Home /News /lifestyle /

Whatsapp-ல் வித்தியாசமாக காதலர் தின வாழ்த்து... விதவிதமான GIF-களை பகிர்வது எப்படி?

Whatsapp-ல் வித்தியாசமாக காதலர் தின வாழ்த்து... விதவிதமான GIF-களை பகிர்வது எப்படி?

 காதலர் தின வாழ்த்து

காதலர் தின வாழ்த்து

Valentine’s Day 2022 : GIFகள் பகுதிக்கு நேரடியாகச் செல்வதற்குப் பதிலாக நீங்கள் விருப்பங்களின் இடதுபுறத்தில் மேலே உள்ள இணைப்பு ஐகானைத் க்ளிக் செய்வதன் மூலம் GIFகளை உருவாக்கலாம்.

உலகம் முழுவதும் இன்று காதலர் தின கொண்டாட்டம் களைகட்டி வருகிறது. இந்த விசேஷமான நாளை மேலும் சிறப்பானதாக மாற்ற தங்கள் அன்புக்குரியவர்களுக்கு வாழ்த்துகள், பரிசுகள் அல்லது ஸ்பெஷல் சர்ப்ரைஸ்களை கொடுத்து அசத்துவார்கள். இதயங்களுக்கு இடையே அன்பை மட்டுமல்ல இன்று வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொள்வது அவசியம்.

காதலர் தின வாழ்த்துச் செய்திகளை அனுப்புவதன் மூலம் அன்பை வெளிப்படுத்த பல வழிகள் உள்ளன. அதிலும் GIFகளைப் பகிர்வது உங்கள் அன்பை வெளிப்படுத்துவது மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும். நீங்கள் நேசிக்கும் ஒருவருக்கு வாழ்த்துக்களை அனுப்ப எண்ணினால் அதற்கு வாட்ஸ் அப் ஒரு சிறந்த சோசியல் மீடியா பிளாட் பார்ம் ஆகும்.

2022 காதலர் தினத்திற்கான WhatsApp-யில் முப்பரிமாண ஜிஃப் இமெஜ்களை பதிவிறக்கம் செய்து அனுப்புவது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

1. முதலில் நீங்கள் யாருக்கு வாட்ஸ் அப் GIF அனுப்ப விரும்புகிறீர்களோ அவர்களின் வாட்ஸ் எண்ணை தேர்ந்தெடுத்து ஓபன் செய்து கொள்ளுங்கள்.

2. அதில் Emoji ஸ்டிக்கர் ஐகானுக்கு அருகேயுள்ள GIF என்ற ஐகானை க்ளிக் செய்யுங்கள்

3. அங்கு மேலே தோன்று சர்ச் என்ற இடத்தில் தேடல் ஐகானைத் தட்டி இனிய காதலர் தின GIF அல்லது i Love you GIF என்று தேடவும்.

4. பல GIFகள் திரையில் காட்டப்படும். அவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து உங்கள் உள்ளம் கவர்ந்தவருக்கு அனுப்பலாம்.

இதையும் படியுங்கள் : Valentines Day 2022 : காதலர்களுக்கு மட்டும்தானா... சிங்கிள் பசங்களுக்கும் ஃபீலிங்ஸ் இருக்கு... ஹிட் கொடுத்த பாடல்களின் தொகுப்பு

GIF-யை உருவாக்குவது எப்படி?

GIF பைல்களை தேடி, தேர்வு செய்வதற்கு பதிலாக நீங்கள் விரும்பும் வகையிலான GIF இமெஜ்களை உருவாக்கவும் முடியும். அதற்கு கீழகாணும் வழிமுறைகளை பின்பற்றலாம்.

1. GIFகள் பகுதிக்கு நேரடியாகச் செல்வதற்குப் பதிலாக நீங்கள் விருப்பங்களின் இடதுபுறத்தில் மேலே உள்ள இணைப்பு ஐகானைத் க்ளிக் செய்வதன் மூலம் GIFகளை உருவாக்கலாம்.

2. Attachment ஐகானை க்ளிக் செய்த பிறகு அதில் கேலரி என்பதை தேர்வு செய்யுங்கள்.

3. கேலரியில் இருந்து GIF ஆக அனுப்ப விரும்பும் வீடியோவைத் தேர்ந்தெடுக்கவும்.

4. மேல் வலது மூலையில் உள்ள வீடியோ ஐகானைத் க்ளிக் செய்தால், நீங்கள் தேர்வு செய்த வீடியோ GIFக்கு மாறும்.

5. அதன் பின்னர் தோன்றும் பட்டியில் இருந்து நீங்கள் GIF ஆக அனுப்ப விரும்பும் வீடியோவின் குறிப்பிட்ட பகுதியை தேர்ந்தெடுக்கவும்.

6. அவ்வளவு தான் நச்சுன்னு ஒரு டைட்டிலை வைத்து நீங்களே பிரியமானவருக்காக தயார் செய்த GIF-யை அவருக்கு அனுப்பலாம்.

இதையும் படியுங்கள் : காதலர் தின கட்டுப்பாடு: ஹிஜாப் மற்றும் தொப்பிகளை அணிய மாணவர்களுக்கு உத்தரவிட்ட பாக்., மருத்துவ கல்லூரி

காஸ்ட்லியான கிப்ட், இன்பச் சுற்றுலா, நட்சத்திர ஓட்டலில் விருந்து என கொடுத்து தான் நீங்கள் காதலிப்பவரை அல்லது திருமணத்திற்கு பிறகு காதலித்து வருபவரை குஷியாக்க வேண்டும் என்று இல்லை. அவர்கள் எதிர்பாராத நேரத்தில் ஒரு ஸ்பெஷலான GIF பைல் ஒன்றை தயார் செய்து தட்டிவிடுங்கள், அதை பார்க்கும் அந்த தருணம் உங்கள் பார்ட்னரின் முகத்தில் உற்சாகத்துடன் கூடிய பிரகாசமான புன்னகை தோன்றினால் அதுவே அனைத்தையும் விட இந்த நாளை ஸ்பெஷலானதாக மாற்றிவிடும்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Lovers day, Valentines day

அடுத்த செய்தி