Dog Love: செல்லப் பிராணி வளர்க்கிறீர்களா? ஹேப்பியாக வைத்திருக்க டிப்ஸ்!

நாய் பாதுகாப்பு

நாய் உங்கள் மீது அளவில்லாத அன்பை பொழியும். ஒருபோதும் உங்களை காயப்படுத்தாது. வெளியில் செல்லும்போது நீங்கள் அதனுடன் விளையாடிக்கொண்டே இருந்தாலும், உங்களை பாதுகாப்பதிலும் அதனுடைய கவனம் இருக்கும்.

  • Share this:
அன்பை மட்டுமே உங்களிடம் இருந்து எதிர்பார்க்கும் ஒரு ஜீவன் இருக்கும் என்றால், கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம் அது 'நாய்' என்று. உங்கள் மீது அளவில்லாத அன்பை பொழியும். ஒருபோதும் உங்களை காயப்படுத்தாது. வெளியில் செல்லும்போது நீங்கள் அதனுடன் விளையாடிக்கொண்டே இருந்தாலும், உங்களை பாதுகாப்பதிலும் அதனுடைய கவனம் இருக்கும். வாலை குழைத்து உங்கள் முகத்தில் தடவுவதில் இருந்து விளையாடுவது வரை நாய்க்குட்டிகளின் அன்பை பார்க்க முடியும். அதேநேரத்தில், உங்களிடம் இருந்தும் அதே அன்பையும், கவனிப்பையும் அது எதிர்பார்க்கும்.

அதனால், உங்கள் செல்லப் பிராணியை மிகவும் அன்பாக வைத்திருக்க, என்னென்ன செய்ய வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

நாய் பண்ணை

உங்கள் வீட்டிற்கு அருகாமையில் நாய் பண்ணை இருந்தால், அதனை அங்கு அழைத்துச் செல்லுங்கள். வீட்டில் இருப்பதைக் காட்டிலும் அங்கு உங்களின் செல்லப்பிராணி மகிழ்ச்சியாக இருப்பதை காண முடியும். புதிய நாய்களுடன் இணைந்து மகிழ்ச்சியாக ஓடி விளையாடும். புதிய இடம், புதிய நண்பர்கள், சக நாய்க்குட்டிகளின் வாசம் ஆகியவை செல்லப் பிராணிக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். மற்ற நாய்களுடன் விளையாடும்போது செல்லப் பிராணியின் புதிய உணர்ச்சிகளை உங்களால் பார்க்க முடியும்.



ஸ்பெஷல் டிரிப்

நாய் பண்ணைகள் இல்லை என்றால், நீங்கள் கவலைப்பட வேண்டாம். நாய் பண்ணை மட்டுமே உங்கள் செல்லப் பிராணிக்கு மகிழ்ச்சி தரக்கூடிய இடம் அல்ல. நாய்களுக்கு தண்ணீரில் விளையாடுவது என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் அருகில் இருக்கும் ஆறு, பீச் மற்றும் குளங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். மலையேற்றம், வேட்டை ஆகியவையும் பிடிக்கும். மலையேற்றத்துக்கு அழைத்துச் சென்றால், உங்கள் செல்லப் பிராணியின் மோப்ப சக்தியை உங்களால் கண்டுகொள்ள முடியும். புதிய இடங்களில் மகிழ்ச்சியாக உலவித் திரியும்.

செல்லப்பிராணிகளுக்கு மசாஜ்

நாய்க்குட்டிகளுக்கு மசாஜா? என நீங்கள் கேட்கலாம். விந்தையாகக்கூட உங்களுக்கு தோன்றும். ஆனால், நாய்க்குட்டிகளுக்கும் ஸ்பெஷல் மசாஜ் உள்ளது. அருகில் செல்லப் பிராணிகளுகான மசாஜ் சென்டர் இருக்கிறதா? என தேடிப்பாருங்கள் அல்லது மற்றவர்களிடம் விசாரியுங்கள். ஒருவேளை இல்லையென்றால், நாய்களுக்கு மசாஜ் செய்வதற்கான டெக்னிக் வீடியோக்கள் யூ டியூப்பில் கொட்டிக் கிடக்கின்றன. அதனைப் பார்த்து, கற்றுக்கொண்டு உங்கள் செல்லப் பிராணிக்கு மசாஜ் செய்துவிடுங்கள்.

zinc நம்மை காக்குமா? வெற்றிலைக்கும் துத்தநாகத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? ஜிங்க் பற்றிய முழுமையான தகவல்..!

செல்லப் பிராணிக்கான படுக்கை

செல்லப் பிராணிகளுக்கு விதவிதமாக படுக்கைகள் சந்தையில் ஏராளமாக இருக்கின்றன. உங்களின் வசதிக்கு ஏற்ற வகையிலான படுகையை வாங்கி, செல்லப்பிராணியை படுத்து உறங்க வைக்கலாம். மெத்தை, தலையணை ஆகியவை நாய்களுக்கு குதூகலத்தை ஏற்படுத்தும். மெத்தையின் மீது ஏறி விளையாடும். கண்களை பறிக்கும் வகையில் மெத்தை மற்றும் படுக்கையின் கலர்களை தேர்ந்தெடுங்கள்.



ஒன்றாக உறங்குதல்

பெரும்பாலும் ஒரே மெத்தையில் செல்லப் பிராணியுடன் பலர் படுத்து உறங்குகின்றனர். அது நாய்க்குட்டிகளுக்கு மிகவும் பிடிக்கும். சிலர் கட்டியணைத்துக்கொண்டு தூங்குகிறார்கள். ரிலாக்சாக தூங்குவதையே செல்லப் பிராணிகள் விரும்பும் என்பதால், கட்டியணைத்துக்கொண்டு தூங்குவதை தவிர்க்கலாம். உங்களுக்கு அருகாமையில் கதகதப்பான சூட்டில் படுத்து உறங்குவதையே செல்லப்பிராணிகள் பெரும்பாலும் விரும்பும் என்பதால், இரவு நேரங்களில் அருகில் அவற்றை படுத்துக்கொள்ள அனுமதிக்கலாம்.

 
Published by:Sivaranjani E
First published: