டீன் ஏஜ் பருவத்தில் உயரத்தை அதிகரிப்பது எப்படி? 18 வயதுக்கு பிறகு சாத்தியமா?

டீன் ஏஜ் பருவத்தில் உயரத்தை அதிகரிப்பது எப்படி? 18 வயதுக்கு பிறகு சாத்தியமா?

கோப்புப் படம்

சிலர் தாங்கள் இருக்கும் உயரத்தை விட கூடுதலாக வளர வேண்டும் என முயற்சி செய்கிறார்கள்.

  • News18
  • Last Updated :
  • Share this:
நம்மில் பெரும்பாலானோர் வளரக்கூடிய பருவத்தில் அதிகபட்ச உயரத்தை அடைந்துவிடுகிறோம். ஆனால், சிலர் தாங்கள் இருக்கும் உயரத்தை விட கூடுதலாக வளர வேண்டும் என முயற்சி செய்கிறார்கள். அவர்களின் முயற்சிக்கு பலன் கிடைக்குமா? ஊட்டசத்தான உணவுடன் கூடிய உடற்பயிற்சி சாத்தியமா? என்பதை இங்கு தெரிந்துகொள்வோம்.

உடல் உயரத்தை தீர்மானிப்பது எது?

உங்களின் உடல் வளர்ச்சியை அதிகரிக்க முடியுமா? என்பதை அறிந்து கொள்ள நீங்கள் அறிவியல் ரீதியான சில உண்மைகளை தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவர் உயரமாக இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு. மரபணுகள், ஹார்மோன்களின் மாற்றம் ஆகியவை உடலின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பதால், அதனைப் பொறுத்து உங்களின் உயரம் தீர்மானிக்கப்படுகிறது. உடலின் வளர்ச்சித் தகடுகளில் ஏற்படும் மாற்றம், பருவ வயதை கடந்த பிறகு வளர்ச்சி தடைபடுவதற்கு காரணமாக கூறப்படுகிறது. பெண்களைப் பொறுத்தவரையில் 16 வயதுக்குள் அதிகபட்ச உயரத்தை அடைந்துவிடுகின்றனர். 14 முதல் 18 வயதிற்குள் ஆண்கள் அதிகபட்ச உயரத்தை பெறுகிறார்கள். முதுகெலும்பின் நீளம், குருத்தெழும்பு இழப்பு ஆகியவை உடல் உயரத்தில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தும்.

மேலும், வெளிப்புறச்சூழல்களும் உடல் உயரத்தை தீர்மானிப்பவையாக உள்ளன. உண்ணும் உணவு, உடற்பயிற்சி வழியாகவும் உடலின் உயரத்தை அதிகரிக்க முடியும். உயரம் தொடர்பாக நடத்தப்பட்ட பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவில், தொடர்ச்சியான ஊட்டசத்து மிக்க உணவு, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, உடற்பயிற்சி ஆகியவை ஒருவரின் உயரத்தை தீர்மானிக்கும் காரணிகளாக உள்ளன.

 

டீன் ஏஜ் பருவத்தில் உயரத்தை அதிகரிப்பது எப்படி?

பதின்பருவ வயதை கடந்த பிறகு உடல் உயரத்தை அதிகரிக்க மாய மந்திரங்களை நீங்கள் செய்ய வேண்டியதில்லை. ஆரோக்கியமான உணவு முறை மூலம் உடலின் வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். கால்சியம், வைட்டமின் பி, டி மற்றும் 12 ஆகியவை நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். பதின்ம வயதுகளில் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பது புரதம். அதனால், புரதம் நிறைந்த உணவுகளுடன் ஒரு நாளைக்கு 45 நிமிடங்கள் உடற்பயிற்சி அல்லது விளையாட வேண்டும். உடல் வளர்ச்சியில் தூக்கமும் அவசியம் என்பதை அதனை எளிதாக எடுத்துகொள்ளாமல், ஆரோக்கியமான தூக்கத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். மூச்சுப் பயிற்சி அவசியம்.

பதின்பருவத்துக்குப் பிறகு உடல் எடையை அதிகரிப்பது எப்படி?

பதின் பருவத்துக்குப் பிறகு உடற்பயிற்சி மற்றும் உணவு முறை மூலம் உங்களின் உடல் உயரத்தை அதிகரிக்க வாய்ப்புகள் மிக குறைவு. ஆனால், சரியான வாழ்க்கை முறை மூலம் உங்கள் உயரத்தில் அங்குல வித்தியாசத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்த முடியும். அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

அமரும் நிலை

ஒரே இடத்தில் அல்லது இருக்கையில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தால் உங்களின் முதுகெலும்பு பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் குறுகிய நிலையில் அமர்ந்திருப்பீர்கள் என்பதால், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு வளர்ச்சி குறையவும் வாய்ப்புகள் உள்ளன. அதனால், நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதை தவிர்க்க வேண்டும். நாள்தோறும் முதுகெலும்பு பயிற்சிகள் செய்ய வேண்டியது அவசியம். இந்த பயிற்சிகளை தொடர்ந்து செய்தால், உடலின் உயரம் குறையாமல் இருக்கும் அதேவேளையில் சில அங்குல அளவில் அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளன.



யோகா பயிற்சி

உடல் ஆரோக்கியத்துக்கு இன்றியமையாதது யோகா. வழக்கமாக யோகா செய்யும்போது உடல் மற்றும் மனது இரண்டும் ஆத்ம திருப்தியாக இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். சில யோகா பயிற்சிகளை செய்யும்போது உங்களின் உடல் தோரணையை அழகாக மாற்றுவதுடன், உயரத்தையும அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.

தசை வளர்ச்சி

கடினமான தசைகள் உங்களின் உயரத்தைக் கூட்டும். நீங்கள் விரும்பும் உயர்த்தை பெறுவதற்கு உதவியாக இருக்கும். அதனால், அன்றாட உடற்பயிற்சி மூலம் தசைகளை கடினமாக்குங்கள். அவை உங்களின் தோற்றத்தை சுறுசுறுப்பாக மற்றும் மிடுக்காக காட்டுவதுடன், உயரமாக இருப்பது போன்ற தோற்றத்தையும் வெளிப்படுத்தும். உடற்பயிற்சி மட்டும் தசைகளின் வளர்ச்சிக்கு போதாது. சரியான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக்கொள்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.



உடை அழகு

நாம் அணியும் சில உடைகள் கூட உயரமான அல்லது குறைவான உயரத்துடன் இருப்பதுபோன்று தோன்றும். உடலுக்கு நேர்த்தியான உடைகளை தேர்வு செய்து அணிவது உங்களின் தோற்றத்தை அழகாக காட்டுவதுடன், உயரமாக இருப்பதுபோலவும் வெளிப்படுத்தும். ஷூ அல்லது ஹீல்ஸ் காலணிகள் உங்களின் உயரத்தை அதிகரிக்க உதவும். உங்களுக்கு பிட்டான உடைகளை தேர்வு செய்து, நேர்த்தியான அணிந்தால் சூப்பராக இருப்பீர்கள்.

Also read... WFH காரணமாக பத்தில் 4 இந்திய பெண்கள் கவலை தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்- ஆய்வு

உயர இழப்பை தடுப்பது எப்படி?

வயதானோர்களுக்கு உயரத்தை அதிகரிக்க முடியாது என்றாலும், சில உடல் பிரச்சனைகளால் உயரத்தை இழக்க நேரிடும். அதாவது, ஆஸ்டியோபோரோசிஸ், முதுகெலும்பு சுருக்க உள்ளிட்டவையால் வயதானோர் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. அவற்றில் இருந்து தப்பிக வேண்டுமென்றால், மேற்கூறியதுபோல் கட்டாயம் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நாள்தோறும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். வைட்டமின் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளும் அதேவேளையில், புகையிலை பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
First published: