருந்தினர் பட்டியலில் திருத்தம்

பட்ஜெட் மற்றும் விருந்தினர் பட்டியல் முழுமையாக உங்களிடம் இருப்பதால், அதனை வைத்துக்கொண்டு மீண்டும் ஒருமுறை விருந்தினர் பட்டியலை பார்வையிடுங்கள். அதில், ஏற்கனவே நீக்கிய பெயரை சேர்க்கவும், சேர்த்த பெயர்களை நீக்க வேண்டிய அவசியம் இருப்பின், திருத்தங்களை செய்து விருந்தினர் பட்டியலுக்கு இறுதி வடிவம் கொடுங்கள். அதற்குமுன் அந்தப் பட்டியலை மீண்டும் ஒருமுறை பெற்றோரிடம் காண்பித்து அவர்களின் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளுங்கள். தற்போது, உங்கள் திருமண நாளுக்கு வர வேண்டும் என நீங்கள் நினைக்கும் விருந்தினர்களின் இறுதிப் பட்டியல் உங்கள் கைகளில் இருக்கும். அதன்படி, சடங்குகளுக்கு அழைக்க வேண்டியவர்களையும், திருமண வரவேற்புக்கு அழைக்க வேண்டியவர்களையும் இரண்டாக பிரித்துவிடுங்கள்.தற்போது, விருந்தினர்கள் மற்றும் சொந்த பந்தங்களுக்கு ஏற்ப திருமண அழைப்பிதழை அச்சிட்டு, எந்தெந்த பகுதிக்கு எப்போது செல்லவேண்டும் என தேதியை முடிவு செய்துகொள்ளுங்கள். மன நிறைவாக அனைத்து பகுதிகளுக்கும் பொறுமையாக சென்று மனதார விருந்தினர்களை அழைத்து வந்து திருமணத்தை வெற்றிகரமாக நடத்துங்கள். இந்த நடைமுறைகள் நிச்சயம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

Published by:Sivaranjani E
First published: