சமீபகாலமாக ட்ரெண்டாகும் பட்டர் காபி... நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க!

மாதிரி படம்

காபியில் உள்ள கொழுப்பின் அளவு உங்களை நீண்ட நேரத்திற்கு முழுதாக உணர வைத்திருக்கும் என்றும் இதனால் பசி ஏற்படுதல் தடுக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
காபி, புல்லட் ப்ரூஃப் காபி என்றும் அழைக்கப்படுகிறது. டல்கோனா காபி போல இது சமீபத்தில் ட்ரெண்டாகி வரும் ஒரு சிறந்த பானமாகும். இது கெட்டோ டயட்டின் ஒரு பிரபலமான பானம் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் இது எடை இழப்புக்கு உதவும் என்றும் கூறப்படுகிறது. காபியில் உள்ள கொழுப்பின் அளவு உங்களை நீண்ட நேரத்திற்கு முழுதாக உணர வைத்திருக்கும் என்றும் இதனால் பசி ஏற்படுதல் தடுக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

எடை இழப்புக்கு உதவுவது மட்டுமல்லாமல் பட்டர் காபி குடல் சார்ந்த பிரச்சனைகளையும் தீர்க்கிறது. காலை வெறும் வயிற்றில் காபியை குடிக்க கூடாது என்று சொல்லுவார்கள். ஏனெனில் அவை குடலில் உள்ள அமிலத்தன்மையை பாதிக்கும். இருப்பினும், பட்டர் காபியை குடிப்பதால், இதில் உள்ள வெண்ணெய் குடலின் அமிலத்தன்மை, வீக்கம் மற்றும் அதில் உள்ள கால்சியம் உள்ளடக்கம் ஆகியவற்றைக் குறைக்க உதவுகிறது. வெண்ணெய்யில் நல்ல வகையான கொழுப்புகளான ப்யூட்ரிக் அமிலம் மற்றும் ஒமேகா -3 ஆகியவை நிறைந்துள்ளன. எனவே இது உங்கள் குடல் ஆரோக்கியத்திற்கும் வளர்சிதை மாற்றத்திற்கும் நல்லது.

இதுதவிர, மூளை செயல்பாடுகளை இந்த காபி அதிகரிக்கிறது. தேங்காய் எண்ணெய் மற்றும் வெண்ணெய் உங்கள் உடலில் ஆற்றலை அதிகரிக்க உதவுகின்றன. இது நாள் முழுவதும் உங்களை புத்துணர்ச்சியுடனும், உற்சாகத்துடனும் வைத்திருக்க போதுமானது. இந்த பட்டர் காபி பொதுவாக எந்த இனிப்புகளும் சேர்க்கப்படாமல் தயாரிக்கப்படுகிறது. இருப்பினும், நீங்கள் விரும்பினால், தேவையான சுவைக்கு ஏற்ப சிறிது சர்க்கரை, வெல்லம் அல்லது தேன் போன்ற எந்த ஒரு இனிப்பான்களையும் சேர்க்கலாம். இந்த பட்டர் காபியை எப்படி தயாரிப்பது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

தண்ணீர் - 1 கப்
தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
இலவங்கப்பட்டை தூள் - 1/2 பிஞ்ச்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
காபி - 1/2 டீஸ்பூன்

Also read... நைட் சுட்ட சப்பாத்தி மீந்துபோச்சா..? காலை உணவுக்கு அதில் உப்புமா செஞ்சிடலாம்..! சமையல் குறிப்பு இதோ...

செய்முறை:

1. முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் காபி தூள் சேர்த்து கொதி நிலைக்கு வரும் வரை சூடாக்கவும்.

2. பின்னர் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் தேங்காய் எண்ணெய், வெண்ணெய், ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை தூள் மற்றும் காய்ச்சி வைத்த காபி தண்ணீர் ஆகியவற்றை சேர்க்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக கலக்க நீங்கள் ஒரு பிளெண்டரை பயன்படுத்த வேண்டும். பிளெண்டர் இல்லையெனில் நீங்கள் மிக்சியையும் பயன்படுத்தலாம்.

3. இந்த கலவை மிருதுவாகும் வரை சுமார் 3 முதல் 4 நிமிடங்கள் பிளெண்டரில் கலக்க வேண்டும். இப்பொது காபி அதிக நுரை மற்றும் கிரீம் பதம் கொண்டதாக இருப்பதைக் நீங்கள் காணலாம்.

4. அவ்வளவுதான் உங்கள் பட்டர் காபியை 10 நிமிடங்களில் தயார் செய்து விடலாம். இதனை ஒரு கிளாஸிற்கு மாற்றி பறிமாறலாம்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: