• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கொரோனாவா அல்லது டெங்குவா என்று அறிகுறிகளை வைத்து கண்டறிவது எப்படி?

கொரோனாவா அல்லது டெங்குவா என்று அறிகுறிகளை வைத்து கண்டறிவது எப்படி?

காட்சி படம்

காட்சி படம்

நீங்கள் கோவிட் -19 அல்லது டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா என்பதை கண்டுபிடிப்பது எப்படி ?

  • Share this:
தற்போது பருவமழை காலம் தொடங்கியுள்ளதால் பெரும்பாலானோருக்கு காய்ச்சல், தலைவலி , சளி பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், நீங்கள் டெங்கு பரவலும் தீவிரமடைந்து வருகிறது. இந்தநேரத்தில் நீங்கள் கோவிட் -19 அல்லது டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? எப்படி கண்டறிவது என்பது குறித்து தெரிந்து கொள்வது அவசியம், அது குறித்து இங்கு காண்போம்.

நோய் பரவல் : 

நம் நாட்டில் கோவிட் -19 தொற்றைத் தவிர டெங்கு மற்றும் மர்மமான வைரஸ் காய்ச்சல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டெங்கு கொசு கடிப்பதன் மூலமும், கோவிட் - 19 சுவாச துளி பரவுதல் மூலமும் பரவுகிறது.

அதிகரிக்கும் டெங்கு எண்ணிக்கை : 

டெங்கு ஒவ்வொரு ஆண்டும் நிகழும் பருவகால நோய் ஆகும். இது கோவிட் உடன் ஒன்றுடன் ஒன்று அறிகுறிகள் வேறுபடுவதற்கு மிகவும் தொடர்புடையதாக இருக்கும். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் மிதமான முதல் அதிக காய்ச்சல் என்பது இரண்டு நிகழ்வுகளிலும் தொற்று பரவுவதற்கான முக்கிய அறிகுறியாகக் காணப்படும். இது போன்ற ஒரு முக்கியமான கால கட்டத்தில் நாம் டெங்கு, மலேரியா, கோவிட் - 19 போன்றவற்றைப் பார்க்கும்போது கோவிட் -19 மற்றும் பிற காய்ச்சல் போன்ற வியாதிகளின் வித்தியாசத்தைத் சொல்வது மிக முக்கியம் ஆகும்.

டெங்குவா இல்லை கோவிட்டா?

டெங்கு மற்றும் கோவிட் -19 இரண்டும் வைரஸ் நோய்களாகும். இரண்டு நோய்த்தொற்றுகளுடனும், சில பொதுவான அறிகுறிகள் உடல் வலி, சளி, காய்ச்சல் மற்றும் குமட்டல் ஆகியவை காணப்படுகின்றன.

also read : தினமும் உடற்பயிற்சி செய்பவர்களா நீங்கள்? ட்ரெண்ட் ஆகும் ப்ரோட்டீன் காபி பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்..

என்ன வேறுபாடு? : 

கோவிட் -19 உடன், எல்லா வகையான நோய்த்தொற்றுகளுக்கும் இடையில் காய்ச்சல் பொதுவான அறிகுறியாக (லேசான, மிதமான கடுமையானது) கூறப்படுகிறது. காய்ச்சல் பொதுவாக குறைந்த அல்லது மிதமானதாக இருக்கும் (102 டிகிரி பாரன்ஹீட் அதிகபட்சமாக) என்று கூறப்படுகிறது. பாராசிட்டமால்ஸ் கொடுத்து இதனை கட்டுப்படுத்த முடியும். 7 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால், தொற்று கடுமையானதாகவோ அல்லது அச்சுறுத்தலாகவோ இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஒரு டெங்கு நோய்த்தொற்றுடன், காய்ச்சல் கணிசமாக (103-105 டிகிரி பாரன்ஹீட் வரை) உயரக்கூடும்.இது குணமடைய தீவிர சிகிச்சை தேவைப்படலாம். டெங்கு வைரஸின் தற்போதைய திரிபு, DENV-2 குறிப்பாக தீவிரமான அதிக காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளின் தீவிரத்தன்மையை ஏற்படுத்தும் என்றும் அறியப்படுகிறது. டெங்கு நோய்த்தொற்றுடன் காணப்படும் காய்ச்சல் தொடர்ச்சியாகவும், நீடித்ததாகவும் இருக்கும், அதேசமயம் COVID உடன், அது வந்து போகலாம்.

அறிகுறிகள் :

கோவிட் தொற்று பொதுவாக ஒரே நேரத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகளுடன் இருக்கலாம்.இருமல் மற்றும் காய்ச்சல், இருமல் அல்லது இரைப்பை குடல் அறிகுறிகள் போன்றவைகள் காணப்படலாம். டெங்கு விஷயத்தில் மிகவும் தொற்று ஏற்படுவதற்கான பொதுவான அறிகுறிகள் தலைவலி அல்லது பலவீனம் போன்ற அறிகுறிகளாகும்.

also read : இதய ஆரோக்கியம் முதல் புற்றுநோய் வரை : தினமும் கிவி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

சிகிச்சை :

டெங்கு நோய் ஏற்பட்டால், உடனே அது சம்பந்தமான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.டெங்கு நோயை சரியான நேரத்தில் கண்டறியவிட்டால், அது தீவிரமானதாகவும் ஆபத்தானதாகவும் இருக்கும். எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இது மிகவும் பலவீனத்தை கொடுக்கும்.

தடுக்கும் முறை :

ஒரு நபர் ஒரே நேரத்தில் இரண்டு நோய்த்தொற்றுகளுக்கு ஆளாகும்போது அல்லது பாதிக்கப்படும்போது இணை நோய்த்தொற்று எது என்பது கண்டறிய வேண்டும்.கொசு-இனப்பெருக்கம் மற்றும் டெங்கு நோய்த்தொற்றுகள் இதன் மூலமாகவே இந்நேரங்களில் உடல்நிலை சரியாக இல்லாமல் போகிறது. கோவிட் - 19 க்கு பின்பற்றுவது போல், டெங்குவுக்கும் சரியான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றினால் நோய் தாக்காமல் பார்த்துக்கொள்ள முடியும். சமூக இடைவெளி, கொசுக்கள் உருவாகாமல் பார்த்து கொள்வது, மாஸ்க் அணிந்து வெளியே செல்வது, சுகாதாரமாக இருப்பது போன்றவை பொதுவான பாதுகாப்பு முறைகளாகும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: