• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • ஆசிரியர் தின வாழ்த்து அட்டை.. நீங்களே வீட்டில் செய்யலாம்..

ஆசிரியர் தின வாழ்த்து அட்டை.. நீங்களே வீட்டில் செய்யலாம்..

காட்சி படம்

காட்சி படம்

உங்கள் ஆசிரியருக்கு வாழ்த்து தெரிவிக்க அழகான அட்டைகளை நீங்களே வீட்டிலே செய்ய முடியும்.

  • Share this:
ஆசிரியராக இருப்பதே சமூகத்துக்கு செய்யும் சேவை. மாணவர்களின் எதிர்காலத்தை செதுக்கும் சிற்பிகளான அவர்களால் தான் ஒரு மாணவனுக்குள் நம்பிக்கை எனும் விதையை விதைக்க முடியும். பொதிந்து கிடக்கும் கற்பனைத் திறனை தூண்டி, அவர்களின் இலக்கை நோக்கி பயணிப்பதற்கான உந்து சக்தியை கொடுக்க முடியும். இப்படியான தன்னலமற்ற சேவைகளை செய்து வரும் ஆசிரியர்களின் பணியை கொண்டாடுவது தான் ஆசிரியர் தினம்.

உலகின் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படும் ஆசிரியர் தினம் இந்தியாவில் செப்டம்பர் 5 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆசிரியராக இருந்து இந்தியாவின் முதல் குடிமகனாக உயர்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை இந்தியாவின் ஆசிரியர் தின நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் உங்களின் மனம் கவர்ந்த ஆசிரியர்களுக்கு, உங்களை உருவாக்கிய ஆசிரியர்களுக்கு மனம் நெகிழ்ந்து தெரிவிக்கும் நன்றியை வாழ்த்து அட்டைகள் வழியாகவும், நெகிழ்ச்சியான வார்த்தைகள் வழியாகவும் தெரிவிக்க முடியும்.

உங்கள் ஆசிரியருக்கு நன்றி தெரிவிக்க உதவும் பொன்மொழிகள்;

1. மாணவனாக வந்த என்னை நண்பனாக வழிநடத்தி, சிறந்த கல்வியாளராக விளங்கியமைக்கு நன்றி ஐயா! இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!

2. நீங்கள் கற்பிக்கும் விதம்..
நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறிவு..
நீங்கள் எங்கள் மீது காட்டும் அன்பு..
இவற்றை பார்க்கும் போது நீங்கள் தான் உலகின் சிறந்த ஆசிரியர்!
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!

3. புத்தகங்களை விட பொது அறிவை கற்றுக் கொடுத்தவர் நீங்களே..
ஒன்றும் தெரியாத பருவத்தில் என் கைப்பிடித்து எழுதக் கற்றுக் கொடுத்தீர்கள்..
என் வாழ்க்கையில் நீங்கள் இருப்பது என் அதிர்ஷ்டம்..
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!

4. நீங்கள் ஒரு சிறந்த ஆசிரியர் மட்டுமல்ல, என் உத்வேகத்தின் வழிகாட்டியும் நீங்களே!
உங்களை நாங்கள் பெற்றிருப்பது எங்கள் அதிர்ஷ்டம்
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!

5. என் புத்தகத்தில் ஆயிரம் கதாபாத்திரங்கள் இருந்தாலும் நீங்கள் தான் என் ஹீரோ. உங்களுக்கு இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!

6. நீங்கள் ஒரு சிறந்த ஆசிரியர் மட்டுமல்ல
அதையும் தாண்டி எங்கள் நண்பர், வழிகாட்டி மற்றும் தத்துவவாதியாக திகழ்பவர்
இவையனைத்தும் ஒரே நபராக வடிவமைக்கப்பட்ட எங்கள் ஆசான்
உங்கள் ஆதரவுக்கு நாங்கள் எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!

Also read : குழந்தைக்கு பெயர் சூட்டுவிழா நடத்தப்போறீங்களா? செப்டம்பரில் அதற்கான நல்ல நாள் மற்றும் நேரம் இதோ.

7. வாழ்க்கையில் துணிச்சலாக கேள்வி கேட்கவும், ஆச்சரியப்படவும், சிந்திக்கவும் என்னைத் தூண்டியது நீங்கள்தான். எனக்காக நீங்கள் செய்த அனைத்திற்கும் நன்றி. இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!!

8. நீங்கள் பல திறமைகளைக் கொண்ட மனிதர். ஒரு சிறந்த ஆசிரியர், எழுச்சியூட்டும் முன்மாதிரி, சரியான வழிகாட்டியாக விளங்கியவர். இந்த ஆசிரியர்கள் தினத்தில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வாழ்த்துகளை தெரிவிக்கும் அழகான அட்டைகளை நீங்களே வீட்டில் செய்ய முடியும். அதனை எப்படி செய்யலாம் என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ லிங்கில் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்.


இதனைப்போல் இன்னும் பல வீடியோக்கள் யூ டியூப்பில் இருக்கின்றன. அதனைப் பார்த்து எளிமையாக வாழ்த்து அட்டைகளை செய்து ஆசிரியர்களுக்கு நன்றியை தெரிவியுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: