கொரோனா வைரஸ் குறித்து பிள்ளைகளிடம் எப்படி புரிய வைப்பது..?

உங்கள் பிள்ளை எந்த கேள்வி கேட்டாலும் அதற்கு பதிலளிக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் குறித்து பிள்ளைகளிடம் எப்படி புரிய வைப்பது..?
கொரோனா
  • Share this:
COVID-19 குறித்த ஆபத்தை பலரும் தற்போது உணர்ந்து வருகின்றனர். இதனால் தாங்களாகவே முன் வந்து பலரும் வீடுகளுக்குள் தனிமைப்படுத்திக் கொண்டு வருகின்றனர்.

இருப்பினும் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு சுற்றிலும் என்ன நடக்கிறது, ஏன் யாரும் வெளியே செல்லக்கூடாது என்று சொல்கிறார்கள் என குழப்பத்திலும், ஒருபக்கம் உங்கள் பேச்சுகள் மறும் உங்களுடைய பதட்டத்தைக் கண்டு என்னவென்றே தெரியாத குழந்தைகளும் பீதியில் இருப்பார்கள். ஆனால் இந்த பயம்தான் மிகப்பெரிய கொடிய நோய் என்பதை மறவாதீர்கள்.

எனவே சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லுங்கள். கேட்டாலும் உதாசினம் செய்யாமல் அவர்களுக்கு கொரோனா என்றால் என்ன என்பதை விளக்குங்கள்.


அதற்கு முதலில் உங்களுக்குத் தெளிவான புரிதல் அவசியம் என்கிறார் ஹெல்த்லைன் இதழுக்கு பேட்டியளித்த மருத்துவர் ஹலே. நீங்கள் COVID-19 என்றால் என்ன..அது எந்த மாதிரி பரவுகிறது , எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பன போன்ற விஷயங்களை முதலில் நீங்கள் தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும். அதன் பிறகே உங்கள் பிள்ளை புரிந்துகொள்ளும்படி எடுத்துரைக்க வேண்டும். உங்கள் பிள்ளை எந்த கேள்வி கேட்டாலும் அதற்கு பதிலளிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் மனதில் இருக்கும் பயம் நீங்கும். அதேபோல் தற்போது கொரோனா குறித்த வதந்திகளும் பரவி வருவதால் அதை படித்துவிட்டு பயமுறுத்தும் அளவிற்கும் குழந்தைகளிடம் பேசாதீர்கள். முதலில் உங்களுக்கும் அந்த பயம் இருத்தல் கூடாது” என்கிறார் ஹலே.

அடுத்ததாக சுகாதாரமாக இருத்தல், அடிக்கடி கைக்கழுவுதல், தனிமைப்படுத்திக்கொள்ளுதல், முகம், வாய், மூக்கைத் தொடாமல் இருத்தல் போன்றவற்றின் அவசியத்தையும் பேசுவது அவசியம்” என்கிறார் ஹலே.

எனவே நீங்கள் பயந்து குழந்தைகளையும் பயமுறுத்தாமல் அவர்களின் சந்தேகங்கள், குழப்பங்களை தெளிவுபடுத்த நீங்கள் தெளிவான தகவல்களோடு இருக்க வேண்டும் என்பதையே கூறுகிறார்.

 

 

 

 
First published: March 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading