Home /News /lifestyle /

மனமே சற்று இளைப்பாறு 1: கொரோனா பெருந்தொற்று பதட்டத்தை கையாள்வது எப்படி..?

மனமே சற்று இளைப்பாறு 1: கொரோனா பெருந்தொற்று பதட்டத்தை கையாள்வது எப்படி..?

மனப்பதட்டம்

மனப்பதட்டம்

கொரோனாவால் ஏற்படும் மன உளைச்சல் உங்கள் ஒருவருக்கோ, அல்லது உங்கள் குடும்பத்தினருக்கோ மட்டும் கிடையாது. நம்மை சுற்றியுள்ள அனைவருமே இதே போன்ற சூழலில் தான் உள்ளோம்.

கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பலவிதமான உளவியல் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்று ஏற்படாதவர்களுக்கு தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற பதட்டம், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து வரும் மரண செய்திகள் ஏற்படுத்தும் அச்சம் என அனைவரின் மனநலமும் பாதிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மெல்ல குறைந்து வருகிறது. படுக்கைக்காக அலையும் மக்களின் எண்ணிக்கையும் சற்று குறைந்துள்ளது. ஆனால் கொரோனாவால் ஏற்பட்டுள்ள உளவியல் பாதிப்புகள் ஏராளம். அதன் தாக்கம் இன்னும் பல நாட்களுக்கு நிலவ போகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உறவுகளை பலப்படுத்துங்கள்

கொரோனா காலத்தில் நோயின் காரணமாக தனிமையில் இருப்பது தவிர்க்க இயலாதது. ஆனால் மனதளவில் உணரும் தனிமையை நாம் நினைத்தால் கண்டிப்பாக தவிர்க்கலாம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.நகரமயமாக்கல், புதிய வேலை முறைகள் என பல்வேறு காரணங்களினால் உறவுகளோடு நெருக்கமாக இருப்பது நமக்கு வழக்கமான ஒன்றாக இல்லை. பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்பது மட்டுமே குறிக்கோளாக கொண்டிருத்தலின் விளைவாகும் இது. சமூக வலைதளங்களில் நிலை பதிவிட நேரம் இருக்கும் நமக்கு நெருங்கிய நண்பர் அல்லது உறவினரை தொலைபேசியில் அழைத்து பேச நேரமில்லை. பிறந்த நாளுக்கு வாட்ஸ் ஆப்-ல் மெசேஜ் அனுப்பாமல் அழைத்து பேசுவது கூட அபூர்வமாகிவிட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. லைப்ஸ்டைல் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வாழ்க்கையை புரட்டி போடக்கூடிய கொரோனா பெருந்தொற்று காலத்தில் உளவியல் சிக்கல்களை சமாளிக்க பலமான உறவுகள் அவசியம் என்கிறார் மனநல ஆலோசகர் நப்பின்னை.

மனமே சற்று இளைப்பாறு 2 : இந்த நேரத்தில் தேவையற்ற எண்ணங்களை தவிருங்கள்..! மருத்துவர் நப்பினையின் ஆலோசனை

“ தொழிலுக்காக நெட்வர்க் உருவாக்கும் நாம் நல்ல உறவுகளையும் அது போல உருவாக்க வேண்டும். தேவை ஏற்படும் காலத்தில் மட்டுமல்லாமல் எப்போதும் இதை செய்ய வேண்டும். நெருங்கிய நண்பர்கள், அல்லது உறவினர்கள் என்ற ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். நாம் பலவீனமாக இருக்கும் நேரத்தில் அது நிச்சயம் உதவும்.

மன நல ஆலோசகர் நப்பின்னை


நாம் பதட்டமாக இருக்கும் நேரத்தில் நமக்கு ஆறுதல் சொல்லக்கூடியவர்கள் இந்த வட்டத்திலேயே இருக்கலாம். நாம் மனம் விட்டு பேசுவதற்கு தேர்ந்தெடுக்கும் நபர் நம்மை விட மன திடத்துடன் இருக்கிறார் என்பதை உறுதிப் படுத்திக் கொள்வது அவசியம். நீங்கள் பதட்டத்தில் இருந்தால், பதட்டத்துடன் பயத்தில் இருக்கும்  மற்றொருவரிடமிருந்து விலகி இருங்கள்” என அறிவுறுத்துகிறார் மருத்துவர் நப்பின்னை.கொரோனாவால் ஏற்படும் மன உளைச்சல் உங்கள் ஒருவருக்கோ, அல்லது உங்கள் குடும்பத்தினருக்கோ மட்டும் கிடையாது. நம்மை சுற்றியுள்ள அனைவருமே இதே போன்ற சூழலில் தான் உள்ளோம். எனவே தேவைப்படும் சுற்றங்களுக்கு ஆறுதல் கூறுங்கள் என்கிறார் மருத்துவர் நப்பின்னை. “எப்படி பிறருக்கு படிப்பு சொல்லிக் கொடுத்தால் அது நமக்கும் உதவியாக இருக்குமோ அதே போல் பிறருக்கு ஆறுதல் சொல்வது நம் மனதையும் இளைப்பாற செய்யும்.” என்கிறார் அவர்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் நம் நுரையீரல் மட்டுமல்ல, மனதையும் சேர்த்து கவனித்துக் கொள்வது அவசியம்.

மனநலம் சார்ந்த உங்கள் கேள்விகளை editor.tamil@nw18.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வாசகர்கள்  அனுப்பினால் அடுத்தடுத்து இந்த பகுதியில் வெளிவரும் கட்டுரைகளில் சம்பந்தப்பட்ட நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெறப்படும்.
Published by:Sivaranjani E
First published:

Tags: Anxiety, Corona safety, CoronaVirus, Covid-19, மனமே சற்று இளைப்பாறு

அடுத்த செய்தி