வீடே மணக்க ரசப்பொடி எப்படி அரைக்க வேண்டும் தெரியுமா..?

இப்படி சமைத்துப்பாருங்கள்..பாராட்டுகள் குவியும்.

news18
Updated: August 16, 2019, 3:47 PM IST
வீடே மணக்க ரசப்பொடி எப்படி அரைக்க வேண்டும் தெரியுமா..?
ரசப்பொடி
news18
Updated: August 16, 2019, 3:47 PM IST
ரசம் எப்போதுமே இந்திய இல்லங்களில் இருக்கக் கூடிய அந்தியாவசியக் குழம்பு. எத்தனை சுவை கொண்ட உணவை சாப்பிட்டாலும் இறுதியாக ரசம் ஊற்றி பிணைந்து சாப்பிட்டால்தான் திருப்தி அடைவோம். ரசம் வைப்பது எளிமையானது என்றாலும் அதன் சுவை அத்தனை எளிதில் கிடைக்காது. உங்களுக்கும் அதன் ரகசியம் தெரிய வேண்டுமா ?

தேவையான பொருட்கள்

துவரம் பருபு - 1/4 கப்


காய்ந்த மிளகாய் - 6

தனியா - 3/4 கப்

மிளகு - 2 tsp

Loading...

சீரகம் - 2 tsp

வெந்தயம் - 2 tsp

கறிவேப்பிலை - 5 கொத்துசெய்முறை

துவரம்பருப்பை எண்ணெய் இல்லாமல் கடாயில் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். வறுத்ததும் தனியாக காய வைக்கவும்.

அடுத்ததாக தனியாவை வறுக்கவும். மிளகு, காய்ந்த மிளகாய், சீரகம் மற்றும் வெந்தயம் சேர்த்து வதக்கவும்.

இறுதியாக கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கருவேப்பிலையையை பொறித்து எடுத்துக்கொள்ளவும்.

அனைத்தையும் நன்கு காற்றாடவிட்டு மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளவும்.

மணமணக்கும் ரசப் பொடி தயார். இதை ரசம் செய்யும்போது அளவுக்கு ஏற்ப சேர்த்துக் கொண்டால் ரசம் சுவை மூக்கை துளைக்கும்.
First published: August 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...