வீடே மணக்கும் சிக்கன் மசாலா பொடி தயார் செய்வது எப்படி?

இதுவரை செய்ததை விட சற்று வித்யாசமான சுவைக்கு இந்த பொடியை ஒரு ஸ்பூன் சேர்த்துப்பாருங்கள்.

news18
Updated: May 9, 2019, 3:52 PM IST
வீடே மணக்கும் சிக்கன் மசாலா பொடி தயார் செய்வது எப்படி?
சிக்கன் மசாலா பொடி
news18
Updated: May 9, 2019, 3:52 PM IST
சிக்கன் கொழம்பு என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவார்கள். இதுவரை செய்ததை விட சற்று வித்யாசமான சுவைக்கு இந்தப் பொடியை  ஒரு ஸ்பூன் சேர்த்துப்பாருங்கள். வீடே மணக்கும்.

தேவையான பொருட்கள்:

தனியா - 100 கிராம்


சிவப்பு மிளகாய் - 25 கிராம்
மிளகு - 2 tsp
சீரகப் பொடி - 2 tsp

Loading...

சோம்பு - 2 tsp
அரிசி - 2 tsp
ஏலக்காய் - 1 tsp
மஞ்சள் - 1
கசகசா - 1 tsp
கறிவேப்பிலை - சிறிதளவு
பிரிஞ்சு இலை - 2
ஸ்டார் பூ - 1
பட்டை - 1 இஞ்ச்
கிராம்பு - 5
கல் பாசி - சிறிதளவு
கருப்பு ஏலக்காய் - 2
கல் உப்பு - 1 tsp



செய்முறை :

காய்ந்த மிளகாயைத் தவிர மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் கடாயில் எண்ணெய் இல்லாமல் லேசாக வறுத்துக்கொள்ளவும்.

அதை வெப்பம் தனியுமாறு பெரிய தட்டில் கொட்டிக் காயவிடவும்.

தற்போது அனைத்தையும் மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக்கொள்ளவும்.

பொடியை வெப்பம் போக காய வைத்து காற்று புகாத டப்பாவில் அடைத்துவையுங்கள்.

ஒரு மாதம் வரைப் பயன்படுத்தலாம்.




லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: May 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...