குங்குமப் பூ என்றாலே விலை கூடுதலான ஒரு உணவுப் பொருள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அப்படி விலை கொடுத்து வாங்கும் குங்குமப் பூ ஒரிஜினல் அல்லாமல் போலியாக இருந்தால்..? எனவே நீங்கள் வாங்கும் குங்குமப்பூ ஒரிஜினலா அல்லது போலியா என்பதைக் கண்டறிய சில டிப்ஸ் உங்களுக்காக...
குங்குமப்பூ வாங்கி வந்தவுடன் முதலில் அதை திறந்து வாசனையை நுகர்ந்து பாருங்கள். அதன் வாசனை இனிப்பு போன்று அல்லது கிட்டத்தட்ட தேன் போன்ற மணம் வந்தால் அது ஒரிஜினல் குங்குமப்பூ.
அடுத்ததாக அந்த குங்குமப்பூவை வாயில் வைத்துப் பாருங்கள். அதன் சுவை இனிப்பாக தெரிந்தால் அது போலியானது. ஆம்..ஒரிஜினல் குங்குமப்பூ வாசனையில் மட்டும்தான் இனிப்பு வகை போன்று இருக்கும். ஆனால் அதன் சுவை ஒருபோதும் அப்படி இருக்காது.
மற்றொரு சோதனையாக சில குங்குமப்பூக்களை சூடான தண்ணீரில் போட்டுப் பாருங்கள். உடனே தண்ணீர் தங்கமாக மாறும். அதிலிருந்து மெல்லிய வாசனை வரும். அதோடு 24 மணி நேரத்திற்கு அதிலிருந்து வண்ணம் வந்து கொண்டே இருக்கும். அப்படி வந்தால் அது ஒரிஜினல். மாறாக போட்டவுடன் நிறம் குறைந்து மங்கினால் போலியான குங்குமப்பூ.
அடுத்ததாக பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து அதில் கொஞ்சம் குங்குமப்பூ சேர்த்து கலந்துவிட்டால் உடனே மஞ்சளாக மாறும். அவ்வாறு இல்லாமல் வெளிர் சிவப்பு நிறத்தில் மாறினால் அது போலியானது.
அடுத்த முறை குங்குமப்பூ வாங்கினால் வீட்டில் இந்த சோதனைகளை செய்து பாருங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.