முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / Mission Paani | தண்ணீர் பற்றாக்குறைக்குக் காரணம் நீர் வளங்களை சரியாக பராமரிக்காததா..? சேமிப்பு, சிக்கனம் ஏன் அவசியம்..?

Mission Paani | தண்ணீர் பற்றாக்குறைக்குக் காரணம் நீர் வளங்களை சரியாக பராமரிக்காததா..? சேமிப்பு, சிக்கனம் ஏன் அவசியம்..?

மிஷன் பாணி

மிஷன் பாணி

உலக அளவில் 4% குடிநீர் சேமிப்பு உள்ளதெனில் அதில் இந்தியாவிலும் ஒட்டுமொத்த மக்கள் தொகைக்கும் போதுமான தண்ணீர் சேமிப்பு இருக்கிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இந்தியாவில் சமீபத்திய தண்ணீர் பற்றாக்குறையானது நாட்டின் தூய நீர் வளத்தையும், நீர் ஆதாரங்களின் உண்மையையும் மறைத்துவிட்டது. நம் சமூகமாது தூய , சுகாதாரமான குடிநீர் சேமிப்பை பின்பற்றி வந்த பாரம்பரிய வரலாற்றைத் தழுவியது. உலக அளவில் 4% குடிநீர் சேமிப்பு உள்ளதெனில் அதில் இந்தியாவிலும் ஒட்டுமொத்த மக்கள் தொகைக்கும் போதுமான தண்ணீர் சேமிப்பு இருக்கிறது.

அதாவது நாட்டில் 10,360 ஆறுகள் பாய்கின்றன. அவை தோராயமாக 1,869 கன கிலோமீட்டர் வேகத்தில் பாய்கின்றன. ஆனால் சில கட்டமைப்புக் காரணங்களால் அந்த அனைத்து கொள்ளளவு நீரையும் நம்மால் பெற இயலாது. ஆனால் நாம் தண்ணீர் பஞ்சத்தின் போது அவை நமக்குப் பயன்படக்கூடிய நீர் வளங்களாக இருக்கின்றன. அவற்றைக் கொண்டு நம்மால் உயிர் வாழ முடியும் என்னும் நம்பிக்கையை அளிக்கின்றன.

இந்த ஆறுகள் நம் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய முக்கியப் பொருப்புகளைக் கொண்டுள்ள. ஆனால் அவற்றைப் பயன்படுத்த முடியாத சில காரணங்களும் உள்ளன. கங்கா, யமுனா மற்றும் பிரம்மபுத்திரா ஆகிய நதிகள் அந்தந்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பெரும் நம்பிக்கையாக இருக்கின்றன. ஆனால் அந்த நதிகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்வதில் பின் தங்கியிருக்கிறோம். அந்த நதிகளில் மனிதக் கழிவுகளை கொட்டுவதும் , தொழிற்ச்சாலைகளின் கழிவுகளை கலப்பதும் அந்த தண்ணீரை நம்பி இருக்கும் மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த நதிகளை சரியாக பராமரித்தால் அதனைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கையும் மேம்படும்.

மக்களின் வாழ்வாதாரத்திற்கான அடுத்த அடிப்படை நீர் வளம் நிலத்தடி நீர். நிலத்தடி நீரை அதிகமாகப் பயன்படுத்தும் மிகப் பெரிய சமூகம் இந்தியாதான். குறிப்பாக கிராமங்கள், குக்கிராமங்களில் உள்ள மக்களுக்கு நிலத்தடி நீர்தான் வாழ்வாதாரம். அவர்கள் இந்த நீரை கட்டுப்பாடின்றி சுதந்திரமாகப் பயன்படுத்தவும் வழிவகுத்துள்ளனர். இந்த திட்டமற்ற தொடர்ச்சியான பயன்பாடு நிலத்தடி நீரையும் குறைத்துவிட்டது. இந்த தண்ணீர் குறைபாடு மக்களின் தேவைகளுக்காக மட்டுமன்றி மண் வளத்தையும் பாதிக்கிறது. விவசாயத்தையும் பாதிக்கிறது. இதனால் வேளாண் உற்பத்தி குறைகிறது. எனவே நிலத்தடி நீரை பராமரித்து அவற்றை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவக் கால மழையின்போதும் அந்த நீரை சேமிக்க கட்டமைப்புகளை வகுக்க வேண்டும்.

மேலும் படிக்க,.. Mission Paani | விழித்துக்கொள்ள நேரம் வந்துவிட்டது..! தண்ணீர் பற்றாக்குறை முன்னெச்சரிக்கை அறிகுறிகளை இனியாவது கவனிப்போம்..!

பருவ மாற்றம் வானிலை மாற்றத்தின் கட்டமைப்பையே மாற்றிவிட்டது. இருப்பினும் இந்தியா கணிசமான அளவில் மழை நீரைப் பெற்று வருகிறது. இவை அனைத்தையும் ஒப்பிடுகையில் மழை நீரின் மூலம் கிட்டத்தட்ட 4000 கனக் கிலோ மீட்டர் அளவிற்கு தூய நீரை பெற முடியும். அடுத்ததாக மழை நீர் சேமிப்புத் திட்டம் பற்றி பல விழிப்புணர்களைக் செய்தாலும் அவை வீணாகின்றன. ஆனால் மழைநீர் சேமிப்புத் திட்டம் என்பது குறைந்த செலவில், எளிமையான முறையில் செய்யக் கூடிய சேமிப்பு முறையாகும். அதோடு நிலத்தடி நீரையும், மழை நீரையும் பாதுகாக்க இது சிறந்த வழி. இதனால் இந்திய மக்களுக்குத் தேவையான நிலத்தடி நீரை போதுமான அளவில் பெற முடியும். இந்த திட்டம் மழைநீரை சேமித்து வைக்க இயற்கை நமக்குக் கொடுத்த பரிசு. அதை நாம் அனைவரும் பின்பற்றுவது அவசியம். அதை ஒருபோதும் வீணடிக்கக்கூடாது.

இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறையின் அவலம் தீவிரமாகி வருகிறது. ஆனால் இவை அனைத்தையும் ஒவ்வொரு தனி மனிதனின் முயற்சியால் சரி செய்ய முடியும். தண்ணீர் பற்றாக்குறையை போக்கி சிறப்பான முறையில் நிர்வகிக்க முடியும். ஒருவேளை அந்த முயற்சிகளைக் கையிலெடுக்க இதுவே சரியான நேரமாக காலம் நமக்கு உணர்த்தலாம். எனவே விரைந்து செயல்பட முந்துங்கள்.

சி.என்.என் நியூஸ் 18 மற்றும் ஹார்பிக் இந்தியா இணைந்து முன்முயற்சியான மிஷன் பானி என்னும் திட்டத்தை உருவாக்கியுள்ளது. இதனால் இந்தியாவின் விலைமதிப்பற்ற நீர் வளங்களை காப்பாற்றுவதற்கும் சுகாதாரத்தை ஒரு வாழ்க்கை முறையாக மாற்றுவதற்கும் உந்துதலாக இருந்து வழிவகுக்கிறது. எனவே இந்த திட்டத்தில் நீங்களும் இணைந்து உறுதிமொழி எடுத்துக்கொள்வதன் மூலம் நீர் வளங்களின் பாதுகாப்பிற்காக பங்களிக்க முடியும். https://tamil.news18.com/mission-paani/ ஐப் பார்வையிடவும்.

First published:

Tags: Mission Paani, Rain Water Harvesting, Save Water