Home /News /lifestyle /

தற்காப்பு தேவை : பெப்பர் ஸ்பிரேவை வீட்டிலேயே தயாரிக்க டிப்ஸ்..!

தற்காப்பு தேவை : பெப்பர் ஸ்பிரேவை வீட்டிலேயே தயாரிக்க டிப்ஸ்..!

பெப்பர் ஸ்பிரே

பெப்பர் ஸ்பிரே

  • News18
  • Last Updated :
    பெண்களுக்கு தற்காப்பிற்காகப் பயன்படுத்தப்படும் பெப்பர் ஸ்பிரே எப்போதும் உடன் வைத்திருப்பது கட்டாயம். ஆனால் அந்த ஸ்பிரே விலை சற்று அதிகம் என்பதால் வீட்டிலேயே எப்படித் தயாரிப்பது என்று பார்க்கலாம்.

    இதைத் தயாரிக்கும் முன் மூக்கில் துணிக் கட்டிக்கொள்ளுங்கள். நெடி உங்கள் மூக்கிற்கு ஏறலாம். கைகளையும் உடனே கழுவிவிடுங்கள்.

    தேவையான பொருட்கள்

    மிளகுத்தூள் - 2 Tsp
    எண்ணெய் - 2 Tsp
    சிவப்பு மிளகாய் தூள் - 2 Tsp
    வினிகர் - 2 Tsp
    ஸ்பிரே பாடில்



    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் மிளகுத்தூள், மிளகாய்ப் பொடி என அனைத்தையும் ஒன்று சேரக் கொட்டிக் கிளறுங்கள்.

    கலவை ஸ்பிரே அடிக்க ஏதுவாக இருக்க வேண்டும். கெட்டியாக இருக்கக் கூடாது. தண்ணீர் பதம் வரும் வரை வினிகர், எண்ணெய்யை சம அளவில் கலந்துகொள்ளுங்கள்.

    அவ்வளவே பெப்பர் ஸ்பிரே தயார். இதை ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி இறுக மூடிவிடுங்கள். பயன்படுத்தும்போதும் நீங்கள் கவனமாக இருங்கள்.

     

     
    Published by:Sivaranjani E
    First published:

    அடுத்த செய்தி