மசாலா டீ உடலுக்கு ஆரோக்கியமானது. அதில் பயன்படுத்தப்படும் ஏலக்காய், கிராம்பு , பட்டை நோய் எதிர்புச் சக்தியை அதிகரிக்கும். ஏதேனும் நோய் தொற்று இருந்தாலும் அவற்றை அழிக்கும் வல்லமைப் பெற்றது. அதேபோல் இஞ்சி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கக் கூடியது. இதனால் உடல் வலி, தலை வலி போன்றவை கட்டுப்படுத்தப்படும். வலிநிவாரணியாகச் செயல்படும்.
ஆரம்பிக்கும் முன் மசாலாக்கள் அனைத்தையும் மிக்ஸியில் மைய அரைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.
அடுத்ததாக பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். பொங்கி வந்ததும் டீ தூள் , கிரீன் இலைப் பொடி சேர்த்துக் கலக்கவும்.
அடுத்ததாக அரைத்து வைத்துள்ள மசாலாப் பொடி போட்டு நன்குக் கொதிக்கவிடவும்.
கொதித்ததும் சர்க்கரை சேர்த்து 4-5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
இறுதியாக இஞ்சிப் பொடி சேர்த்துக் கலக்கவும். அதோடு பாலும் சேர்த்துக் கலக்கிக் கொதிக்கவிடவும்.
பால் பொங்கி வந்ததும் தட்டு போட்டு மூடி இரண்டு நிமிடங்கள் சிறு தீயில் கொதிக்க விடவும்.
இரண்டு நிமிடங்களுக்குப் பின் அடுப்பை அனைத்து வடிக்கட்டவும். சுவையான மசாலா டீ தயார்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.