Home /News /lifestyle /

Happy Mother's Day : அன்னையர் தினத்தன்று உங்கள் அம்மாவை இம்பிரஸ் செய்ய சில ஐடியாக்கள்..

Happy Mother's Day : அன்னையர் தினத்தன்று உங்கள் அம்மாவை இம்பிரஸ் செய்ய சில ஐடியாக்கள்..

காட்சி படம்

காட்சி படம்

Mothers Day 2022 : அன்னையர் தினத்தை சிறப்பாக்க வேண்டுமா? இதை செய்யுங்கள்..

அன்னையர் தினம் இன்னும் இரு தினங்களில் கொண்டாடப்பட இருக்கிறது. ஒவ்வொரு சிறப்பு தினத்துக்கான கொண்டாட்டமும் சில நாட்களுக்கு முன்பே தொடங்கி விடுவது போலவே, அன்னையர் தினத்துக்கான கொண்டாட்டமும் தொடங்கி விட்டது. தற்போது எல்லாருக்குமே மதர்ஸ் டேக்கு ஏதாவது ஸ்பெஷலாக செய்ய வேண்டும் என்று ஆசை இருக்கிறது. பாலிவுட்டின் நட்சத்திரமான மற்றும் பிரபல எழுத்தாளரான டிவிங்கிள் கன்னா, மதர்ஸ் டேவை எப்படி சிறப்பாக மாற்றுவது என்பது பற்றிய வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

உங்களுடைய அம்மாக்களுக்குக் நீங்கள் சிறப்பான பரிசுகளை வழங்கலாம், அவர்களுக்கு பிடித்த எக்சாடிக் உணவை சமைத்துக் கொடுக்கலாம். அவர்கள் நீண்ட நாட்களாக விரும்பும் பொருளை பரிசாகத் தரலாம். அம்மாவின் முகத்தில் புன்னகையை வரவழைக்கும் எந்த ஒரு விஷயத்தையும் செய்யலாம். ட்விங்கிள் கன்னா தான் ஒரு அற்புதமான ஆலோசனையை இந்த சிறிய வீடியோ மூலம் அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதைக் காட்டியுள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு கணக்கெடுப்பில், அன்னையர் தினப் பரிசாக என்ன வேண்டுமென்று அம்மாக்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் தூங்க நேரம் வேண்டும் என்றும், யாராவது தனக்கு பதிலாக சமைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர். ஒரு குடும்பத்துக்கு உணவு சமைப்பது என்பது பெரிய விஷயம். அதே போல சமைத்த உணவை அழகாக பரிமாறுவது என்பதும் மிகப்பெரிய விஷயம்.

also read : உங்க அம்மாவுக்கு கிஃப்ட் மட்டும் போதாது... இதையும் செய்யுங்கள்..!

அன்னையர் தினத்துக்காக நீங்கள் ஸ்பெஷல் உணவு சமைத்து அதை அழகாக மேசையில் அடுக்கி வைக்கலாம். அதை எப்படி செய்ய வேண்டும் என்பதற்கான ரீலை டிவிங்கிள் கன்னா பகிர்ந்துள்ளார்.



 




View this post on Instagram





 

A post shared by Twinkle Khanna (@twinklerkhanna)





உங்கள் மனைவிக்கோ அல்லது உங்கள் அம்மாவுக்கோ நீங்கள் மதர்ஸ் டே சிறப்பு பரிசு வழங்க விரும்பினால், அவர்கள் விரும்பும் உணவை சமைத்து, அழகாக அலங்கரித்து பரிமாறுங்கள். சமைக்க முடியவில்லை என்றால், விரும்பும் உணவுகளை வாங்கி பரிமாறலாம். பெண்களுக்கு ஒரு நாள் சமைத்து உணவு பரிமாறிப் பாருங்கள், எவ்வளவு மகிழ்வார்கள் என்பதை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்!

also read :  பரிசுகளைக் காட்டிலும் அம்மாக்கள் அதிகம் மகிழ்வது இந்த விஷயத்தில்தான்..!



அழகான அலங்காரத்துடன் உணவு பரிமாறுவது எப்படி என்பதற்கான டிப்ஸ்:

* அழகான தட்டுகளை மேசையில் வைக்கவும்
* விதவிதமான கண்ணாடி கோப்பைகளை குவளைகளாகப் பயன்படுத்தவும்.
* டைனிங் அறையை அழகாக மாற்ற, வாசனை மெழுகுவர்த்திகளை பயன்படுத்தலாம்.
* கிடைக்கும் வண்ணப் பூக்களைக் கொண்டு அழகான தோரணங்கள் செய்து அலங்கரிக்கலாம்.
* பட்ஜெட்டுக்கு ஏற்ற ஒளி குறைந்த வண்ண விளக்குகளை வாங்கி பயன்படுத்தலாம்.
* உணவுகளை மேசையில் வைத்து, வெளிச்சத்துக்கு மெழுகுவர்த்திகள் ஏற்றி, உங்கள் வீட்டுப்பெண்களுக்கு
* சர்ப்பரைஸ் பரிசு அளியுங்கள்.
* சிறிய பரிசுகளையும் வழங்கி அவர்களை மகிழ்ச்சியாக்கலாம்.

அதாவது, காதலர் தினத்தைக் கொண்டாடுவது போலவே, அன்னையர் தினத்தையும் கொண்டாடலாம். அதே போல, அன்னையர் தினத்தில் தனித்துவமாக மற்றும் எளிதாக ஈர்க்கக்கூடிய ஏதாவது ஒன்றை செய்ய விரும்பும் தந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கு, ட்விங்கிள் கன்னா தனது வீடியோவில் பல டிப்ஸ்களை பகிர்ந்துள்ளார்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Mothers day

அடுத்த செய்தி