Home /News /lifestyle /

வீட்டிலேயே கொரியன் ஃபேஸ் மாஸ்க் ஷீட் தயாரிப்பது எப்படி..?

வீட்டிலேயே கொரியன் ஃபேஸ் மாஸ்க் ஷீட் தயாரிப்பது எப்படி..?

பியூட்டி டிப்ஸ்

பியூட்டி டிப்ஸ்

Skin Care : பிரபலமான தயாரிப்புகள் முதல் ஒப்பனை குறிப்புகள் வரை, மக்கள் தங்கள் வாழ்க்கை முறையுடன் கொரியாவின் பாரம்பரிய வழிமுறைகளையும் இணைக்க ஆரம்பித்துள்ளனர்.

கொரிய மொழி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், ஃபேஷன் மற்றும் இசை நிகழ்ச்சிகள் அனைத்தும் உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கின்றன. இது அவர்களது அழகு மற்றும் சரும பராமரிப்பிற்கு கிடைக்கும் அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.

பிரபலமான தயாரிப்புகள் முதல் ஒப்பனை குறிப்புகள் வரை, மக்கள் தங்கள் வாழ்க்கை முறையுடன் கொரியாவின் பாரம்பரிய வழிமுறைகளையும் இணைக்க ஆரம்பித்துள்ளனர். பளீச் சருமம், பட்டுபோன்ற கூந்தலும் கொரியர்களுக்கு மட்டும் எப்படி சாத்தியமாகிறது என்பது பெரும்பாலானோரது சந்தேகம். எனவே தான் சமீப காலமாக கொரியன் அழகு சாதன பொருட்கள் உலக அளவில் பிரபலமாகி வருகின்றன. இதற்கு முன்னதாக கொரியர்கள் அரிசி கழுவிய தண்ணீரை பயன்படுத்தி சருமம் மற்றும் கூந்தலை எவ்வாறு பராமரிக்கிறார்கள் என பார்த்திருப்போம்.

கொரியர்களின் மற்றொரு பிரபலமான அழகு குறிப்பு, ஃபேஸ் மாஸ்க் ஷீட் ஆகும். இவை கொரியாவின் இளம் பெண்கள் தங்களது சருமத்தை அழகாகவும், மாசுக்களை நீக்கவும், நீரேற்றத்துடன் வைத்திருக்கவும் உதவும் ஃபேஸ் மாஸ்க் ஷீட்கள் ஆகும். சந்தைகளில் கிடைக்கும் ஏராளமான ஃபேஸ் மாஸ்க் ஷீட்களில் எதனை பயன்படுத்துவது என்று உங்களுக்கு குழப்பமாக இருந்தால், உங்கள் சருமத்திற்கான ஒன்றை நீங்கள் வீட்டிலேயே தயார் செய்யலாம்.



DIY கிரீன் டீ ஷீட் மாஸ்க்:

கிரீன் டீ ஷீட் மாஸ்க் தயாரிக்க தேவையான பொருட்கள்:

கிரீன் டீ பேக்குகள் - 5
தண்ணீர் - சிறிதளவு
எலுமிச்சை சாறு - 2-3 சொட்டு
காட்டன் ஃபேஷியல் மாஸ்க் ஷுட் - 1

செய்முறை:

கிரீன் டீ பேக்குகளை சூடான நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். அதன் சாறு முற்றிலும் தண்ணீரில் கலந்ததும், தண்ணீரை குளிர்வித்து, எலுமிச்சை சாறு சேர்க்கவும். இந்த கலவையில் ஃபேஸ் மாஸ்க் ஷீட்டை நன்றாக ஊறவைக்கவும். சுமார் அரை மணி நேரம் ஊறவைத்த பிறகு, அந்த ஷீட்டை குளிர்சாத பெட்டிக்குள் வைத்து குளிர்விக்கவும்.



பயன்படுத்துவது எப்படி?

குளிர்விக்கப்பட்ட ஃபேஸ்மாஸ்க் ஷூட்டை முகத்தில் வைத்து 15 நிமிடங்கள் ரிலாக்ஸ் செய்யுங்கள். இப்போது ஃபேஸ்மாஸ்க் ஷீட்டை அகற்றி விட்டு, உங்கள் முகத்தை கழுவவும்.

மாய்ஸ்சுரைஸ்:

நன்றாக முகத்தை கழுவி, உலர வைத்த பிறகு முகத்தில் நீரேற்றத்தை தக்க வைக்க மாய்ஸ்சுரைசர் அல்லது சீரத்தை பூசி, லேசாக மசாஜ் கொடுக்கவும். அதன் பின்னர் உங்கள் முகத்தை கண்ணாடியில் பாருங்கள். இதற்கு முன்பு எப்போதுமே இல்லாத அளவிற்கு முகம் பிரகாசிப்பதை உணர்வீர்கள். காரணம் கிரீன் டீ ஃபேஸ் மாஸ்க் ஷீட் உங்கள் முகத்தை நீரேற்றம் செய்வதோடு, சருமத்தில் உள்ள மாசுக்களை அகற்றவும் செய்வதால் பளீச் சருமத்தை பெற முடிகிறது.





வறண்ட மற்றும் எரிச்சலூட்டும் சருமம் உள்ளவர்களுக்கு ஈரப்பதமூட்டும் ஃபேஸ் மாஸ் ஷீட்கள் பொருத்தமான தேர்வாகும். ஹைலூரோனிக் அமிலம், கற்றாழை, வெள்ளரி, ஷியா பட்டர் மற்றும் ஓட்மீல் போன்ற பொருட்களால் உருவாக்கப்பட்ட ஃபேஸ் மாஸ்க் ஷீட்கள் சரியானவை.



தேயிலை மரம், கரி (Charcol) , கிரீன் டீ மற்றும் மஞ்சள் ஆகியவற்றைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஃபேஸ் மாஸ்க் ஷீட்கள் எண்ணெய் அல்லது முகப்பரு பாதிப்புக்குள்ளான சருமத்திற்கு ஏற்றது. பளபளப்பான மற்றும் மாசுமருவற்ற சருமத்தைப் பெற, வைட்டமின் சி, உருளைக்கிழங்கு, ஜின்ஸெங், அரிசி, எலுமிச்சை அல்லது பால் போன்ற உட்கூறுகள் அடங்கிய தாள்களை பயன்படுத்தலாம். இதேபோல், மாதுளை, கொலாஜன், ஹைலூரோனிக் அமிலம் மற்றும் புளூபெர்ரி ஆகியவை புத்துயிர் மற்றும் வயதான தோற்றத்தை நீக்க உதவும்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Korean Beauty Tips, Skin Care

அடுத்த செய்தி