மாதுளையில் முகப் பராமரிப்பு மேற்கொள்வது எப்படி?

மாதிரிப் படம்

மாதுளை உடலின் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பது மட்டுமன்றி முகப் பொலிவிற்கும் அழகைப் பாதுகாக்கவும் உதவுகிறது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  மாதுளை பழம் உடலின் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பது மட்டுமன்றி முகப் பொலிவிற்கும் அழகைப் பாதுகாக்கவும் உதவுகிறது.எனவே, மாதுளையைக் கொண்டு வீட்டிலேயே எவ்வாறு ஃபேஸ்பேக் செய்யலாம் என்பதைக் கீழே காணலாம்.

  முகக் கருமை நீங்க  தேவையான பொருட்கள்

  • மாதுளை விதைகள் - 1 tbsp

  • எலுமிச்சை பழச் சாறு - 1/2 tbsp


  செய்முறை

  மாதுளை விதைகளை மைய அரைத்துக் கொள்ளவும். அதில் அரை தேக்கரண்டி எலுமிச்சை சாறை ஊற்றி கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதி வரை தடவவும். பின், 30 நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும். எலுமிச்சை கருமையை போக்க வல்லது.

  மென்மையான சருமம் பெற  தேவையான பொருட்கள்

  • மாதுளை விதைகள் - 1 tbsp

  • தேன் - 1 tbsp


  செய்முறை

  மாதுளை விதைகளை பேஸ்டாக அரைத்து அதில் தேன் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதி வரை தடவவும். பின், 30 நிமிடங்கள் காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவவும்.இந்த பேக் மென்மையை மட்டுமன்றி முகத்தில் நீரோட்டத்தையும் அதிகப்படுத்தி வறட்சியைத் தடுக்கிறது.

  இறந்த செல்களை நீக்க  தேவையான பொருட்கள்

  • மாதுளை விதை எண்ணெய் - 2 tbsp

  • பச்சை பப்பாளி பவுடர் - 1 tbsp

  • திராட்சை விதை எண்ணெய் - 1 tbsp

  • திராட்சை விதைச் சாறு - 1 tbsp


  செய்முறை

  மேலே குறிப்பிட்டுள்ள நான்கு பொருட்களையும் சரியான அளவில் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பத்து நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். பின் அரை மணி நேரம் காய விட்டு குளிர்ந்த நீரில் கழுவவும். இந்த மசாஜ் முகத்தில் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி முகத்தில் அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை முற்றிலும் நீக்கி பிரகாசத்தை கொடுக்கும்.

  முகம் பொலிவு பெற  தேவையான பொருட்கள்

  • மாதுளை விதைகள் - 1tbsp

  • கெட்டித் தயிர் - 1 tbsp

  • கிரீன் டீ எசன்ஸ் - 1 tbsp

  • தேன் - 1 tbsp


  செய்முறை

  ஒரு கிண்ணத்தில் மேலே குறிப்பிட்டுள்ள நான்கு பொருட்களையும் நன்றாகக் கலந்து முகத்தில் தடவி 5 - 10 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். பிறகு அதை 20 நிமிடங்களுக்கு காயவிட்டு குளிர்ந்த நீரில் கழுவவும். இது தெளிவான சருமத்தை மீட்டெடுத்து புத்துணர்வை அளித்து பொலிவை ஏற்படுத்தும்.

  முகச் சுருக்கம் நீங்க  தேவையான பொருட்கள்

  • மாதுளை விதைகள் - 1 tbsp

  • கோகோ பவுடர் - 1 tbsp


  செய்முறை

  மாதுளை விதைகளை மைய அரைத்து அதனோடு கோகோ பவுடரை கலந்துகொள்ளவும். மிகவும் கெட்டியாக இருக்கும்பட்சத்தில் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். பேஸ்டாக நன்கு கலந்ததும், முகத்தில் மாஸ்காக அப்ளை செய்யவும். பேஸ்ட் நன்கு காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவவும். இது முகத்தில் சுருக்கங்களை நீக்கி இளமை தோற்றத்தை அளிக்கும்.

  கரும்புள்ளிகள் நீங்க  தேவையான பொருட்கள்

  • மாதுளை விதைகள் - 1/2 tbsp

  • தயிர் - 3 tbsp


  செய்முறை

  மாதுளை விதைகளை பேஸ்டாக்கி அதில் தயிர் கலந்து முகத்தில் தடவவும். 20 நிமிடங்கள் காயவிட்டு குளிர்ந்த நீரில் கழுவவும். இது, கரும்புள்ளிகளை நிக்கி முகத்தின் வறட்சியை நீக்கும்.

  முகப்பருக்கள் நீங்க  தேவையான பொருட்கள்

  • மாதுளை தோல் பவுடர் - 2 tbsp

  • கடலை மாவு - 1 tbsp

  • மில்க் க்ரீம் - 2 tbsp


  செய்முறை

  மாதுளை தோல் பவுடருடன் கடலை மாவை கலந்துகொள்ளவும். பின் மில்க் கிரீமை சேர்த்து பேஸ்டாக கலந்து கொள்ளவும். அதை முகத்தில் சீராக அப்ளை செய்து 20 நிமிடங்கள் காயவிடவும். பின் குளிர்ந்த நீரில் கழுவவும். இவை முகப்பருக்கள் இன்றி தெளிவான முகத்தை அளிக்கும்.

  முக அழுக்கை நீக்க   தேவையான பொருட்கள்

  • மாதுளை தோல் பவுடர் - 3 tbsp

  • எலுமிச்சை சாறு - 1 tbsp

  • ரோஸ் வாட்டர் - 2 tbsp


  செய்முறை

  அனைத்து மூலப்பொருட்களையும் சீராகக் கலந்து பேஸ்ட்டாக்கி கொள்ளவும். அந்த பேஸ்ட்டில் 4 சொட்டு ரோஸ் வாட்டரை தெளிக்கவும். பிறகு அதை முகம் மற்றும் கழுத்து வரை பேக்காக அப்ளை செய்யவும். 20 நிமிடங்கள் காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவவும். இது முக வறட்சியை நீக்கும்.
  Published by:Sivaranjani E
  First published: