ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

வீட்டிலிருந்தே வேலை செய்வதால் மனச்சோர்வு ஏற்படுகிறதா ? இதை படியுங்கள்..

வீட்டிலிருந்தே வேலை செய்வதால் மனச்சோர்வு ஏற்படுகிறதா ? இதை படியுங்கள்..

காட்சி படம்

காட்சி படம்

கொரோனா ஊரடங்கால் வீட்டிலிருந்தே வேலை செய்வதால் பெரும்பாலானோருக்கு மனநலம் பாதிப்படைகிறது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்து சுமார் ஒரு வருடம் முடிய போகிறது. அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் தான் கொரோனா தொற்றுநோய்க்கு அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளாக உள்ளன. மேலும் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை பரவ தொடங்கியதால் இந்தியா உட்பட பல நாடுகளில் பள்ளிகள் கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. அதேபோல, சில துறை சார்ந்த ஊழியர்கள் வீடுகளில் இருந்தபடியே பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த கொரோனா தொற்று காரணமாக சமூக விலகல், சானிடைசர்கள், முகக்கவசங்கள் ஆகியவை எப்படி வாழ்வின் ஒரு அங்கமாக மாறியதோ, அதேபோல வீட்டில் இருந்து வேலை பார்ப்பதும் இயல்பான ஒன்றாக மாறியது. மேலும் வீட்டில் இருந்தபடியே வேலை பார்ப்பதால் ஒருவர் பயண நேரத்தை மிச்சப்படுத்துவதன் மூலம், போக்குவரத்து உமிழ்வுகளிலிருந்து மாசுபடுவதையும் தடுக்கலாம். மேலும் வேலையில் அதிக உற்பத்தி மற்றும் அறிவுக்கு தகுதியானவற்றில் கவனம் செலுத்தலாம்.

அதேபோல உங்கள் குடும்பத்தினருடனோ, அன்பானவர்களுடனோ அல்லது ஏதேனும் சில விஷயங்களுக்காக உண்மையான, தரமான நேரத்தை நீங்கள் செலவிடலாம். என்னதான் வீட்டில் இருந்தபடி வேலை பார்த்தாலும் மக்கள் சில மன ஆரோக்கிய சிக்கலைகளை சந்திக்கின்றனர். அதிக நேரம் பணிபுரிவது போன்ற காரணங்களால் பலருக்கு மனச்சோர்வு மற்றும் மன அழுத்தம் அதிகரிக்கிறது. அந்த வகையில் வீட்டில் இருந்தே பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் சிறந்த மன ஆரோக்கியத்தை மேம்படுத்த சில மிகச் சிறந்த வழிகள் இருக்கிறது.

1. மனச்சோர்வைத் தடுக்கும் நடவடிக்கைகள்:

a. மனச்சோர்வினை தடுக்க தினமும் உடற்பயிற்சி செய்யலாம் அல்லது நீண்ட தூரம் நடைப்பயிற்சி செல்லலாம். மேலும் படிக்கட்டுகளில் ஏறும் பழக்கத்தை தினசரி வொர்க்அவுட் போலவும் மேற்கொள்ளலாம். உடற்பயிற்சி காரணமாக சுரக்கும் எண்டோர்பின் உங்கள் மனதை உற்சாகத்தோடு வைத்திருக்க உதவுகிறது. அதேபோல குறைந்தது 20 நிமிட தியானத்துடன் உங்கள் நாளை ஆரம்பித்தால் மனஆரோக்கியம் மேம்படுகிறது.

b. மனநலனை அதிகரிக்க நன்றாக உறங்குங்கள்.

c. சில நேரங்களில் தனிமையை உணருவது முற்றிலும் சரி என்பதை அறிந்து கொள்ளுங்கள். மேலும் தனிமையை உணரும் நேரத்தில் நீங்கள் நம்பக்கூடிய ஒருவருடன் பேசவும், தேவைப்படும் போதெல்லாம் தொழில்முறை ஆலோசனையைப் பெறுபவதும் நல்லது.

Also read : அலுவலகத்தில் சக பணியாளர்கள் உங்கள் மீது பொறாமை படுகிறார்களா..? கண்டுபிடிக்க டிப்ஸ்!

2. வீட்டில் பணியிடத்தை அமையுங்கள் :

உங்கள் வீட்டின் ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்து, மேஜை, நாற்காலி, வேலை செய்வதற்கு தேவையான சில அத்தியாவசிய பொருட்களுடன் ஒரு சிறிய பணி நிலையத்தை அமைத்துக் கொள்ளுங்கள். அடிப்படையில், நீங்கள் அமர்ந்திருக்கும் தோரணையை கவனித்துக் கொள்ளவேண்டும். இதனால் நீங்கள் உங்கள் வீட்டு சூழல் மற்றும் வேலை சூழல் இரண்டையும் வேறுபடுத்திக் கொள்ளலாம்.

இந்த வேறுபாடு தினசரி வீட்டிலிருந்து வேலை செய்யும் போது மன ஆரோக்கியத்திற்கு சில அதிசயங்களைச் செய்கிறது. வீட்டில் உங்களுக்கென ஒரு பணியிடத்தை நீங்கள் உருவாக்கியதும், அலுவலக நேரப்படி பணிபுரியும் வழக்கத்தை உங்களால் உருவாக்க முடியும். இந்த வழியில் வேலை அழுத்தத்தின் நீடித்த விளைவு நிறுத்தப்படலாம். மேலும் நீங்கள் தானாகவே மன அமைதியை அனுபவிப்பீர்கள்.

3. டிஜிட்டல் டிடாக்ஸ்:

நீங்கள் அலுவலக வேலையை முடித்த பிறகு, சிறிது நேரம் உங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது மனஅழுத்தத்தை குறைக்கிறது. பெரும்பாலும், வீட்டில் இருந்து பணிபுரிபவர்கள் வேலை நேரம் முடிந்ததும் தங்கள் ஸ்மார்ட்போனில் நேரத்தை செலவிடுகின்றனர். இருப்பினும் அந்த நேரத்தை உங்கள் அன்புக்குரியவர்களுடனோ அல்லது குடும்பத்தினருடனோ செலவிடும் போது மன அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது.

4. பொமோடோரோ முறையைப் பின்பற்றவும்:

இது நேர மேலாண்மை நுட்பமாகும். வீட்டில் இருந்தபடி வேலை பார்க்கும் ஒருவர் தங்கள் பணிகளை சிறு சிறு டாஸ்க்குகளாக பிரித்து கொள்ளுங்கள். 25 நிமிடங்களுக்கு ஒரு டைமரை அமைத்து வேலையைத் தொடங்குங்கள், பின்னர் டைமர் அணைக்கப்பட்டவுடன் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். டைமரைப் பயன்படுத்தி வேலை செய்வதால் குறுகிய நேரத்திற்கு உங்களால் இடைவெளி எடுக்க முடியும். இதனால் வேலைப்பளு குறைவதோடு மனஅழுத்தமும் குறையும்.

5. விர்ச்சுவல் மூலம் சக ஊழியர்களுடன் சந்திப்பு:

உங்கள் சக ஊழியர்களுடன் விர்ச்சுவல் அழைப்புகளைப் பெற்று, வேலையைத் தவிர வேறு விஷயங்களையும் பற்றி பேச முயற்சிக்கலாம். ஒன்றாக மதிய உணவு சாப்பிடுவது, பிறந்தநாளைக் கொண்டாடுவது அல்லது வீடியோ அழைப்புகளில் ஏதேனும் அரட்டை அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.

6. உங்கள் பணியிடத்தை உற்சாகப்படுத்துங்கள்:

உங்கள் வீட்டில் நிறைய தாவரங்கள் மற்றும் பூச்செடிகளை வைக்கலாம். மேலும் உங்கள் வீட்டு சுவரில் பாசிட்டிவ் விஷயங்களை கொண்ட கருத்து படங்களை ஒட்டி வைக்கலாம். இதன் மூலம் உங்கள் மனம் உற்சாகமடைவதோடு, உங்களை சுற்றி பல நல்ல எண்ண ஓட்டங்கள் இருப்பதை நீங்கள் உணர்வீர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Mental Health, Work From Home