HOME»NEWS»LIFESTYLE»how to know that your using mask expired esr

நீங்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கும் மாஸ்கை புதுபிக்க நேரம் வந்துவிட்டதா..? காலாவதி நாளை கண்டறியும் வழிகள் இதோ...

துணி மாஸ்க்குகள் கிட்டத்தட்ட 70% கொரோனா வைரஸை தடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நீங்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கும் மாஸ்கை புதுபிக்க நேரம் வந்துவிட்டதா..? காலாவதி நாளை கண்டறியும் வழிகள் இதோ...
துணி மாஸ்க்குகள் கிட்டத்தட்ட 70% கொரோனா வைரஸை தடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • Share this:

இந்த கொரோனா நெருக்கடி காலகட்டதில் நமக்கெல்லாம் கைக்கொடுப்பது இந்த மாஸ்குகள்தான். எந்தவித மருத்துவ சிகிச்சைகளும் இல்லாத சூழலில் இந்த மாஸ்குகள்தான் நம் உயிர்க்கவசமாக இருக்கின்றன. இப்படி மாஸ்க் அன்றாட அடிப்படை தேவைகளில் ஒன்றாகிவிட்டதால் நம் சௌகரியத்திற்கு ஏற்ப மாஸ்குகளை பயன்படுத்திக்கொள்கிறோம்.


குறிப்பாக துணியால் செய்யப்பட்ட மாஸ்க்குகள் பட்ஜட் ஃபிரெண்ட்லியாகவும் , பயன்படுத்த எளிமையாகவும் இருப்பதால் அனைவரும் அதையே விரும்புகின்றனர். இந்த துணி மாஸ்க்குகள் கிட்டத்தட்ட 70% கொரோனா வைரஸை தடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்படி எல்லா விதங்களிலும் ஒத்துப்போகும் இந்த மாஸ்க்குகளை என்னதான் துவைத்து காய வைத்து சுத்தமாக பயன்படுத்தினாலும் அதற்கென ஒரு காலாவதி நாள் உள்ளது. அப்படி நீங்கள் பயன்படுத்தும் மாஸ்க்கை எப்போது மாற்றி புதிய மாஸ்க்கை பயன்படுத்த வேண்டும் என்று தெரியுமா..?


பொதுவாக துணி மாஸ்க்குகளை சுடு தண்ணீரில்தான் ஊற வைத்து துவைத்து நன்கு வெயில்படும் படி காய வைக்க வேண்டும். அப்படி முறையாக பராமரிப்பதால் மாஸ்க்குகள் நீண்ட நாட்களுக்கு உழைக்கும். நீங்கள் பயன்படுத்தும் துணி வகையைப் பொறுத்தும் , பராமரிக்கும் முறை ,எத்தனை முறை துவைத்தீர்கள் என்பதைப் பொறுத்தே அதன் காலவதி நாள் நிர்ணயிக்கப்படும்.




எனவே அதன் காலவதி நாள் என்பது உங்கள் பயன்பாட்டின் தன்மையைப் பொருத்தது. உதாரணமாக நீங்கள் தினமும் நீண்ட தூரம் பயணம் செய்கிறீர்கள், நாள் முழுவதும் மாஸ்க் அணிகிறீர்கள் எனில் நீங்கள் கட்டாயம் அடிக்கடி வாஷ் செய்யக்கூடும். அப்படியிருக்க துணியின் தரம் , எந்த அளவிற்கு மாசுப்பட்டுள்ளது எனப்தைப் பொறுத்து மாற்றிவிடுவது நல்லது.


உதாரணமாக நீங்கள் பயன்படுத்தும் மாஸ்க்கின் துணி தரம் மெலிந்துவிட்டது, வாங்கிய புதிதில் இருந்த இறுக்கம் இல்லை, மூக்கு, தாடை பகுதியில் காற்று உள்ளே செல்கிறது, நன்கு முகத்தை மூடவில்லை, அடிக்கடி நீங்கள் சரி செய்ய வேண்டியதாக உள்ளது, கீழே இறங்கிவிடுகிறது, எலாஸ்டிக் போய்விட்டது, மாட்டும் கயிறு அறுபடுவது போல் உள்ளது, துணியில் ஓட்டை இப்படியான பிரச்னைகள் உள்ளது எனில் உடனே மாஸ்க்கை மாற்றிவிடுங்கள்.


அதேபோல் நாள் முழுவதும் மாஸ்க் அணிகிறீர்கள் எனில் ஒரே மாஸ்க் அணிவதை தவிருங்கள். மாற்றிக்கொள்ள மற்றொரு மாஸ்க் கையில் வைத்துக்கொள்வது நல்லது. அதில் வியர்வை, ஈரம் படிந்துவிட்டது, அதிக மாசு, தூசி உள்ளது எனில் உடனே அந்த மாஸ்க்கை ஒரு இறுகிய பையில் போட்டு மூடிவிட்டு மற்றொரு மாஸ்க்கை பயன்படுத்துங்கள். கழுவ முடிந்தால் கழுவி காய வையுங்கள்.
Published by:Sivaranjani E
First published: