பணிநீக்கத்திற்கு பின்னர் உங்கள் வாழ்க்கை போர் அடிக்குதா? ரொம்ப பதற்றமா இருக்கீங்களா? அப்ப இத செய்யுங்க..

பணிநீக்கத்திற்கு பின்னர் உங்கள் வாழ்க்கை போர் அடிக்குதா? ரொம்ப பதற்றமா இருக்கீங்களா? அப்ப இத செய்யுங்க..

பணி நீக்கம்

கொரோனா காலத்தில் பலரின் வேலை பறிபோனது.அப்படிப்பட்ட கடினமான சூழ்நிலையிலிருந்து உங்களை மீட்கக்கூடிய சில வழிமுறைகள் இதோ..

  • Share this:
கொரோனா தொற்றுநோய் உலகை தாக்கியதிலிருந்து பலரின் வேலை பறிபோயுள்ளது. இந்த நிலை உலகெங்கிலும் நிகழ்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 5 மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் மற்ற துறைகளைக் காட்டிலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது IT துறைதான். ஏற்கெனவே இத்துறையில் வருவாய் இழப்பும் பணிநீக்கங்களும் அதிகமாக இருந்த சூழலில் தற்போது கொரோனாவால் மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஊழியர்கள் பலர் தங்களது வேலையை இழந்துள்ளனர். வரும் காலங்களில் புதிய வேலைவாய்ப்புகளும் மந்தமாகவே இருக்கும் என்று நிறுவனங்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் பல நிறுவனங்கள் நெருக்கடியான சூழலில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

கொஞ்ச நேரம் அமைதியாக இருங்கள் :

34%க்கும் அதிகமான மக்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட பின்னர் மனச்சோர்வு போன்ற உளவியல் சிக்கல்களால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? பீதி அடைய வேண்டாம், உடனடியாக அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கத் தொடங்குங்கள். எப்போதும் ஒரு மாற்றுவழியை கையில் வைத்திருங்கள். பணத்தை சிக்கனமாக செலவு செய்யவும் கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் ஒரு புதிய பிளானை வகுத்துக்கொள்ளுங்கள். ஏதேனும் நெகட்டிவாக நடந்தால் அதை அமைதியாக கடக்க கற்றுக்கொள்ளுங்கள். நமது வாழ்க்கை மட்டுமின்றி, சமூகத்திலும் பல பிரச்னைகளும் விவாதங்களும் ஏற்படுவதற்கு முக்கியக் காரணமே விரக்தியும் தான்! விரக்தியும், கோபமும் எங்கு ஆக்கிரமித்து நிற்கிறதோ, அங்கே குழப்பமும் ஏமாற்றமும் குறைவில்லாமல் இருக்கும். கோபத்தை வென்றவன்தான் குணவான். கடுமையான கோபம் கொண்டவர்கள், அதனால் பட்ட அவஸ்தைகளைப் பற்றிய எத்தனையோ கதைகளை நமது புராணங்களிலும் வரலாறுகளிலும் படித்திருக்கிறோம்.

உங்கள் நிதிகளை மதிப்பிடவும் சேமிக்கவும் கற்றுக்கொள்ளுங்கள் :

இப்போது உங்களுக்கு வேலை மற்றும் நிலையான மாத ஊதியம் இல்லாததால், உங்கள் செலவினங்களை நீங்கள் தீவிரமாக கவனிக்கத் தொடங்க வேண்டும். தேவைப்படுவதை மட்டும் செலவழிக்கவும், விரும்பியதை மட்டும் செலவழிக்கவும். இந்த கடினமான காலங்களில் வாடகை, ஆடம்பர பயன்பாடுகள் மற்றும் பில்கள் உங்கள் முன்னுரிமையாக இருக்க வேண்டும். நிதி மன அழுத்தத்தை உங்கள் மனதில் கொள்ள விடாதீர்கள், ஒரு புதிய வேலையைக் கண்டுபிடிக்கும் செயல்முறையை வேகப்படுத்துங்கள். ஒவ்வொரு செலவையும் எழுதி வைக்கும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் எவ்வளவு செலவாகிறது, அதில் தேவையில்லாத பழக்கங்களுக்கு எவ்வளவு ஒதுக்கி இருக்கிறோம் என்பது தெரிய வரும். கணக்கில்லாமல் செலவு செய்வது மாத திட்டமிடலில் துண்டு விழ வைக்கும். இதுபோல நமது சேமிப்பு, முதலீடுகள், வங்கி கணக்கு விவரங்கள், காப்பீடு போன்ற நிதி சார்ந்த ஆவணங்களை வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் எழுதி வைப்பதும் தெரிந்து கொள்ளச் செய்வதும் முக்கியமானது. ஒருவருக்கு மட்டும் தெரிந்து கொண்டால் போதும் என்கிற ரகசியம் கடைபிடிப்பதை இந்த வருடத்திலிருந்து கைவிடுங்கள்.

பார்ட் டைம் வேலையை செய்யலாம் :

ஒரு முழுநேர வேலையைக் கண்டுபிடிக்க அதிக நேரம் எடுத்துக்கொண்டால், சரியான சம்பளத்திற்க்காக காத்திருக்க வேண்டாம். ஏதோ சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வருமானம் வருவதற்கு பகுதிநேர வேலைகளை எடுக்கத் தொடங்குங்கள். ஃப்ரீலான்ஸ் வேலை மற்றும் பகுதிநேர வேலைகளுக்கு உலகம் முழுவதிலும் தேவை இருக்கிறது. இது இடைக்காலத்தில் வருமானத்தை ஈட்ட சிறந்த வழிகளில் ஒன்றாகும். உதாரணத்திற்கு யூடியூப் அனைவருக்கும் தெரிந்ததே. பலர் யூடியூப் சேனல் தொடங்கலாமா என்று சிந்தித்துக் கொண்டிருப்பர். யூடியூப்பை பொறுத்தவரையில், நீங்கள் வெளியிடும் வீடியோவை பொருத்தும், உங்களுடைய கண்டன்ட் பொருத்தும் வருமானம் பெற முடியும். இனி வரும் காலங்களில் உணவு சமைப்பது எப்படி, வேட்டி கட்டுவது எப்படி போன்ற வீடியோக்கள் பிரபலமாகும். அதே போல், நாட்டு நடப்பு செய்திகளையும் அலசி ஆராய்ந்து வீடியோவாக பதவிடலாம். ஆனால், Evergreen வீடியோவாக இருந்தால், உங்களுடைய வீடியோவை பார்வையாளர்கள் எந்த காலத்திலும் பார்ப்பார்கள். இதன் மூலம் கணிசமான வருமானம் பெற முடியும்.

உங்கள் உடம்பை நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள் :

வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள், அப்போது உங்களுக்கு போதுமான தூக்கம் கிடைக்கும். உங்கள் உணர்ச்சிகளை சரியாக வைத்துக்கொள்வது உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும். தூங்குவதையும் ஆரோக்கியமாக சாப்பிடுவதையும் தவிர வேறு எதை வேண்டுமானாலும் செய்ய இந்த நேரத்தை செலவிடுங்கள். ஒரு பொழுதுபோக்கை எடுத்துக் கொள்ளுங்கள், படிக்கவோ, எழுதவோ, ஓவியமோ, அல்லது நடனத்தை கூட கற்றுக்கொள்ள நேரத்தை செலவிடுங்கள். நீங்கள் ஆனந்தமாக உணர எது உதவினாலும் அதைச் செய்யுங்கள். அதோடு கூட உடலுக்கு போதிய வைட்டமின்கள், தாதுக்கள், கால்சியம் சத்துள்ள உணவு பொருள்கள் மூலமாக பெறவும் முயலுங்கள். அதனால் திட்டமிட்டு சத்தான உணவை எடுத்துகொள்வது நல்லது. தினமும் இரண்டு காய்கள், வாரத்தில் இரண்டு நாள் கீரை சேர்த்துகொள்ளுங்கள்.

முன்னர் IT துறையில் பெரும்பான்மை பணிநீக்கம் நடந்தது ஆனால் சில மாதங்களாக டிக்கெட் புக்கிங் நிறுவனங்களான மேக் மை ட்ரிப், கிளீயர் ட்ரிப், இக்ஸிகோ உள்ளிட்ட நிறுவனங்களும் சம்பளக் குறைப்பில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பவுன்ஸ், டிரைவெஸி, உடான் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் கொரோனா விளைவால் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தும், சம்பளத்தைக் குறைத்தும் தங்களது இழப்புகளை ஈடுசெய்து வருகின்றன. கொரோனா பாதிப்புகள் தொடரும் பட்சத்தில் மற்ற தொழில் நிறுவனங்களும் வேறு வழியின்றி ஒன்றன் பின் ஒன்றாக இதுபோன்ற கடினமான முடிவுகளை மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாக அஞ்சப்படுகிறது. இதைப்பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் மேற்சொன்ன டிப்ஸ்களில் நீங்கள் கவனம் செலுத்தினால் சிக்கலின்றி வாழ்க்கையை நடத்தலாம்.

 
Published by:Tamilmalar Natarajan
First published: