Home /News /lifestyle /

மன அழுத்தத்திற்கு சோஷியல் மீடியாதான் காரணம்.. ஒரு வாரம் யூஸ் பண்ணாம இருங்க உங்களுக்கே தெரியும்..!

மன அழுத்தத்திற்கு சோஷியல் மீடியாதான் காரணம்.. ஒரு வாரம் யூஸ் பண்ணாம இருங்க உங்களுக்கே தெரியும்..!

காட்சி படம்

காட்சி படம்

Social Media Detox : ஒரு சமீபத்திய ஆய்வில், நமது மனச்சோர்வு மற்றும் பதட்டத்திற்கு சோஷியல் மீடியாக்கள் முக்கிய பங்காற்றுகின்றன என்று தெரியவந்துள்ளது.

முன்னெப்போதை விடவும் - குறிப்பாக கோவிட்-19 தொற்றுநோய்க்கு பிந்தைய காலகட்டத்தில் - நம்மில் பலரும் நமது உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறோம். முன்பெல்லாம் தலைவலி என்றால் கொஞ்சம் தைலம்; கை - கால் மற்றும் உடல் வலி என்றால் சுடுநீரில் ஒரு குளியல்; இருமல் சளி என்றால் ஒரு மாத்திரை; ஜுரம் என்றால் ஒரு ஊசி என, பெரும்பாலான சிறுவகை உடல் நல கோளாறுகள் எல்லாமே பெரிய அளவிலான பதட்டங்கள் இல்லாமல் நம் கட்டுப்பாட்டிற்குள்ளேயே இருந்தன.

ஆனால் கோவிட்-19 க்கு பிறகு மேற்கண்ட உடல் நல கோளாறுகள் எல்லாமே நோய் அறிகுறிகளாக மாறி உள்ளன. இதன் விளைவாகவே முன்னெப்போதை விடவும் நாம் உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை செலுத்தி வருகிறோம், ஆனால் சோகமான விடயம் என்னவென்றால், பல போராட்டங்களுக்கு மத்தியில் நாம் ​​மனநலப் பிரச்சினைகளை முற்றிலும் மறந்து விட்டோம்; பெரும்பாலும் கவனிக்க தவறிவிட்டோம்.

அதிகம் பாதிக்கக்கூடிய ஒரு நோயை போலவே மனச்சோர்வு, பதட்டம் மற்றும் மனநிலை மாற்றங்கள் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கின்றன. இருப்பினும், உண்மையான பிரச்சினை எப்போது தெரியுமா? நாம் நம் மன ஆரோக்கியத்தை புறக்கணிக்கும் போதே ஏற்பட தொடங்குகிறது.

also read :இனி உஷாரா இருங்க..! ஷவர்மா சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட காரணம் இதுதான்..இங்கிலாந்தில் உள்ள பாத் பல்கலைக்கழகத்தில் டாக்டர் ஜெஃப் லம்பேர்ட் தலைமையின் கீழ் நடத்தப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வில், நமது மனச்சோர்வு மற்றும் பதட்டத்திற்கு சமூக ஊடகங்கள்  முக்கிய பங்காற்றுகின்றன என்று தெரியவந்துள்ளது. இது நமக்கு நிகழாமல் தடுக்க, நாம் பல்வேறு டிஜிட்டல் தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் ஒரு வாரமாவது விலகி இருந்து அதனால் ஏற்படும் மாற்றத்தை கவனிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

டிஜிட்டல் டிடாக்ஸ் - நமக்கு ஏன் தேவை / அவசியம்?

வெளியான ஆய்வு அறிக்கையின்படி, மக்கள் ஒவ்வொரு வாரமும் சமூக ஊடகங்களில் பல மணிநேரங்கள் செலவிடுகிறார்கள். மக்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் வீடியோக்களை ஸ்க்ரோல் செய்வதை ஒரு மிகப்பெரிய பொழுதுபோக்காக வைத்துள்ளனர். ஆனால் இது மனச்சோர்வு, பதட்டம் போன்ற எதிர்மறையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்பதை அவர்கள் அறிவதில்லை.

also read : இந்த 2 கொரோனா அறிகுறி இருந்தா அலட்சியம் காட்டாதீங்க.. எச்சரிக்கும் நிபுணர்கள்!

குறிப்பிட்ட ஆய்வில் 18 முதல் 72 வயது வரையிலான 154 பேர் பங்கு கொண்டனர். அதில் ஒரு குழுவிற்கு இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் டிக்டாக் போன்ற சமூக ஊடக தளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது, மற்றொரு குழுவிற்கு வாரத்திற்கு 8 மணிநேரம் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. ஆய்வின் முடிவில், ஒரு வாரத்திற்கு சமூக ஊடகங்களைத் தவிர்த்தவர்கள் - ஒப்பீட்டளவில் - மிகவும் நம்பிக்கையுடனும் ஆரோக்கியத்துடனும் காணப்பட்டனர்.ஆய்வில் கலந்துகொண்டவர்களிடம் ஆப்டிமிஸம், அதாவது எதிர்காலம் நல்லதாக அமையும் என்கிற உணர்வு மற்றும் அளவான மகிழ்ச்சி குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. ஜெனரல் ஆன்சைட்டி டிஸாடர் (General Anxiety Disorder) அளவுகோளின்படி, சமூக ஊடகங்களைப் பயன்படுத்தாதவர்கள் 46 - 55.93 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். அதே நேரத்தில், அவர்களின் மனச்சோர்வு 7.46 இல் இருந்து 4.84 ஆக குறைந்தது.

அதாவது மனச்சோர்வு, பதட்டம் மற்றும் மன ஆரோக்கியத்தில் சமூக ஊடகங்களின் எதிர்மறை விளைவுகள் பெரிய அளவில் பங்கு வகிக்கின்றன என்பது இந்த ஆய்வில் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Mental Stress, Social media

அடுத்த செய்தி