ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பனீர் அல்லது பாலாடைக்கட்டியில் இட்லி செய்யலாமா? ட்ரை பண்ணிப்பாருங்க சூப்பரா இருக்கும்..

பனீர் அல்லது பாலாடைக்கட்டியில் இட்லி செய்யலாமா? ட்ரை பண்ணிப்பாருங்க சூப்பரா இருக்கும்..

இட்லி

இட்லி

பன்னீர் அல்லது பாலாடைக்கட்டி என்பது நம் அன்றாட சமையலில் ஒரு இன்றியமையாத உணவு பொருளாகும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பனீர் அல்லது பாலாடைக்கட்டி என்பது நம் அன்றாட சமையலில் ஒரு இன்றியமையாத உணவு பொருளாகும். பனீரில் புரதச்சத்து நிறைந்துள்ளது. குறிப்பாக இறைச்சி சாப்பிடாத வெஜ் பிரியர்களுக்கு பனீர் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். ஆரோக்கியமான தசைகளுக்கும், சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கும் புரதம் அவசியமானது. மேலும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது மிக முக்கியமானது.

நியூட்ரிஷன் அண்ட் மெட்டபாலிசம் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, தொடர்ந்து பனீர் சாப்பிடுபவர்கள் உடல் எடையானது கட்டுக்குள் இருக்கிறது என குறிப்பிட்டுள்ளது. தின்பண்டங்கள் முதல் இனிப்பு வகைகள் வரை, நீங்கள் பனீரை சேர்த்து தயாரிக்கலாம். வழக்கமான இட்லி அல்லாமல் பனீர் இட்லி செய்தும் சாப்பிடலாம். பனீர் இட்லி செய்வது எப்படி என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,

தேவையான பொருட்கள் :

பனீர் - 1 பாக்கெட்

அரிசி - 1 கிலோ

உளுந்து பருப்பு - 1/4 கிலோ

தயிர் - 1 கப்.

பனீர் இட்லி செய்முறை:

அரிசி, உளுந்தை கிரைண்டரில் ஆட்டி ஒன்றாக கலந்து வைத்து கொள்ளவும். முதலில் பனீரை நன்கு உடைத்து கொள்ளவும். இதனுடன் தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை அரைத்து வைத்துள்ள மாவுடன் கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து , இந்த மாவை புளிக்க வைக்கவும். பின்னர் இட்லி தட்டில் மாவை ஊற்றி நீராவியில் வேக வைத்தால் சுவையான பனீர் இட்லி ரெடி!. இந்த இட்லியை தக்காளி சட்னியுடன் சேர்த்து பரிமாறினால் கூடுதல் சுவை கிடைக்கும். தக்காளி சட்னி செய்முறை குறித்து இங்கு காண்போம்.,

தேவையான பொருட்கள் :

தக்காளி - 3

இஞ்சி - 1 துண்டு

வரமிளகாய் - 3

கடுகு - 1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

பூண்டு - துண்டு

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக தாளிக்க வேண்டும். பின் அதில் வரமிளகாய், பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கி,அதில் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து 6-7 நிமிடம் குறைவான தீயில் வதக்கி இறக்குங்கள். பிறகு இதனை மிக்ஸியில் போட்டு, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். இறுதியில் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி சட்னியை ஊற்றி, 3-4 நிமிடம் குறைவான தீயில் கிளறி இறக்கினால், தக்காளி சட்னி ரெடி!.

First published:

Tags: Paneer recipes